சாதித்த மாமன்னன்! உலக அளவில் டிரெண்டிங்!

சாதித்த மாமன்னன்! உலக அளவில் டிரெண்டிங்!
X
உலக அளவில் டிரெண்டிங்கில் இடம்பெற்றுள்ளது மாமன்னன் திரைப்படம்

இந்திய அளவில் முதலிடத்திலிருந்த மாமன்னன் திரைப்படம் இப்போது உலக அளவில் Maamannan World Trending டிரெண்டிங்கில் இடம்பெற்றுள்ளது.

மாரி செல்வராஜ் இயக்கத்தில் உதயநிதி ஸ்டாலின், வடிவேலு, கீர்த்தி சுரேஷ் மற்றும் பஹத் பாசில் நடிப்பில் வெளியான மாமன்னன் திரைப்படம் கடந்த ஜூன் 29 ஆம் தேதி வெளியானது. இந்த திரைப்படம் தமிழகத்தில் நல்ல வரவேற்பைப் பெற்றது. சாதிக்கு எதிரான படம் என கமல்ஹாசன் உட்பட பலரும் பாராட்டியிருந்தனர்.

ஆனால், மாரி செல்வராஜ் தனது படத்தின் விளம்பரத்துக்காக தேவர்மகன் படம் குறித்து மேடையில் பேசி கமல்ஹாசனை அவமானப்படுத்தியதாக பலரும் குற்றம் சாட்டியிருந்தனர். ஆனால், படத்தைப் பார்த்த கமல்ஹாசன் மாமன்னன் படத்தை பாராட்டி, இதுதான் நம் அரசியல் என மேடையிலேயே பேசியிருந்தார்.

மாமன்னன் திரைப்படத்தில் ஏ ஆர் ரஹ்மான் இசையமைத்துள்ளார். ரஹ்மானின் இசையும் இப்படத்தில் இடம்பெற்றுள்ள பாடல்கள் அனைத்தும் நல்ல வரவேற்பைப் பெற்றன. குறிப்பாக, தன்னானே தானா, நெஞ்சமே நெஞ்சமே ஆகிய பாடல்கள் மிகவும் பிரபலமாகின.

ஜூன் மாத இறுதியில் திரையரங்குகளில் வெளியான மாமன்னன் திரைப்படம் வசூல் ரீதியாக பெரும் வெற்றி பெற்றது. இந்த வெற்றியின் நினைவாக, அந்த படத்தின் தயாரிப்பாளர் உதயநிதி ஸ்டாலின், இயக்குநர் மாரி செல்வராஜூக்கு மினி கூப்பர் கார் பரிசளித்தார். இது மிகவும் மகிழ்ச்சியான தருணம் என மாரி செல்வராஜ் அதனை குறிப்பிட்டிருந்தார்.

திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடி ஒரு மாதத்தைக் கடந்துள்ள நிலையில், மாமன்னன் திரைப்படம் ஜூலை 29 ஆம் தேதி நெட்பிளிக்ஸ் ஓடிடி தளத்தில் வெளியானது. இந்த திரைப்படம் நெட்பிளிக்ஸில் வெளியானதும், இதனை மொழி பேதமின்றி பல மாநில மக்களும் பார்த்துள்ளனர். ஒரே நாளில் இந்த படம் இந்திய அளவில் டிரெண்டிங்கில் முதலிடம் பிடித்தது. இதனால் நெட்பிளிக்ஸ் தரப்பிலிருந்து படக்குழுவுக்கு வாழ்த்துக்களும் தெரிவிக்கப்பட்டன.

மாமன்னன் திரைப்படம் ஒரு சிறந்த வெற்றி பெற்றுள்ளது. மாரி செல்வராஜின் அரசியலைப் பேசியுள்ள இந்த திரைப்படம் நெட்பிளிக்ஸில் வெளியானதும், இந்திய அளவில் டிரெண்டிங்கில் முதலிடம் பிடித்தது. இந்நிலையில் உலக அளவில் டிரெண்டிங்கில் முதல் 10 இடங்களுக்குள் முன்னேறியுள்ளது. Maamannan World Trending இப்போதைக்கு இந்த படம் 9வது இடத்திலிருக்கிறது.

Tags

Next Story
ai solutions for small business