காதல் ரோஜாக்களை நடிகர் சிம்புவுக்குப் பரிசளிப்பேன்..!

Actor Simbu | Romantic Rose
X

பைல் படம்.

Actor Simbu -'வெந்து தணிந்தது காடு' படத்தின் நாயகி சித்தி இட்னானி காதல் ரோஜாக்களை நடிகர் சிம்புவுக்கு அளிப்பேன் என்று பேசியுள்ளார்.

Actor Simbu -இயக்குநர் கௌதம் வாசுதேவ் மேனன் இயக்கத்தில் தற்போது வெளியாகி நல்ல வரவேற்புடன் திரையில் ஓடிக்கொண்டிருக்கும் 'வெந்து தணிந்தது காடு' படத்தின் நாயகி சித்தி இட்னானி காதல் ரோஜாக்களை நடிகர் சிம்புவுக்குப் பரிசாக அளிப்பேன் என்று பேசியுள்ள செய்தி சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

அண்மையில், நடிகை சித்தி இட்னானி ஒரு நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பேசினார். அப்போது அவரிடம், "காதல் ரோஜாக்களை பரிசளிக்க வேண்டுமென்றால் யாருக்கு கொடுப்பீர்கள்?" என்ற கேள்விக்கு பதிலளித்து பேசிய நடிகை சித்தி இட்னானி, ''தமிழகத்தின் தகுதியான 'பேச்சிலர்' சிம்புதான். எனவே, காதல் ரோஜாக்களை அவரிடம்தான் பரிசாக அளிப்பேன்'' என்றார். அதோடு,

"நடிகர் சிம்பு விரைவில் திருமண பந்தத்தில் இணைய வேண்டும். அத்துடன், அவருக்கான ஜோடி அவருடன் விரைவில் வந்து இணைய கடவுளிடம் வேண்டிக் கொள்கிறேன்'' என்றும் நடிகை சித்தி இட்னானி தெரிவித்துள்ளார். 'வெந்து தணிந்தது காடு' படம் வெளியாகியிருக்கும் நிலையில் இந்த செய்தி சமூக வலைத்தளமெங்கும் தற்போது வைரலாகி வருகின்றது.

இயக்குநர் கெளதம் வாசுதேவ் மேனன் இயக்கத்தில், நடிகர் சிம்பு நடித்திருக்கும் திரைப்படம் 'வெந்து தணிந்தது காடு'. இது எழுத்தாளர் ஜெயமோகன் எழுதிய அக்னி குஞ்சொன்று கண்டேன் கதையைத் தழுவி எடுக்கப்பட்ட படமாகும். இப்படத்தில் நாயகியாக நடித்துள்ள நடிகை சித்தி இட்னானி குஜராத் மாநிலத்தைச் சேர்ந்தவராவார். இவர்களுடன் ராதிகா சரத்குமார் முக்கியக் கதாபாத்திரத்தில் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.


அடுத்த முக்கியமான செய்திகளை தெரிந்துகொள்ள: Click Here-1, Click Here-2


Tags

Next Story
கருணை இல்ல மேம்பாட்டுப் பணி..! பண்ணாரி அம்மன் கோயிலில் முதல்வா் காணொலியில் தொடக்க விழா..!