மாடர்ன் டிரெஸ்ஸில் அசத்தல் லுக்கில் பிக்பாஸ் லாஸ்லியா !! இன்ஸ்டாவில் வைரல்..

losliya latest news, bigg boss losliya latest நடிகை லாஸ்லியா
Losliya Bigg Boss -
losliya latest news, bigg boss losliya latest newsஇந்தியாவில் சேட்டிலைட் சேனல்களின்ஆதிக்கம் வந்த பிறகு சினிமா துறைக்கு பாதிப்பு ஏற்பட்டது என்று கூட சொல்லலாம். அந்த வகையில் டிவியில் தினந்தோறும்வெளியாகும் சீரியல்கள் ஒவ்வொரு பெண்மணியையும் கட்டிப்போட்டுள்ளது. இதுமட்டுமல்லாமல் மற்ற ஷோக்களும் அவர்களை கட்டிப்போட்டன. அந்த வகையில் ஸ்டார் விஜய் டிவியின் பிரபலமாக உள்ள ரியாலிட்டி ஷோவான பிக்பாஸ். இதனை நடிகர் கமல்ஹாசன் தொகுத்து வழங்குகிறார்.
இந்த நிகழ்ச்சியானது கோடிக்கணக்கான பொருட்செலவில் தயாரிக்கப்பட்டு ஒளிபரப்பாவதோடு கோடிக்கணக்கான ரசிகர்களையும் பெற்றுள்ளதுதான் இந்த நிகழ்ச்சிக்கு கிடைத்த வெற்றி என்று கூட சொல்லலாம். இது ஹிட்டெல்லாம் இல்லை. மெகா ஹிட் ஷோ.
கடந்த 2017 ம்ஆண்டு முதன் முதலாக இந்த ஷோ துவங்கப்பட்டு இன்றளவில் 5 சீசன்களை வெற்றிகரமாக முடித்துள்ளது. இதன் OTT வெர்ஷனான பிக்பாஸ் அல்டிமேட்டும் சீசன் 1-ஐ வெற்றிகரமாக நிறைவு செய்துள்ளது. இந்த நிகழ்ச்சியின் மூலம் தமிழ் ரசிகர்கள் மத்தியில் பிரபலமானவர்கள் அதிகம்.கடந்த 2019-ம் ஆண்டு விஜய் டிவியில் பிக்பாஸின் 3-வது சீசன் ஒளிபரப்பானது.
3வது சீசனில் பங்கேற்றவர்களில் மிக முக்கியமானவராக கருதப்படும் போட்டியாளர்தான் நடிகை லாஸ்லியா. இலங்கை தமிழரான நடிகை லாஸ்லியா மரியனேசன் கடந்த 1996-ல் மார்ச் 23-ம் தேதி பிறந்தார். இலங்கையின் கிளிநொச்சியில் பிறந்த இவரது தாயும், தந்தையும் இலங்கையின் யாழ்ப்பாணத்தை சேர்ந்தவர்கள்ஆவார்கள். லாஸ்லியா துவக்கத்தில் இலங்கையில் செய்தி வாசிப்பாளராக தனது வேலையை துவக்கினார்.பின்னர் நிகழ்ச்சி தொகுப்பாளராகவும், மக்கள் மத்தியில் வெகு பிரபலம் ஆனார். தற்போது பிக்பாஸ் நிகழ்ச்சியின் மூலம் தமிழகத்திலும் இலங்கையிலும் பிரபலமாகிவிட்டார்.
பிக்பாஸில் மூன்றாம் இடம்
losliya latest news, bigg boss losliya latest newsபிக்பாஸ் சீசன் 3-ன் முடிவில் முகேன் வெற்றி பெற்றார். இரண்டாம் இடத்தை சாண்டியும், மூன்றாம் இடத்தை லாஸ்லியாவும் பிடித்தனர். இந்த சீசனில் கவின் என்பவரும் கலந்துகொண்டார். ஆனால் நிகழ்ச்சியைப் பார்த்தவர்கள் அனைவரும் இவர்கள் இருவரும் இருந்த நெருக்கத்தினை பார்த்து இருவருக்கும் காதலாக இருக்குமோ என்ற நிலையில் பேசப்பட்டது. கவின்-சாக்ஷி இருவருக்கும் இருந்த அன்பின் காரணமாக கவினுடன் லாஸ்லியா நெருக்கமாக பழகுவதில் ஆர்வம் காட்டியதும் பின்னர் பிக்பாஸ் வீட்டில் நடந்த பல களேபரங்களைக் கண்ட லாஸ்லியாவின் தந்தை தன் மகளை வார்த்தைகளால் வறுத்தெடுத்ததும் அதற்கு பிறகு அவருடைய தந்தை மறைந்தது என உங்கள் அனைவருக்கும் நினைவில் இருக்கலாம்.
.படவாய்ப்புகள்
losliya latest news, bigg boss losliya latest newsபிக்பாஸில் லாஸ்லியா பங்கேற்ற பிறகு அவருக்கு ஏராளமான திரைப்பட வாய்ப்புகள் வந்தன. எனினும் அனைத்து வாய்ப்புகளையும் ஏற்றுக்கொள்ளாமல் முக்கிய கதாபாத்திரங்களை மட்டும் தேர்ந்தெடுத்து அதில் நடித்தார். அந்த வகையில் ஜான்பால்ராஜ் மற்றும் ஷாம்சூர்யா ஆகியோரது இயக்கத்தில் ஆக்சன் கிங் அர்ஜூன் ,கிரிக்கெட் வீரர் ஹர்பஜன் சிங் நகைச்சுவை நடிகர்கள் எம்எஸ் பாஸ்கர் மற்றும் நடிகர் சதீஷ் நடிப்பில் வெளியான பிரண்ட்ஷிப் திரைப்படம் மூலம் தமிழ் வெள்ளித்திரையில் அறிமுகம் ஆனவர் லாஸ்லியா ஆவார்.
சோஷியல் மீடியாவில் எப்போதும் ஆக்டிவ்வாக காணப்படுபவர் நடிகை லாஸ்லியா. அந்த வகையில் வித்தியாசமான கெட்அப்பிலான உடையில் தனது புகைப்படம் அனைத்தையும் ஷேர் செய்து ரசிகர்களுக்கு அவ்வப்போது ஆச்சர்யத்தை அளிப்பார். இதுவரை இன்ஸ்டாகிராமில் 17 லட்சத்திற்கும் மேலானவர்கள் இவரை பின்தொடர்ந்து வருகின்றனர். இந்நிலையில் நீங்கள் கஷ்டமாக உள்ள நாட்களில் நீங்களே உங்களை பாராட்டிக்கொள்ளுங்கள் என்ற தலைப்பில் இவர் ஷேர் செய்துள்ள புகைப்படங்கள் அனைத்தும் தற்போது இன்ஸ்டாகிராமில் வைரலாகிவருவதுதான் ஹைலைட்டே. .
சாதாரண டிரஸ்ஸில் வந்தாலே ரசிகர்கள் கிறங்குவர். அதுவும் மஞ்சள் கலர் உடையில் அவர் கொடுத்துள்ள போட்டோக்கள் மூலம் மீண்டும் ரசிகர்களை கவர்ந்துள்ளார் லாஸ்லியா. இதனால் இவருக்கு இன்ஸ்டாகிராமில் பாலோயர்கள் உயர வாய்ப்புள்ளதாகவும் தெரிகிறது.
அடுத்த முக்கியமான செய்திகளை தெரிந்துகொள்ள: Click Here-1, Click Here-2
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
-
Menu