மாரி செல்வராஜ் என்னுடைய குரு - துருவ் விக்ரம்

மாரி செல்வராஜ் என்னுடைய குரு - துருவ் விக்ரம்
X
வாழை திரைப்படம் வரும் 23ம் தேதி திரையரங்குகளில் வெளியாகிறது. இதன் டிரெய்லர் வெளியீட்டு விழா நேற்று நடைபெற்றது.

வாழை படத்தின் டிரைலர் வெளியீட்டு விழாவில் பேசிய துருவ் விக்ரம், மாரி செல்வராஜ் தனது குரு என தெரிவித்தார்.

பரியேறும் பெருமாள் படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் இயக்குநராக அறிமுகமானவர் மாரி செல்வராஜ். அடுத்ததாக தனுஷ், உதயநிதி ஸ்டாலின் ஆகியோருடன் பயணித்த அவர் தமிழ் சினிமாவின் முக்கிய இயக்குநர்களில் ஒருவராக மாறியுள்ளார்.

தனுஷ் நடித்த கர்ணன், உதயநிதி நடித்த மாமன்னன் ஆகிய படங்கள் மூலம் நன்கு பிரபலமடைந்துவிட்டார். இந்நிலையில் தனது இயக்கத்தில் அடுத்த படமான வாழை படத்தை இயக்கியுள்ளார். இந்த படம் நாளை மறுநாள் வெளியாக இருக்கிறது. இந்த படத்தின் டிரைலர் வெளியீட்டு விழா நேற்று நடைபெற்றது. இதில் பல நட்சத்திரங்களும் இயக்குநர்களும் கலந்துகொண்டு படத்தைப் பற்றியும் மாரி செல்வராஜ் பற்றியும் பேசினர்.

சந்தோஷ் நாராயணன் இசையில் இந்த படத்தில் கலையரசன் கதாநாயகனாக நடித்துள்ளார். நிகிலா விமல், திவ்யா துரைசாமி, பிரியங்கா உள்ளிட்டவர்கள் நடித்துள்ளனர்.

வாழை திரைப்படம் வரும் 23ம் தேதி திரையரங்குகளில் வெளியாகிறது. இதன் டிரெய்லர் வெளியீட்டு விழா நேற்று நடைபெற்றது. அதில், இயக்குநர்கள் வெற்றிமாறன், பா.இரஞ்சித், மிஷ்கின் மற்றும் நடிகர்கள் கவின், ஹரிஷ் கல்யாண், துருவ் விக்ரம் உள்ளிட்டோரும் கலந்துகொண்டனர்.

இதில் கலந்துகொண்டு பேசிய நடிகர் துருவ் விக்ரம் "வாழை திரைப்படத்தைக் கடந்த ஆண்டே பார்த்துவிட்டேன். அது மாரி செல்வராஜ் அனுபவித்த வாழ்க்கை. இந்த மாதிரியான படங்களையெடுக்க அசாத்திய மனநிலை வேண்டும்.

மீண்டும் மீண்டும் இந்தக் காட்சிகளைத் திரும்பிப் பார்க்கும்போது பழைய நினைவுகள் இயக்குநருக்கு வலித்திருக்கும். இருந்தாலும், அவர் மக்களின் கதைகள் எல்லாரிடமும் சென்றடைய வேண்டும் என்பதற்காகக் கடுமையாக உழைக்கிறார். கடின உழைப்பையும், விடாமுயற்சியையும் என் அப்பாவுக்குப் பின் மாரி சாரிடம்தான் பார்க்கிறேன்.

இவர் எனக்கு அப்பா, அண்ணா, குரு மாதிரி. எங்கோ வாழைத் தோட்டத்தில் வேலை செய்த சிறுவன் சென்னை வந்து தன் உழைப்பால் சினிமாவில் வென்றிருக்கிறார். அவரிடம் நான் நிறைய கற்று வருகிறேன். தங்கலான் படத்திற்காக இயக்குநர் பா. இரஞ்சித் சாருக்கும் நன்றி" எனக் கூறினார்.

இயக்குநர் மாரி செல்வராஜ் - துருவ் விக்ரம் கூட்டணியில் உருவாகும், 'பைசன்' திரைப்படத்தின் படப்பிடிப்பு வேகமாக நடைபெற்று வருவதும் குறிப்பிடத்தக்கது.

Tags

Next Story
Sudden Halt in Pongal Package Distribution at Erode East Ration Shops..!