இயக்குநர் வெங்கட் பிரபு மன்மத லீலை படத்தினை இயக்கி முடிச்சிருக்கார்

இயக்குநர் வெங்கட் பிரபு மன்மத லீலை படத்தினை இயக்கி முடிச்சிருக்கார்
X
மன்மத லீலை படத்திற்கு பிரேம்ஜி அமரன் இசையில் வெங்கட் பிரபுவின் உதவி இயக்குநர் மணிவண்ணன் அடல்ஸ் ஒன்லி கதையை எழுதியுள்ளார்

'மாநாடு' வெற்றிக்குப்பிறகு இயக்குநர் வெங்கட் பிரபு 'மன்மத லீலை' படத்தினை இயக்கி முடிச்சிருக்கார்.

அசோக் செல்வன் நாயகனாக வரும் இப்படத்திற்கு பிரேம்ஜி அமரன் இசையாம்.வெங்கட் பிரபுவின் உதவி இயக்குநர் மணிவண்ணன் இந்த அடல்ஸ் ஒன்லி கதையை எழுதியுள்ளார்.

ராக்ஃபோர்டு எண்டெர்டைன்மெண்ட் சார்பில் டி முருகானந்தம் தயாரிச்சிருக்கார். வெங்கட் பிரபுவின் 10-வது படமாக உருவாகியுள்ள 'மன்மத லீலை' நாளை- ஏப்ரல் 1 ஆம் தேதி தியேட்டர்களில் வெளியாக ஆயத்தமா இருக்குது.

இந்த நிலையில், 'இரண்டாம் குத்து' பட வினியோக உரிமைக்கான தொகையில் ரூ. 2 கோடி பாக்கிவைத்துவிட்டு 'மன்மத லீலை' படத்தை தயாரித்துள்ள ராக்ஃபோர்ட் எண்டர்டெயின்மெண்ட்க்கு தடை விதிக்கக்கோரி ப்ளையிங் ஹார்ஸ் பிச்சர்ஸ் நிறுவனம் வழக்கு தொடர்ந்து இருந்தாய்ங்க.இந்த வழக்கில், 'மன்மதலீலை' படத்தை நிபந்தனையுடன் வெளியிட சென்னை உயர்நீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது.

ரூ. 30 லட்சத்தை 4 வாரங்களில் வங்கியில் செலுத்த வேண்டுமெனவும் நிபந்தனை விதித்தார் நீதிபதி எம்.சுந்தர். மேலும், 'குருதி ஆட்டம் ' மற்றும் 'மன்மதலீலை' படங்களின் விவகாரங்களை சமரச தீர்வு மையத்திற்கு அனுப்பி உத்தரவிட்டார். அதே சமயம் இந்த டைட்டிலை வைக்க எதிர்ப்பு தெரிவித்துள்ள பாலச்சந்தர் டீம் போட்ட வழக்கில் வெங்கட் பிரபு இன்று ஆஜராக கோர்ட் ஆர்டர் போட்டிருக்குது.

இன்னிக்கு ஏதோ மெடிக்கல் ரீசன் சொல்லி ஆஜராகாம இருந்தால் நாளைக்கு படமும் ரிலீஸாயிடும்முன்னு வெ. பி டீம் பிளானாம்

Next Story
ai solutions for small business