சிம்பு ரசிகர்களை ஏமாற்றிய 'மாநாடு' படக்குழு: காரணம் 'அண்ணாத்த'?

சிம்பு ரசிகர்களை ஏமாற்றிய மாநாடு படக்குழு: காரணம்  அண்ணாத்த?
X

சிம்பு

தீபாவளிக்கு சிம்புவின் 'மாநாடு' திரைப்படம் ரிலீஸ் ஆகாது என்ற அறிவிப்பால், சிம்பு ரசிகர்கள் ஏமாற்றமடைந்துள்ளனர்.

வழக்கமாக, சிம்புவுக்கும், அவர் நடிக்கும் படங்களுக்கும் ஏதாவது வம்பு வருவது வழக்கம். பல பிரச்சனைகள், பல பஞ்சாயத்துகளை கடந்துதான், சிம்புவின் படங்கள் வருவதுண்டு. அதேபோல், அவர் நடித்துள்ள 'மாநாடு' திரைப்படமும், இப்போது சங்கடத்தில் உள்ளது. வெங்கட் பிரபு இயக்கத்தில் சிம்பு நடித்துள்ள 'மாநாடு' திரைப்படம் வருகிற நவம்பர் 4-ந் தேதி தீபாவளி பண்டிகையன்று ரிலீசாகும் என அறிவிக்கப்பட்டு இருந்தது.

ஆனால், திடீரென, தீபாவளி ரேஸில் இருந்து, இப்படம் விலகியுள்ளது. இது குறித்து, அந்த படத்தின் தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி வெளியிட்டுள்ள அறிவிப்பில், 'மாநாடு' முழுவீச்சில் தயார் செய்து தீபாவளி வெளியீடாக வந்துவிட அனைத்து ஏற்பாடுகளும் தயார். படம் நன்றாக திருப்தியாக வந்துள்ளது. அதேநேரம், என்னை நம்பி படம் வியாபார ஓப்பந்தம் செய்துகொண்டவர்கள் பாதிக்கப்படக்கூடாது.

வினியோகஸ்தர்களும், திரையரங்க வெளியீட்டிற்காக பணம் போட்டவர்களும் என் பட வெளியீட்டின் மூலம் லாபம் காண வேண்டும். இழப்பை சந்திக்கக்கூடாது. சில காரணங்களுக்காக, ஏன் என் படமும், அதன் வெற்றியும் பலியாக வேண்டும்? எனவே, மாநாடு படம், தீபாவளிக்கு வெளிவராமல் நவம்பர் 25-ம் தேதி படம் வெளியாகும் என்று கூறியுள்ளார்.

வரும் 4ம் தேதி தீபாவளியன்று, சன் பிக்சர்ஸ் தயாரிப்பில், ரஜினியின் 'அண்ணாத்த' படம் வெளியாகிறது. சூப்பர் ஸ்டாரை வைத்து, பெரு நிறுவனம் வெளியிடும் படம் என்பதால், அதனுடன் போட்டியிட வேண்டாமென்று சிம்பு படம், போட்டியில் இருந்து விலகியதாக கூறப்படுகிறது. இது, அவரது ரசிகர்களை சோகத்தில் ஆழ்த்தியிருக்கிறது.

Tags

Next Story
கணித மேதை ராமானுஜன் பெயரில் பல்கலைக்கழகம் அமைக்க வேண்டும் - வரி செலுத்துவோர் மக்கள் நல்வாழ்வு சங்கம்  வலியுறுத்தல்!