சிவராத்திரி பூஜையில் கலந்து கொள்ளாதது வருத்தமளிக்கிறது: கங்கனா

கங்கனா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ள போட்டோ.
இதுகுறித்து நடிகை கங்கனா ரனாவத் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் கூறியிருப்பதாவது:
கடந்த ஆண்டு இந்நேரம் ஈஷா யோகா மையத்தில் ஆதியோகி முன்பு சிவராத்திரியை கொண்டாடிக் கொண்டு இருந்தேன். அனால் வேலைப்பளு காரணமாக இந்த ஆண்டு சிவராத்திரி பூஜையில் கலந்து கொள்ள முடியாதது வருத்தமளிக்கிறது. இந்த ஆண்டு ஆசிரமத்தில் சிவராத்திரி கொண்டாடுவதை தவறவிட்டுவிட்டேன்.
அனைவருக்கும் சிவராத்திரி பூஜையில் இறைவனின் அருள் கிடைக்க பிராத்திக்கிறேன் என கங்கனா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் கூறியுள்ளார். மேலும் கடந்த ஆண்டு சிவராத்திரி கொண்டாட்டத்தில் ஆதியோகி சிலை முன்பு எடுத்த போட்டோவையும் இன்ஸ்டாகிராமில் பகிர்ந்துள்ளார். தற்போது இயக்குனர் வாசு தயாரிப்பில் சந்திரமுகி 2 படத்தின் இரண்டாவது ஷூட்டிங் ஷெட்யூலுக்காக கங்கனா ஹைதராபாத்தில் இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
-
Menu