லாஸ்லியா, ஷிவானி கைது? அப்படி என்ன பண்ணிட்டாங்க தெரியுமா?

லாஸ்லியா, ஷிவானி கைது? அப்படி என்ன பண்ணிட்டாங்க தெரியுமா?
X
சமீபத்தில் தமிழக அரசு சட்டசபையில் இந்த ஆன்லைன் சூதாட்ட தடை மசோதைவை நிறைவேற்றியது. இதனால் ஆன்லைன் சூதாட்டம் ஆடுபவர்கள் மட்டுமின்றி அதனை விளம்பரப்படுத்துபவர்கள் மீதும் வழக்கு பதிவு செய்ய முடியும்.

நடிகைகள் லாஸ்லியா, ஷிவானி ஆகியோர் கைது செய்யப்பட வாய்ப்பு இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. நல்ல பெயரை சம்பாதித்து சினிமாவில் முன்னேறும் நேரத்தில் இப்படி பிரச்னைகளில் மாட்டிக் கொண்டு முழிக்கிறார்கள்.

தமிழ் சினிமாவில் தனக்கென ஒரு வாய்ப்பு கிடைக்குமா என எதிர்பார்த்து இருப்பவர்கள் ஷிவானியும், லாஸ்லியாவும். இவர்கள் பிக்பாஸ் நிகழ்ச்சி மூலம் தமிழ் மக்களிடையே மிகவும் பிரபலமானார்கள். அதன்பிறகு ஓரிரு படங்கள் வாய்ப்பு கிடைத்தாலும் பெரிய அளவில் ஸ்கோர் செய்ய முடியாமல் அடுத்தடுத்த பட வாய்ப்புகளுக்காக காத்திருக்கிறார்கள்.

இப்படி காத்துக் கொண்டு இருக்கும் நடிகைகள் பலர் தங்களது இன்ஸ்டாகிராம் மற்றும் சமூக வலைத்தளங்களில் விளம்பரங்கள் செய்ய பல ஆயிரம் ரூபாயிலிருந்து லட்சக்கணக்கிலும் பணம் கேட்டு வருகிறார்கள். அப்படி பணம் சம்பாதிக்கும் செயலை செய்யப் போயி அது சட்டத்துக்கு புறம்பான விசயமாக மாற அதனால் இவர்கள் கைது செய்யப்பட வாய்ப்பிருப்பதாக கூறப்படுகிறது.

ஆன்லைன் சூதாட்ட விளம்பரங்களில் தோன்றி நடிப்பது ஒரு பக்கம் அவை கூட விளம்பரங்கள் என்று விட்டுவிடுவார்கள் மக்கள். ஆனால் இவர்கள் இருவரும் தனது சொந்த கணக்கிலேயே இந்த சூதாட்டத்தை ஆடுங்கள் என்று கூறி நடித்திருக்கிறார்கள். இதனைப் பார்த்த சென்னையைச் சேர்ந்த வழக்கறிஞர் ஒருவர் இவர்கள் மீது வழக்கு தொடுக்க இருப்பதாக தெரிவித்துள்ளார்.

இந்தியா முழுக்க ஆன்லைன் சூதாட்ட விளையாட்டுகளில் லட்சக்கணக்கில் பணத்தை இழந்துவிட்டு சோகத்தில் தற்கொலை செய்து கொள்கின்றனர். இது நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வருகின்ற ஒரு செயலாக இருக்கிறது. சமீபத்தில் தமிழக அரசு சட்டசபையில் இந்த ஆன்லைன் சூதாட்ட தடை மசோதைவை நிறைவேற்றியது. இதனால் ஆன்லைன் சூதாட்டம் ஆடுபவர்கள் மட்டுமின்றி அதனை விளம்பரப்படுத்துபவர்கள் மீதும் வழக்கு பதிவு செய்ய முடியும்.

Tags

Next Story
கருணை இல்ல மேம்பாட்டுப் பணி..! பண்ணாரி அம்மன் கோயிலில் முதல்வா் காணொலியில் தொடக்க விழா..!