பிரபல தயாரிப்பாளரை மணந்த சீரியல் நடிகை மகாலட்சுமி

பிரபல தயாரிப்பாளரை மணந்த சீரியல் நடிகை மகாலட்சுமி
X

மகாலட்சுமி- தயாரிப்பாளர் ரவீந்தர் சந்திர சேகர்.

Mahalakshmi Actress Marriage - திருப்பதியில் சீரியல் நடிகை மகாலட்சுமி பிரபல தயாரிப்பாளரை மறுமணம் செய்துகொண்டார்.

Mahalakshmi Actress Marriage - சின்னத்திரையில் மிகவும் பிரபலமான நடிகையாக திகழ்ந்தவர் மகாலட்சுமி. இவர் சன் மியூஸிக் தொலைக்காட்சியில் தொகுப்பாளினியாக இருந்தவர்.

சில ஆண்டுகளுக்கு முன் தேவதையை கண்டேன் தொடரின் கதாநாயகன் ஈஸ்வருடன் தொடர்பு இருப்பதாக, அவரது மனைவி போலீசில் புகார் அளித்தது பரபரப்பாக பேசப்பட்டது.

நடிகை மகாலட்சுமி அனில் என்பவரை திருமணம் செய்து, ஒரு ஆண் குழந்தையும் உள்ளது. பின்னர் அவர்கள் இருவரும் கருத்து வேறுபாடுகளால் பிரிந்தனர்.

actress mahalakshmi marriage

இதனைத்தொடர்ந்து சீரியல்களில் தொடர்ந்து நடித்து வந்தார் மகாலட்சுமி. தற்போது விடியும் வரை காத்திரு என்ற படத்திலும் நடித்து வருகிறார். இந்த படத்தை லிப்ரா புரொடக்‌ஷன்ஸ் சார்பில் ரவீந்தர் சந்திரசேகர் தயாரிக்கிறார்.

இந்த நிலையில் தயாரிப்பாளர் ரவீந்தர் சந்திர சேகருக்கும், நடிகை மகாலட்சுமிக்கும் திருப்பதியில் திருமணம் நடைபெற்றுள்ளது. ரவீந்தர் சந்திரசேகருக்கும் இது 2வது திருமணம். அவர்கள் இருவருக்கும் திருமண வாழ்த்துகளை தெரிவித்து பலரும் பதிவிட்டு வருகின்றனர்.


அடுத்த முக்கியமான செய்திகளை தெரிந்துகொள்ள: Click Here-1, Click Here-2

Tags

Next Story
கொமதேக தலைவரின் மாபெரும் அறிவிப்பு: திமுக கூட்டணியில் எந்த பிரச்சனையும் இல்லை!