மலையாள சூப்பர் ஸ்டார் நடிகர் மம்முட்டியின் தாயார் மறைவு

தாயாருடன் மம்முட்டி (பைல் படம்).
Mammootty's mother passes away-மலையாள சினிமாவில் முன்னணி நடிகராக இருப்பவர் மம்முட்டி. தமிழ், தெலுங்கு, கன்னடம், ஹிந்தி என தென்னிந்திய மொழி படங்கள் அனைத்திலும் சுமார் 300 திரைப்படங்களுக்கு மேல் நடித்து அனைவரின் மனம் கவர்ந்த நாயகனாக இன்றும் வளம் வருபவர். மலையாளத்தில் மோகன்லால், மம்முட்டி ஆகிய இருவரின் படங்கள் தான் பாக்ஸ் ஆபிஸில் அங்கு அதிகம் கலெக்ஷன் பெறும் படங்கள். இந்திய திரைப்படத் துறையில் முதன்மையான விருதாக கருதப்படும் தேசிய திரைப்பட விருதை மூன்று முறை பெற்றுள்ளார். மத்திய அரசின் பத்ம ஸ்ரீ விருதையும் பெற்றுள்ளார்.
தமிழில் பாலசந்தரின் அழகன், மணிரத்னத்தின் இயக்கத்தில், ரஜினிகாந்துடன் இணைந்து நடித்த தளபதி, ஆனந்தம், கண்டுகொண்டேன் கண்டுகொண்டேன் போன்ற படங்களில் மம்முட்டியின் நடிப்பு ரசிகர்கள் மனதில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்திய படங்களாக அமைந்தன. அதேபோல் இவரது மகன் துல்கர் சல்மானும் சினிமாவில் அறிமுகமாகி நல்ல ஹிட் படங்கள் கொடுத்து வருகிறார். தமிழில் இவர் நடித்த வாயை மூடி பேசவும், ஓகே கண்மனி, கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால் போன்ற படங்கள் தமிழ் ரசிகர்கள் இடத்தில் நல்ல வரப்பேற்பை பெற்ற படங்களாக மட்டுமின்றி, தந்தையை போலவே, துல்கர் சல்மானும் ரசிகர்களின் மனதில் நீங்கா இடம் பிடித்து கொண்டாடும் நபராகவும் மாறிப்போனார்.
தற்போது மம்முட்டி – துல்கர் சல்மான் குடும்பத்தில் ஒரு சோகமான நிகழ்வு நடந்து நடந்துள்ளது பலரையும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. அதாவது 93 வயதான நடிகர் மம்முட்டியின் தாயார் பாத்திமா இஸ்மாயில் உயிரிழந்துள்ளார். வயது முதிர்வு காரணமாக, கொச்சியில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த அவர் இன்று காலை உயிரிழந்தார். இன்று மாலை வைக்கம் செம்பை பகுதியில் உள்ள முஸ்லிம் ஜமாத் பள்ளிவாசலில் அடக்கம் செய்ய உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
ரமலான் பெருநாள் வரும் மாதமே, இஸ்லாத்தில் சிறந்த மாதமாக கருதப்படுகிறது. இந்த மாதம் இறைவனை நெருங்கும் மாதமாகவும், சொர்கவாசல்கள் திறக்கப்பட்டு, நரக வாசல்கள் மூடப்படும் மாதமாகவும், நன்மைகள் அதிகம் கிடைக்கும் மாதமாகவும் இஸ்லாமியர்களால் கருதப்படுகிறது. அதனால்தான் இஸ்லாமியர்கள் இந்த மாதம் முழுவதும் நோன்பிருந்து ரமலான் பண்டிகையினை கொண்டாடுகின்றனர். அப்படிப்பட்ட இந்த நல்ல நாளில் மம்முட்டியின் தாயார் இருந்திருப்பது குறிப்பிடத்தக்கது.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
-
Menu