சில லட்சங்களில் இருந்து, பல கோடிகளை 'தொட்ட' லோகேஷ் கனகராஜ்

Lokesh Kanagaraj Salary Per Movie - இளம் வயதிலேயே, தமிழ் சினிமாவில் சாதித்துக் காட்டிய இயக்குநர் லோகேஷ் கனகராஜ்.
lokesh kanagaraj first movie salary, lokesh kanagaraj salary for thalapathy 67, Lokesh Kanagaraj Salary Per Movie- சினிமாவில் சுக்ர திசை அடித்து விட்டால், சில படங்களில் பேரும், புகழும் அடைந்து விடுவது, நடிகர்களுக்கு மட்டுமல்ல. அது இயக்குநர்களுக்கும் பொருந்தும். அந்த வகையில், இப்போது கோடிகளில் சம்பளம் வாங்கும் அளவுக்கு, தமிழ் சினிமாவின் முன்னணி இயக்குநர்களில் ஒருவராக, லோகேஷ் கனகராஜ் முன்னேறி இருக்கிறார்.
இவரது முதல் படமான 'மாநகரம்' படம் மூலம் கவனிக்கப்பட்ட இவர், 'கைதி' படத்தில், பரபரப்பாக பேசப்பட்டார். அதைத்தொடர்ந்து, விஜய் நடித்த 'மாஸ்டர்' படம், அவ்வளவாக கவனிக்கப்படும் படமாக அமையவில்லை. படம், எதிர்பார்த்த அளவில் பெரிய வெற்றி பெறவில்லை.
இதைத்தொடர்ந்து, கமல் நடித்த 'விக்ரம்' பிளாக் பஸ்டர் மூவியாக, மிகப்பெரிய ஹிட் படமாக அமைந்தது. இதில் உலக நாயகன் கமல் உடன், விஜய் சேதுபதி வில்லனாக நடித்தது, பரபரப்பான படமாக அமைய வாய்ப்பளித்தது. குறிப்பாக, மலையாள நடிகர் பகத் பாசில் துடிப்பான நடிப்பு, படத்துக்கு மேலும் மெருகேற்றியது. இந்த படத்தில், சின்ன சின்ன ரோல்களில் நடித்திருந்தாலும் அவர்களது நடிப்பு, செதுக்கி உருவாக்கியதாக அமைந்தது. இப்போது, மீண்டும் விஜய் படத்தை துவக்கி உள்ளார் இயக்குநர் லோகேஷ் கனகராஜ்.
கோலிவுட் சினிமாவின் முன்னனி இயக்குனராக இருக்கும் லோகேஷ் கனகராஜ் அண்மையில் தனது முதல் படத்தின் சம்பளத்தை பற்றி கூறியுள்ளார்.
'மாநகரம்' படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் 'என்ட்ரி' கொடுத்த லோகேஷ். சமீபத்தில் இவர் இயக்கிய 'விக்ரம்' படத்தின் வெற்றியால், இவரது இயக்கத்தில் நடிக்க முன்னனி நடிகர்கள் ஆவலாக உள்ளனர். ஏனெனில், 'விக்ரம்' படத்தின் 'மாஸ்' வெற்றியால், தமிழ் சினிமாவின் முக்கிய இயக்குநர்களில் ஒருவராக, லோகேஷ் முன்னேறி விட்டார். அடுத்து வரும் அவரது படங்களை, ரசிகர்கள் மிகுந்த ஆர்வத்துடன் எதிர்பார்த்து உள்ளனர்.
நடிகர் விஜய் மற்றும் லோகேஷ் கனகராஜ் இவர்களின் கூட்டணியில் வெளியான 'மாஸ்டர்' படத்தின் வெற்றியை தொடர்ந்து, மீண்டும் 'தளபதி 67' படத்திற்கு இருவரும் இணைந்துள்ளனர். இதனால் ரசிகர்களிடம் மிகுந்த எதிர்பார்ப்பு ஏற்பட்டு உள்ளது.
தளபதி 67 படம் 100 சதவீதம் லோகேஷ் படமாக இருக்கும் என்றும் பேட்டி ஒன்றில் கூறியுள்ளார் இந்நிலையில், தளபதி67 பூஜையும் தற்போது நடைபெற்றுள்ளது.
தற்போது தனது முதல் படத்தின் சம்பளத்தை பற்றி 'ஓபன்' ஆக கூறியுள்ளார் இயக்குநர் லோகேஷ் கனகராஜ். அதில் 'மாநகரம்' படத்திற்கு ரூ. 5 லட்சம் வழங்கப்பட்டதாகவும் , டிடிஎஸ் போக ரூ. 4.50 லட்சம் கிடைத்தது என தெரிவித்துள்ளார். தனது விடாமுயற்சியினால் அப்போது லட்சத்தில் ஆரம்பித்து, இப்பொது கோடியில் சம்பளம் வாங்குகிறார் லோகேஷ்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
-
Menu