மாமனிதன் இசைவெளியீட்டு விழா இன்னிக்கு ஈவ்னிங் நடக்கப் போகுது

மாமனிதன் இசைவெளியீட்டு விழா இன்னிக்கு ஈவ்னிங் நடக்கப் போகுது
X
டைரக்டர் சீனு ராமசாமி, நடிகர் விஜய் சேதுபதியுடன் 4-வது முறையாக இணைஞ்சு உருவாக்கி இருக்கும் படம் மாமனிதன்.

மாமனிதன் இசைவெளியீட்டு விழா இன்னிக்கு ஈவ்னிங் நடக்கப் போகுது

தென்மேற்கு பருவக்காற்று, தர்மதுரை, இடம் பொருள் ஏவல் போன்ற படங்களை டைரக்ட் செஞ்ச சீனு ராமசாமி, நடிகர் விஜய் சேதுபதியுடன் 4-வது முறையாக இணைஞ்சு உருவாக்கி இருக்கும் படம் மாமனிதன். யுவன் சங்கர் ராஜா புரொடியூஸ் செஞ்சிருக்கும் இப்படத்தில் விஜய் சேதுபதிக்கு ஜோடியாக நடிகை காயத்ரி நடிச்சிருக்கார். மேலும் இளையராஜாவும், யுவன் சங்கர் ராஜாவும் இணைந்து இப்படத்திற்கு இசையமைச்சு இருக்கார்.

இந்த மாமனிதன் 2019-ம் ஆண்டே எடுத்து முடிக்கப்பட்ட நிலையில் கொரோனா அச்சுறுத்தல் மற்றும் சில பிரச்சனைகள் காரணமாக கடந்த 3 ஆண்டுகளாக ரிலீசாகாமல் இருந்தது. இதையடுத்து கடந்த சில வாரங்களுக்கு முன்னர் இப்படத்தின் வெளியீட்டு உரிமையை கைப்பற்றிய ஆர்.கே.சுரேஷ் படத்தின் ஆடியோ பங்க்‌ஷ்னை இன்னிக்கு புதுச்சேரியில் நடத்துகிறார்.. இதையொட்டி மேற்படி டீம் சார்பில் 'தங்கள் மேலான நிறுவனம் சார்பில் புதுச்சேரி செய்தியாளர் மற்றும் ஒளிப்பதிவு குழுவினரை நிகழ்ச்சிக்கு அனுப்பி வைக்குமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

இசை வெளியீட்டிற்கு பின்னர் சென்னையில் பத்திரிகையாளர் சந்திப்பும் படத்தின் முன்னோட்டக் காட்சியும் (பிரிவியூ) நடைபெறவுள்ளன.

Next Story