'மாமன்னன்' ஷூட்டிங் ஸ்பாட் கொண்டாட்டம்… உதயநிதி ஸ்டாலின் ஸ்வீட் ட்வீட்..!

மாமன்னன் ஷூட்டிங் ஸ்பாட் கொண்டாட்டம்…  உதயநிதி ஸ்டாலின் ஸ்வீட் ட்வீட்..!
X
Udhayanidhi Stalin Recent Movie -மாரிசெல்வராஜ் இயக்கும் 'மாமன்னன்' படத்தின் இரண்டாம் கட்டப் படப்பிடிப்பு நிறைவுக் கொண்டாட்டம். உதயநிதி ஸ்டாலின் ட்வீட்..!

Udhayanidhi Stalin Recent Movie - இயக்குநர் மாரிசெல்வராஜ், 'பரியேறும் பெருமாள்' மற்றும் 'கர்ணன்' வெற்றிக்குப் பிறகு, இயக்கி வரும் 'மாமன்னன்' இரண்டாம் கட்டப் படப்பிடிப்பு நிறைவடைந்ததைப் படக்குழுவினர் ஸ்வீட் ட்ரீட்டாக கேக்வெட்டி தித்திப்புத் திருநாளாகக் கொண்டாடி மகிழ்ந்திருக்கின்றனர்.

அந்தக் கொண்டாட்டப் படங்களை அப்படியே, தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டு ஓர் பதிவையும் அதிலிட்டு ஸ்வீட்.. ட்வீட்.. செய்துள்ளார் 'மாமன்னன்' நாயகன் உதயநிதி ஸ்டாலின். 'மாமன்ன'னின் முதல் கட்டப் படப்பிடிப்பு ஏற்காட்டில் மார்ச் மாதம் தொடங்கி ஏப்ரல் மாதம் நிறைவடைந்தது. இந்தநிலையில், சேலத்தில் நடந்துவந்த இரண்டாம் கட்டப் படப்பிடிப்பு முடிந்துள்ளது.

கேக் வெட்டிக்கொண்டாடிய அந்த நிகழ்வை, இப்படத்தின் நடிகரும் தயாரிப்பாளருமான உதயநிதி ஸ்டாலின் செய்துள்ள ட்வீட்டில் "மாமன்னன் இரண்டாம் கட்ட படப்பிடிப்பு முடிந்தது. இறுதிக்கட்ட படப்பிடிப்பு கீர்த்தி சுரேஷ் மேடமும், ஃபஹத் பாசில் சாரும் தேதி கொடுத்தால்தான் நடக்கும். அதைப் பற்றி கொஞ்சம் பரிசீலனை செய்யுங்கள். உங்களுக்கு கொடுத்த தொல்லைகளுக்கும், ரீ டேக் வாங்கிய காட்சிகளுக்கும் இயக்குநர் மாரி செல்வராஜ் மன்னிக்கணும். மாமன்னன் படக்குழுவினர் அனைவருக்கும் நன்றி." என குறிப்பிட்டு கேக் வெட்டி கொண்டாடிய புகைப்படங்களை ஸ்வீட் ட்ரீட்டாக ட்வீட் செய்துள்ளார்.

அடுத்த முக்கியமான செய்திகளை தெரிந்துகொள்ள: Click Here-1, Click Here-2

Tags

Next Story