ஆஸ்கர் விருது பரிந்துரை பட்டியலில் யோகிபாபு நடித்த 'மண்டேலா'

ஆஸ்கர் விருது பரிந்துரை பட்டியலில்  யோகிபாபு நடித்த மண்டேலா
X
திரைத்துறையின் உயரிய விருதான, ஆஸ்கருக்கு, இந்தியப் பரிந்துரை பட்டியலில், யோகி பாபு நடித்த ‘மண்டேலா’ படம் இடம் பிடித்துள்ளது.

இயக்குனர் மடோன் அஷ்வின் இயக்கத்தில், யோகி பாபு, ஷீலா உள்ளிட்டவர்கள் நடித்த படம், 'மண்டேலா'. இது, தொலைக்காட்சியில் நேரடியாக வெளியாகி, பின்னர் ஓடிடி தளத்தில் வெளியாகி வரவேற்பை பெற்றது.

படத்தின் கதை, அரசியல் பின்னணி உடையது. வாக்குக்கு பணம் கொடுப்பதையும், அதனால் ஏற்படும் விளைவுகளையும் மையக்கருவாக கொண்டு படம் பிடிக்கப்பட்டு இருந்தது. இப்படம், இந்தியாவில் இருந்து ஆஸ்கர் விருதுக்கு அனுப்புவதற்கு முன்பு நடத்தப்படும் தேர்வு பட்டியலில் இடம் பிடித்துத்துள்ளது.

வரும் 2022ம் ஆண்டுக்கான ஆஸ்கர் விருது வழங்கும் விழா, 2022மார்ச் 27ல் நடக்கிறது. சிறந்த வெளிநாட்டுத் திரைப்படத்துக்கான பிரிவில் ஆண்டுதோறும் இந்தியாவில் இருந்து ஒரு படம் அனுப்பி வைக்கப்படும். ஆஸ்கர் போட்டியில் கலந்து கொள்ளத் தமிழ், மலையாளம், இந்தி உள்ளிட்ட பல மொழிகளிலிருந்து 14 படங்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளன. இதில், தமிழில் யோகி பாபு நடிப்பில் மண்டேலா படமும் தேர்வாகி உள்ளது.

மேலும், இந்தியில் வித்யா பாலன் நடித்த ஷெர்னி, விக்கி கவுஷல் நடித்த சர்தார் உதம், மலையாளத்தில் நாயாட்டு உள்ளிட்ட படங்களும் தேர்வாகி உள்ளன. இயக்குநர் ஷாஜி என். கருண் தலைமையிலான 15 பேர் கொண்ட குழு, இப்படங்களை பார்த்து, அதில் இிருந்து ஒரு படத்தைத் தேர்வு செய்து இந்தியாவின் ஆஸ்கர் பரிந்துரையாக அனுப்பும். இதனால், மண்டேலா படக்குழு உற்சாகத்தில் உள்ளது.

Tags

Next Story
அந்தியூரில் திட்டப்பணிகளை காணொலியில் திறந்த முதல்வர்..!