கமல் படத்தில் இணையும் அஜித் விஜய்.. இயக்குவது நம்ம லோகேஷ்!
நீங்களே உங்களைக் கிள்ளிக் கொள்வீர்கள் இது மட்டும் நடந்தால் நாம் நிஜ உலகில் இருக்கிறோமா இல்லை கனவுதானா என்று. அடித்து கூட சொல்லமுடியும் இது நடக்காது என்பதை. ஆனால் ஒருவேளை நடந்தால்... கமல் நடித்த ஒரு படத்தில் அஜித் - விஜய் இருவரும் சேர்ந்து நடித்தால் எப்படி இருக்கும்.. ரசிகர்கள் தியேட்டரை துவம்சம் செய்துவிடுவார்கள்.
லியோ படத்தில் விஜய்யும், அஜித்குமார் 62 படத்தில் அஜித்தும் பிஸியாக இருக்கிறார்கள். லோகேஷ் கனகராஜ் காஷ்மீரில் ஓடிக்கொண்டிருக்கிறார். கமல்ஹாசன் இந்தியன் 2 படப்பிடிப்பில் இருக்கிறார். இவர்களை ஏன் இப்ப கோர்த்து விடுறீங்க என்று கேட்கலாம். இதற்கு காரணம் லோகேஷ் கனகராஜ் தான்.
லோகேஷ் கனகராஜிடம் நீங்கள் எந்த படத்தை ரீமேக் செய்ய விரும்புகிறீர்கள் என்ற கேள்விக்கு அவர் கமல்ஹாசன் நடித்த குருதிப்புனல் படத்தை ரீமேக் செய்வேன் என்று தெரிவித்திருந்தார். இதனால் அவர் குருதிப் புனல் படத்தை உண்மையிலேயே ரீமேக் செய்தால் நன்றாக இருக்கும் என பலரும் எதிர்பார்த்திருந்தனர். தளபதி விஜய்யுடன் மீண்டும் இணைவதாக செய்தி வெளியானபோதும் இந்த படம் குருதிப்புனல் மாதிரியாக இருக்கும் என்று கூறப்பட்டது.
கமல்ஹாசன், அர்ஜூன் நடிப்பில் 1995ம் ஆண்டு வெளியான படம் குருதிப்புனல். இந்த படத்தின் கதாநாயகர்களான அர்ஜூன், கமல்ஹாசன் இருவருமே இறந்துவிடுவார்கள். அடுத்தது அவர்களின் அடுத்த தலைமுறை கையில் துப்பாக்கி தூக்கும் என்பது போல முடித்திருப்பார்கள். இந்த படத்தின் சீக்குவல் தயாராகலாம் என்றும் அதை லோகேஷ் கனகராஜே இயக்கலாம் என்றும் பலரும் பேசி வந்தனர்.
தளபதி விஜய் நடிப்பில் லோகேஷ் கனகராஜ் இயக்கும் புதிய படத்துக்கு லியோ என்று பெயர் வைத்துள்ளனர். அந்த படத்தில் அர்ஜூன், மிஷ்கின், கௌதம் மேனன், சஞ்சய் தத் உள்ளிட்ட பலர் நடித்து வருகின்றனர். இதனால் இந்த படமும் லோகேஷ் சினிமாட்டிக் யூனிவர்ஸில் வரும் என்று ரசிகர்கள் எதிர்பார்த்து வருகின்றனர்.
இந்நிலையில், லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் அஜித், விஜய் இருவரும் சேர்ந்து நடிப்பதாக தகவல் பரவி வருகிறது. இது உண்மை இல்லை என்று தெரிந்தே பலரும் இதனை பரப்பி வருகின்றனர். அதாவது இந்த செய்தியில் கமல்ஹாசன், அர்ஜூன் சேர்ந்து நடித்த குருதிப்புனல் படத்தை தமிழில் மீண்டும் எடுக்க லோகேஷ் கனகராஜ் தயாராக இருப்பதால், விஜய், அஜித் இருவரையும் அந்த கதாபாத்திரத்தில் வைத்து படமெடுக்கலாம் என்று சொல்கிறது அந்த தகவல்.
முன்னதாக ரஜினியின் தளபதி படத்தை ரீமேக் செய்தால் அதில் ரஜினி வேடத்தில் விஜய்யும் மம்மூட்டி வேடத்தில் அஜித்தும் நடிக்கலாம் என்றும் தகவல் பரவியது. ஆனால் இவை அனைத்தும் ஒவ்வொருவரின் கற்பனைதானே அன்றி உண்மையில் நடக்கப்போவது இல்லை.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu