ஹன்சிகாவின் பொன்விழா படமாக 'மஹா'.

ஹன்சிகாவின் பொன்விழா படமாக மஹா.
X

மஹா படத்தில் நடிகை ஹன்ஷிகா மற்றும் நடிகர் சிம்பு தோன்றும் காட்சி.

நடிகை ஹன்சிகா நாயகியாக நடித்துள்ள அவரது 50வது படம் 'மஹா'. திரையுலகில் இது அவருக்கு பொன்விழா படமாகும்.

நடிகை ஹன்சிகா மோத்வானி முதன்மை பாத்திரத்தில் நடிக்க, இயக்குநர் U.R.ஜமீல் இயக்கத்தில் உருவாகியுள்ள படம், 'மஹா'. இது ஹன்சிகாவின் பொன்விழாப் படமாகும். ஆம், திரையுலகப் பயணத்தில், 'மஹா' அவருக்கு 50வது திரைப்படமாகும்.

அண்மையில், இப்படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னை அண்ணாநகர் VR மாலில் நடைபெற்றது. விழாவில், பிரபல இயக்குநர்களும் நடிகர்களும் ஹன்சிகாவின் நெருக்கமான நண்பர்களும் பங்கேற்று சிறப்பித்தனர்.

விழாவில் பேசிய இயக்குநரும் நடிகருமான தம்பிராமையா, "இந்தப்படத்தில் சிலம்பரசன் கௌரவத் தோற்றத்தில் நடித்திருப்பதாகக் கூறினார்கள். ஆனால், அவர் நாற்பது நிமிடங்கள் இந்தப் படத்தில் வருகிறார். தம்பி சூர்யா மூன்று நிமிடங்கள் மட்டுமே வந்த 'விக்ரம்' படம் பெரிய வெற்றி எனும்போது, தம்பி சிலம்பரசன் இப்படத்தில் நாற்பது நிமிடங்கள் வருகிறார் என்றால், இப்படம் மிகப்பெரிய வெற்றி பெறும் என்பதற்கு இதுவே சரியான சான்றாகும்" என்று கூறி வாழ்த்தினார்.

படத்தின் நாயகியான நடிகை ஹன்சிகா மோத்வானி பேசும்போது, "என் சினிமா கேரியரில், 'மஹா' எனது 50வது படமாக அமைந்ததில், நான் மிகவும் மகிழ்ச்சியடைகிறேன். படத்தின் நடிகர்களும், தொழில்நுட்ப கலைஞர்களும் மிகவும் அர்ப்பணிப்புடன் உழைத்து, படத்தை மெருகேற்றியுள்ளனர். படம் மிக சிறப்பாக வந்துள்ளது. இப்படத்திற்கு நண்பர் சிம்பு மிகப்பெரிய சப்போர்ட்டாக இருந்தார் என்பது படத்துக்கு மேலும் கூடுதல் பலமாகும். அவருக்கு இந்தநேரத்தில் எனது மனப்பூர்வமான நன்றியைத் தெரிவித்துக்கொள்கிறேன். படத்திற்கு உங்கள் எல்லோருடைய ஆதரவும் தேவை. நிச்சயம் நீங்கள் சப்போர்ட் பண்ணுவீர்கள்" என்று பால் வெள்ளைச் சிரிப்புடன் பளீரெனப் பேசி முடித்தார்.

இப்படத்தில் கௌரவத் தோற்றத்தில் நடிகர் சிலம்பரசனும் படத்தின் திருப்புமுனை கேரக்டரில் நடிகர் ஶ்ரீகாந்த்தும் நடித்திருப்பது படத்துக்கு மிகப்பெரிய பலம் என்று படத்தின் தயாரிப்பாளர்களான மதியழகன் மற்றும் தத்தோ அப்துல் மாலிக், முகம்மது ஜுபையர் மற்றும் ராசிக் அஹமத் ஆகியோர் ஒருமித்த குரலில்கூறினர்.

Tags

Next Story
கொடுமுடியில் விவசாயிகள் போராட்டம் - அதிகாரிகள் செயலாற்றாமல் இருந்ததா