இந்திக்கு செல்லும் லவ்டுடே! யார் நடிக்கிறாங்க தெரியுமா?

இந்திக்கு செல்லும் லவ்டுடே! யார் நடிக்கிறாங்க தெரியுமா?
X
சத்யராஜ், ராதிகா, ரவீனா ரவி, அக்ஷயா உதயகுமார், கதிர் என பலரும் படத்துக்கு மிகப் பெரிய பலம். அதிலும் முக்கியமாக யோகிபாபுவின் குணச்சித்திர கதாபாத்திரம் படத்துக்கு பேருதவி புரிந்திருக்கிறது.

தமிழில் மிகப் பெரிய வசூல் மழை பொழிந்த படமான லவ் டுடே படத்தை ஹிந்தியில் ரீமேக் செய்ய பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது. இயக்குநர், ஹீரோ, ஹீரோயின் யார் யார் என ரசிகர்கள் இப்போதே எதிர்பார்த்து வருகின்றனர்.


பிரதீப் ரங்கநாதன் இயக்கி நடித்த படமான லவ் டுடே மிகப் பெரிய அளவில் வரவேற்கப்பட்ட திரைப்படமாகும். இதன் பட்ஜெட்டை விட பல மடங்கு லாபத்தை அள்ளிக் கொடுத்த படம் என்பதால் தயாரிப்பாளர் இந்த படத்தை ஹிந்தியிலும் ரீமேக் செய்யலாம் என முடிவுக்கு வந்துள்ளார். இளைஞர்களுக்கு முக்கியத்துவம் உள்ள கதை மட்டுமின்றி இது எல்லா மொழிகளிலும் வரவேற்பை பெறும் படமாக அமையும் என்பதால் ஹிந்தி ரைட்ஸை பல கோடிக்கு விற்றிருப்பதாக தகவல் வந்துள்ளது. முன்னதாக ஏஜிஎஸ் நிறுவனமே இந்த படத்தை ஹிந்தியில் தயாரிப்பதாக இருந்தது.


கடந்த ஆண்டு நவம்பர் 4ம் தேதி வெளியான இந்த படம் ரொமாண்டிக் காமெடி எனும் கதையில் உருவாகியிருந்தது. இளைஞர்களின் இன்றைய காதலில் முந்தைய தலைமுறை நுழைந்து அவர்களுக்கே அவர்களின் காதலை புரிய வைப்பதுதான் கதை.


நாயகியின் அப்பாவான சத்யராஜ், காதலர்கள் இருவருக்குள்ளும் இருக்கும் வேற்றுமைகளை இருவருக்கும் தெரியப்படுத்துகிறார். இதில் இடைவேளை வருகிறது. நாயகனின் அம்மாவான ராதிகா உண்மையை ஏற்றுக் கொள்வது எப்படி என்பதை உணர்த்துகிறார். இப்படி கதையின் மையமாக இவர்கள் அமைந்திருப்பதால் கதை சுவாரஸ்யமாக நகர நண்பர்களையும் அக்காவுக்கான திருமணத்தையும் சேர்த்து சூப்பரான எண்டர்டெய்னரைத் தந்துள்ளார் பிரதீப்.


சத்யராஜ், ராதிகா, ரவீனா ரவி, அக்ஷயா உதயகுமார், கதிர் என பலரும் படத்துக்கு மிகப் பெரிய பலம். அதிலும் முக்கியமாக யோகிபாபுவின் குணச்சித்திர கதாபாத்திரம் படத்துக்கு பேருதவி புரிந்திருக்கிறது.


தமிழில் மிகப் பெரிய வரவேற்பை பெற்ற இந்த படம் ஹிந்தியில் உருவாக இருக்கிறது. இதில் நாயகனாக அமீர்கானின் மகன் ஜூனைத் கானும், நாயகியாக ஸ்ரீதேவியின் இளைய மகள் குஷியும் நடிக்கிறார்களாம்.

Tags

Next Story
கணித மேதை ராமானுஜன் பெயரில் பல்கலைக்கழகம் அமைக்க வேண்டும் - வரி செலுத்துவோர் மக்கள் நல்வாழ்வு சங்கம்  வலியுறுத்தல்!