'கேப்டன் மில்லர்' படத்தில் இணையும் மாநகரம் பட கதாநாயகன்

கேப்டன் மில்லர் படத்தில் இணையும் மாநகரம் பட கதாநாயகன்
X

பைல் படம்.

Dhanush lastest news-தனுஷ் நடிக்கும் 'கேப்டன் மில்லர்' படத்தில் மாநகரம் பட கதாநாயகன் சந்தீப் கிஷன் நடிக்கவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

Dhanush lastest news-அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில் தனுஷ் நடிக்கும் 'கேப்டன் மில்லர்' படத்தில் மாநகரம் பட கதாநாயகன் சந்தீப் கிஷன் நடிக்கவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

தனுஷ் நடிப்பில் சமீபத்தில் வெளியான 'திருச்சிற்றம்பலம்' படம் ரசிகர்களிடம் வரவேற்பை பெற்று திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது. இப்படத்தை தொடர்ந்து தனுஷ் நடிப்பில் 'நானே வருவேன்' மற்றும் 'வாத்தி' போன்ற படங்கள் வெளியாகவுள்ளது. 'நானே வருவேன்' படத்தின் டீசர் வெளியாகி ரசிகர்களை பெரிதும் கவரும் வகையில் அமைந்திருக்கிறது. இந்த படங்களை தொடர்ந்து நடிகர் தனுஷ் ராக்கி படத்தை இயக்கிய அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில் உருவாகும் 'கேப்டன் மில்லர்' படத்தில் நடிக்கிறார்.

Dhanush lastest news-அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில் வெளியான முதல் படமான 'ராக்கி' ரசிகர்களிடம் நல்லதொரு வரவேற்பை பெற்றிருந்தது, அதன்பின்னர் அவரது இயக்கத்தில் அடுத்ததாக செல்வராகவன் மற்றும் கீர்த்தி சுரேஷ் நடிப்பில் வெளியான 'சாணி காயிதம்' படமும் நல்ல வரவேற்பை பெற்றிருந்த நிலையில் தற்போது தனது மூன்றாவது படத்தில் தனுஷை வைத்து இயக்குகிறார்.

Tags

Next Story
கருணை இல்ல மேம்பாட்டுப் பணி..! பண்ணாரி அம்மன் கோயிலில் முதல்வா் காணொலியில் தொடக்க விழா..!