நாளை மாமன்னன் படத்தின் இசை வெளியீட்டு விழா

நாளை மாமன்னன் படத்தின் இசை வெளியீட்டு விழா
X

மாமன்னன் படத்தில் உதயநிதி ஸ்டாலின் மற்றும் கீர்த்தி சுரேஷ்.

Maamannan Audio Launch-மாமன்னன் திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா நேரு உள்விளையாட்டு அரங்கத்தில் நாளை நடைபெறுகிறது.

Maamannan Audio Launch-பரியேறும் பெருமாள், கர்ணன் படங்களுக்கு கிடைத்த வரவேற்புகளைத் தொடர்ந்து மாரி செல்வராஜ் ‘மாமன்னன்’ என்ற திரைப்படத்தை இயக்கி வருகிறார். படத்தில் உதயநிதி ஸ்டாலின் கதாநாயகனாகவும், கீர்த்தி சுரேஷ் கதாநாயகியாகவும் நடித்துள்ளனர். இதில் உதயநிதி ஸ்டாலினுடன், மலையாள நடிகர் பகத் பாசில், நடிகர் வடிவேலு ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். ஏ.ஆர்.ரகுமான் இந்த படத்திற்கு இசையமைக்கிறார். தேனி ஈஸ்வர் ஒளிப்பதிவு செய்ய, படத்தை ரெட் ஜெயண்ட் மூவிஸ் நிறுவனம் தயாரிக்கிறது.

சமீபத்தில் இப்படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்து போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் நடைபெற்று வருகிறது. நாளுக்கு நாள் ‘மாமன்னன்’ படம் குறித்த எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் அதிகரித்து வரும் நிலையில் இப்படத்தின் முதல் பாடலான ’ராசா கண்ணு’ சென்ற வாரம் வெளியானது. யுகபாரதி எழுதியுள்ள இந்தப் பாடல் வடிவேலுவின் குரலில் வெளியானது. இந்த பாடல் ரசிகர்களிடையே நல்ல வரவேற்ப்பை பெற்றது.


இந்நிலையில், இன்று மாமன்னன் படத்தின் இறுதிக்கட்ட பணிகள் மும்மரமாக நடைபெற்று வரும் நிலையில், படத்தின் இசை வெளியீட்டு விழா ஜூன் 1-ம் தேதி சென்னையில் நடைபெறும் ஏற்கனவே அறிவிக்கப்பட்டிருந்தது. அதன்படி, சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கில் நாளை பிரமாண்டஇசை வெளியீட்டு விழா நடைபெறவுள்ளது. அதற்காக, படத்தின் புதிய போஸ்டர் ஒன்றை படக்குழு வெளியிட்டுள்ளது.

மேலும் ஒரு கல் ஒரு கண்ணாடி திரைப்படத்தின் மூலம் நடிகராக அறிமுகமான உதயநிதி, தொடர்ந்து சினிமாவில் 10 ஆண்டுகளுக்கு மேலாக ஒரு சிறந்த நடிகராக வெற்றிகரமாக பயணித்து வந்த திடீரெனெ அரசியலில் எண்ட்ரி கொடுத்தார். தற்போது அவர் அமைச்சர் ஆகியுள்ளதால், இனி சினிமாவில் நடிக்க மாட்டேன் என்று அதிரடியாக அறிவித்தார்.

அதன்படி உதயநிதி ஸ்டாலின் நடித்துள்ள கடைசி படம் இது என்பதால், இதன் இசை வெளியீட்டு விழாவில், முதல்வர் ஸ்டாலின், நடிகர்கள் ரஜினிகாந்த், கமல்ஹாசன் உள்பட ஏராளமான பிரபலங்கள் கலந்து கொள்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. படம் வரும் ஜூன் மாதம் திரையரங்குகளில் வெளியாகும் எனவும் கூறப்படுகிறது. அதற்கான அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்பது குறிப்பிடத்தக்கது.



அடுத்த முக்கியமான செய்திகளை தெரிந்துகொள்ள: Click Here-1, Click Here-2

Tags

Next Story
கொமதேக தலைவரின் மாபெரும் அறிவிப்பு: திமுக கூட்டணியில் எந்த பிரச்சனையும் இல்லை!