செதுக்கி வச்ச சிலை...! மாளவிகா மோகனனின் லேட்டஸ்ட் போட்டோஸ் வைரல்...!
ரஜினிகாந்தின் 'பேட்ட' படத்தில் நடித்து, தமிழ் சினிமா உலகிற்குள் அழகான புயலாக நுழைந்தவர் மாளவிகா மோகனன். கார்த்திக் சுப்பராஜின் இயக்கத்தில் வண்ண உலகில் இவர் அறிமுகமான அந்த தருணத்தை ரசிகர்கள் மறக்க முடியுமா? அந்த படத்தில் வயதான தோற்றத்தில் சில காட்சிகளிலும் சசிக்குமாருக்கு ஜோடியாக இளம் கதாபாத்திரத்திலும் நடித்திருப்பார் மாளவிகா. இருந்தாலும் அந்த படத்தில் அவரது கதாபாத்திரம் சொல்லிக் கொள்ளும் அளவுக்கு எந்த அழுத்தத்தையும் தரவில்லை.
அதேநேரம் அந்த படம் ரஜினிகாந்த் படம் என்பதால் மொத்த பார்வையையும் அவரே தட்டிச் சென்றுவிட்டார். அதேநேரம் மாளவிகா மோகனன் மிகப் பெரிய அளவில் பேசப்பட்டது விஜய்யுடன் அவர் நடித்த மாஸ்டர் திரைப்படத்தில்தான். நடிப்பைத் தாண்டி அவரது முக பாவனைகள் கடுமையாக கிண்டல் செய்யப்பட்டன. சினிமாவில் ஜோக்கராக இருந்தாலும், சோசியல் மீடியாவைப் பொறுத்தவரையில் அவருக்கு லட்சக்கணக்கில் ரசிகர்கள் இருக்கிறார்கள்.
மலையாள சினிமாவின் மகள்
மலையாள மண்ணை பூர்வீகமாகக் கொண்ட மாளவிகா, 'பட்டம்போலே' என்ற மலையாளப் படத்தில் கதாநாயகியாக அறிமுகமானார். அந்த முகம், அந்த கண்கள்… ரசிகர்களைக் கட்டிப்போட்டுவிட்டன. சமூக ஊடகங்களில் இவருக்கு மில்லியன் கணக்கில் ரசிகர்கள் உருவானார்கள். மலையாள சினிமா உலகில் இவர் நடித்த போது கூட இவருக்கு இத்தனை ஆயிரம் ரசிகர்கள் இல்லை. சமூக வலைத்தளங்களில் இளைஞர்களைக் கவர்ந்திழுக்கும் படங்கள் மூலமே இவருக்கு லட்சம் ரசிகர்கள் உருவானார்கள் என்று சொல்லலாம்.
தொடரும் மாயாஜாலம்
படங்களோடு மட்டுமல்ல, சமூக ஊடகங்களிலும் மாளவிகா மோகனன் சுறுசுறுப்பாக இருக்கிறார். அன்றாட வாழ்வின் தருணங்கள் முதல் கவர்ச்சிகரமான புகைப்படங்கள் வரை, ரசிகர்களோடு பகிர்ந்து கொள்கிறார். இவரது ஒவ்வொரு பதிவும் ஆயிரக்கணக்கான லைக்குகளையும், ரசிகர்களின் வார்த்தை ஜாலங்களையும் அள்ளிக் குவிக்கின்றன.
மாளவிகா மோகனன் - தமிழ் சினிமாவின் புதிய நட்சத்திரம்
தமிழ் ரசிகர்களின் எதிர்பார்ப்பை அதிகரிக்கும் வகையில் 'தங்கலான்' படத்தில் நடிகர் விக்ரமுக்கு ஜோடியாக நடிக்கிறார் மாளவிகா மோகனன். இந்தப் படத்தின் எதிர்பார்ப்பு மிகுதியாக உள்ள நிலையில், அவரது பிற படங்களுக்கான ஆவலையும் இப்போதே துளிர்க்கச் செய்கிறது.
இந்த படத்தில் விக்ரமுக்கு ஜோடியாக நடிக்கும் மாளவிகா பல்வேறு தற்காப்பு கலைகளையும் கற்றுக் கொண்டுள்ளாராம். படத்தில் இடம்பெற்றுள்ள காட்சிகளுக்கு இது அவசியமானதாக கூறப்படுகிறது. மற்ற படங்களைப் போல இல்லாமல் இந்த படத்தில் தனது கதாபாத்திரத்துக்கு வலுவான அழுத்தம் நிறைந்த கதை இருக்கிறது என்பதால் தமிழில் முன்னணி நாயகியாக ஆகிவிடலாம் என நம்பிக்கையுடன் இருக்கிறாராம்.
வசீகரப் பார்வையின் வசியம்
மாளவிகா மோகனனின் அழகைப் பற்றி பேசுகையில், அவரது கண்களைப் புகழாமல் கடந்து சென்றுவிட முடியாது. பார்ப்பவரை ஈர்க்கும் காந்த சக்தி கொண்ட அந்தக் கண்களில் ரசிகர்கள் தொலைந்து போவது ஆச்சரியமில்லை.
எதிர்காலத்தின் இளவரசி
திறமை, அழகு, துடிப்பு – இவையெல்லாம் ஒருங்கே அமைந்த மாளவிகா மோகனன் தமிழ் சினிமாவில் சக்கை போடு போடுவார் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை. இன்னும் பல படங்கள், பல விருதுகள் இவரைத் தேடி வரக் காத்திருக்கின்றன.
எதிர்நோக்கும் ரசிகர்கள்
கவர்ச்சியான நடிப்பு, அழகிய தோற்றம் ஆகியவற்றைத் தாண்டி, தனக்கென ஒரு தனித்துவத்தையும் மாளவிகா மோகனன் ரசிகர்களிடம் உருவாக்கிவிட்டார். வரவிருக்கும் அவரது ஒவ்வொரு படத்துக்கும் ரசிகர்களின் எதிர்பார்ப்பு எகிறிக் கொண்டே போகிறது.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu