பிரபல தமிழ் நடிகரின் வீட்டுக்கு 'சீல்': சென்னை மாநகராட்சி அதிரடி

பிரபல தமிழ் நடிகரின் வீட்டுக்கு சீல்:  சென்னை மாநகராட்சி அதிரடி
X

மன்சூர் அலிகான்

தமிழ் சினிமா பிரபல வில்லன் நடிகர் மன்சூர் அலிகானின் வீட்டுக்கு சென்னை மாநகராட்சி அதிகாரிகள் சீல் வைத்துள்ளனர்.

தமிழ் திரையுலகில் வில்லனாகவும், குணச்சித்திர வேடங்களிலும் நடித்து வந்தவர், நடிகர் மன்சூர் அலிகான். நடிப்புடன் கூடவே அவ்வப்போது சர்ச்சையில் சிக்குவதும் இவரது வாடிக்கை. நடிகர் விவேக் மாரடைப்பால் காலமானபோது, கொரோனா தடுப்பூசி போட்டதுதான் காரணம் என்று கூறி, பூகம்பத்தை கிளப்பினார்.

அதேபோல், மன்சூர் அலிகானுக்கு அரசியல் ஆசையும் உண்டு. பல்வேறு கட்சிகளில் இருந்தார். நாம் தமிழர் கட்சியில் இணைந்து கடந்த மக்களவைத் தேர்தலில் திண்டுக்கல் தொகுதியில் போட்டியிட்டுத் தோல்வி அடைந்தார். தமிழ் தேசிய புலிகள் கட்சி என்ற ஒரு கட்சியைத் தொடங்கி, சட்டசபைத் தேர்தலில், கோவை தொண்டாமுத்தூர் தொகுதியில் போட்டியிட்டார். அவருக்கு 41 வாக்குகளே கிடைத்தன.

மன்சூர் அலிகானுக்கு, சென்னை சூளைமேடு பெரியார் பாதை மேற்கில் வீடு உள்ளது. இது, அரசு புறம்போக்கு நிலம் 2,500 சதுர அடியை ஆக்கிரமித்து கட்டியிருப்பதாக புகார் எழுந்தது. ஆனால், மன்சூர் அலிகான் தரப்பிலோ, 18 ஆண்டுகளுக்கு முன் 2400 சதுர அடி நிலத்தை தன்னிடம் விற்று விட்டனர். அதன்பிறகே, அது அரசு புறம்போக்கு நிலம் என்று தெரியவந்ததாக கூறப்பட்டது.மன்

மன்சூர் அலிகான் வீடு

மேலும், 2019 ஆம் ஆண்டில், நிலத்தை தன்னிடம் விற்றவர்கள் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி, மன்சூர் அலிகான் காவல் நிலையத்தில் புகார் அளித்து, விசாரணையும் நடைபெற்று வந்தது. பின்னர் மன்சூர் அலிகான் 2019 ம் ஆண்டு நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கை நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.

இந்நிலையில், சர்ச்சைக்குரிய புறம்போக்கு நிலத்தை மீட்கலாம் என்ற உத்தரவின் பேரில், சென்னை மாநகராட்சி அதிகாரிகள், நடிகர் மன்சூர் அலிகானின் வீட்டை பூட்டி சீல் வைத்தனர்.

Tags

Next Story
ai in future agriculture