மாவீரன் படம் தள்ளிப்போகுமா? முன்னாடியே வருமா? இக்கட்டான சூழலில் சிவகார்த்திகேயன்!

மாவீரன் படம் தள்ளிப்போகுமா? முன்னாடியே வருமா? இக்கட்டான சூழலில் சிவகார்த்திகேயன்!
X
ஆகஸ்ட் 11ம் தேதி படத்தை வெளியிடுவதாக அறிவித்துள்ள நிலையில், இந்த படம் 1 வாரம் முன்னதாகவே ரிலீஸ் ஆகலாம் என்று தகவல் தெரியவந்துள்ளது. அதன்படி ஆகஸ்ட் 3ம் தேதி இந்த படத்தை திரையிட வாய்ப்பிருப்பதாக கூறப்படுகிறது. ஏனெனில்

சிவகார்த்திகேயன் நடிப்பில் மண்டேலா இயக்குநர் மடோன் அஸ்வின் இயக்கி வரும் படமான மாவீரன் படப்பிடிப்பு முடிந்து போஸ்ட் புரடொக்ஷன் பணிகள் நடைபெற்று வருகின்றன. இந்த படம் வரும் ஆகஸ்ட் மாதம் 11ம் தேதி வெளியாகவுள்ளது என அறிவிப்பு வெளியிட்டது மாவீரன் படக்குழு. ஆனால் இப்போது இந்த தேதியில் படத்தை ரிலீஸ் செய்ய வாய்ப்பில்லை எனத் தகவல் வருகிறது. | Maaveeran release date


மடோன் அஸ்வினுக்கும் சிவகார்த்திகேயனுக்கும் இடையே சில சில பிரச்னைகள் ஏற்பட்டது எனவும் அதற்கு காரணம் எடிட்டர் ஃபிலோமின் தான் எனவும் தகவல்கள் பரவி வருகின்றன. இவர்கள் மூவருக்கும் இடையில் இருக்கும் மிஸ் கம்யூனிகேசன்தான் பிரச்னை எனவும் கூறப்பட்டது. இதனையடுத்து ஒரு வழியாக படப்பிடிப்பை முடித்திருக்கின்றனர். இந்நிலையில் படத்தை தமிழ், தெலுங்கு என இருமொழிகளிலும் வெளியிடத் திட்டமிட்டிருக்கின்றனர். | Maaveeran movie release date 2023

ஆகஸ்ட் 11ம் தேதி படத்தை வெளியிடுவதாக அறிவித்துள்ள நிலையில், இந்த படம் 1 வாரம் முன்னதாகவே ரிலீஸ் ஆகலாம் என்று தகவல் தெரியவந்துள்ளது. அதன்படி ஆகஸ்ட் 3ம் தேதி இந்த படத்தை திரையிட வாய்ப்பிருப்பதாக கூறப்படுகிறது. ஏனெனில் இதே நாளில் (ஆகஸ்ட் 11) அல்லது ஒரு நாள் முன்னதாக (ஆகஸ்ட் 10) ஜெயிலர் படமும் வெளியாகலாம் என்று கூறுகிறார்கள். ரஜினிகாந்தின் ஜெயிலர் திரைப்படமும் சிவகார்த்திகேயனின் மாவீரன் படமும் ஒரே நாளில் வெளியானால் வேற லெவலுக்கு இருக்கும். | Jailer movie release date


இந்நிலையில் சிவகார்த்திகேயன் நடிப்பில் இன்னுமொரு படமும் இந்த வருடமே திரைக்கு வர இருக்கிறது. இன்று நேற்று நாளை திரைப்படத்தின் இயக்குநர் ரவிக்குமாரும் சிவகார்த்திகேயனும் இணைந்த படம் அயலான். இந்த படம் 2016ம் ஆண்டே துவங்கி, படப்பிடிப்பும் பல இடங்களில் நடைபெற்றது. இன்று நேற்று நாளை திரைப்படம் வெற்றியடைந்த நிலையில், சிவகார்த்திகேயனுக்காக பண்ணிய சயின்ஸ் பிக்சன் ஸ்க்ரிப்ட்தான் அயலான். அதில் ஏலியன் கதாபாத்திரங்களுடன் சிவகார்த்திகேயன் இருப்பதாக போஸ்டர்களும் வெளியானது. | Ayalaan release date 2023

அயலான் திரைப்படம் துவங்கிய நாளிலிருந்து பிரச்னைகளுக்கு மேல் பிரச்னைகள் பல கடந்து படப்பிடிப்பை நிறைவு செய்தது. இதன் பிறகு கம்யூட்டர் கிராபிஃக்ஸ் வேலைகளுக்காக ரிலீஸ் தாமதமாகிக் கொண்டே இருந்தது. இதற்கு அது மட்டும் காரணம் இல்லை என்பதும் சிவகார்த்திகேயன் வாங்கிய கடன்களும் படம் தாமதமாவதற்கு காரணம் என்பதும் பின்னாளில் தெரியவந்தது. அந்த பிரச்னைகளையெல்லாம் தீர்த்து எப்போது படத்தை ரிலீஸ் செய்வார்கள் என ரசிகர்கள் நினைத்து வந்த சூழலில் இந்த படத்தின் ரிலீஸ் தேதி தற்போது தெரியவந்துள்ளது. | Ayalaan movie release date


அயலான் திரைப்படத்துக்கு ஏ ஆர் ரஹ்மான் இசைமைத்துள்ளார். இவரது இசையில் வேற லெவல் சகோ எனும் பாடல் வெளியாகி ரசிகர்களை ஈர்த்தது. அதன்பிறகு இந்த படம் குறித்து எந்த அப்டேட்டும் இல்லாமல் இருந்த நிலையில், தற்போது இந்த படம் ரிலீஸாகும் நிலைக்கு நகர்ந்து வந்திருப்பது தெரியவந்துள்ளது. வரும் தீபாவளிக்கு ரிலீஸ் ஆகிறது அயலான் திரைப்படம். | Ayalaan music director

Tags

Next Story