Leo-ல் லோகேஷ் கனகராஜ் சம்பளம் இத்தனை கோடியாம்...!

Lokesh Kanagaraj Salary
Lokesh Kanagaraj Salary-கமல்ஹாசன் நடிப்பில் வெளியான விக்ரம் பட வெற்றிக்கு பிறகு லோகேஷ் கனகராஜின் சம்பளம் அதிரடியாக உயர்ந்தது. கிட்டத்தட்ட 25 கோடி ரூபாய் அளவுக்கு லியோ படத்தில் சம்பளமாக பெறுகிறாராம். முன்னதாக விக்ரம் படத்துக்கு அவர் வாங்கியிருந்தது 12 கோடி என பேசப்படுகிறது.
லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கமல்ஹாசன் தயாரித்து நடித்த படம் விக்ரம். கமல்ஹாசனுடன் விஜய் சேதுபதி, பஹத் பாசில், நட்புக்காக சூர்யா ஆகியோர் நடித்து அசத்தியிருந்தனர். இந்த படம் இதுவரை இல்லாத அளவுக்கு மிகப் பெரிய சாதனையை படைத்து இண்டஸ்ட்ரி ஹிட் ஆனது.
இந்த வெற்றியைத் தொடர்ந்து கமல்ஹாசன் அடுத்தடுத்து பல இயக்குநர்களுடன் இணைய திட்டமிட்டார். அதில் ஹெச் வினோத், மணிரத்னம், வெற்றிமாறன், பா.ரஞ்சித், கௌதம் வாசுதேவ் மேனன் என அடுத்தடுத்து முன்னணி இயக்குநர்களோடு கூட்டணி சேரவுள்ளார். இதில் லோகேஷ் கனகராஜுடன் மீண்டும் இணையும் விக்ரம் 2 படமும் அடங்கும்.
தமிழின் அதிக சம்பளம் பெறும் இயக்குநர்களில் லோகேஷ் கனகராஜும் இணைந்திருக்கிறார். லோகேஷ் கனகராஜ் சினிமாட்டிக் யூனிவர்ஸ் எனும் பெயரில் அடுத்தடுத்து படங்களை கணெக்ட் செய்து வித்தியாசமான அணுகுமுறையைக் கையாளும் லோகேஷ் கனகராஜ் அடுத்து விஜய் நடிக்கும் லியோ படத்தை இயக்கி வருகிறார். இந்த படத்தைத் தொடர்ந்து கைதி 2 படத்தையும் அதனைத் தொடர்ந்து விக்ரம் 2 படத்தையும் இயக்கவிருப்பதாக கூறப்படுகிறது.
தற்போது லோகேஷ் கனராஜுடன் இணைந்திருக்கும் விஜய் படத்தின் வியாபாரம் மிகப் பெரிய அளவில் இருக்கும். டிஜிட்டல் உரிமை முதல் தொலைக்காட்சி உரிமை என கோடிக்கணக்கில் வியாபாரம் ஆகும் என கணிக்கப்படுகிறது. லோகேஷ் கனகராஜ் இயக்கிய படங்களிலேயே மிகப் பெரிய பட்ஜெட் படமாக லியோதான் இருக்கப்போகிறது. இதனால் அவருக்கு சம்பளம் இருமடங்காக வழங்கப்படுகிறது. இனி அடுத்தடுத்த படங்களுக்கு ஏற்ப அவர் சம்பளத்தைக் குறைத்து கூட்டி வாங்குவார்.
ஏனென்றால் அவர் நடிப்பில் விரைவில் சின்ன பட்ஜெட் படங்களும் உருவாகலாம் என அவரே பல பேட்டிகளில் தெரிவித்திருக்கிறார். மேலும் அவர் படம் தயாரிக்கும் முடிவுக்கும் வந்திருக்கிறார். லோகேஷ் கனகராஜ் தயாரிப்பில் அடுத்தடுத்த வருடங்களில் சில படங்கள் உருவாகலாம் என்கிறார்கள்.
விஜய், அர்ஜூன், திரிஷா, ப்ரியா ஆனந்த், மன்சூர் அலிகான், மிஷ்கின், கௌதம் மேனன், சஞ்சய் தத் உள்ளிட்டவர்கள் நடித்து வரும் மிகப் பெரிய படமான லியோ இப்போது காஷ்மீரில் நடைபெற்று வருகிறது. இங்கு 2 மாதத்துக்கும் அதிகமான நாட்கள் தங்கியிருந்து முழு படத்தையும் முடித்துவிட்டு வர திட்டமிட்டுள்ளது படக்குழு. கடைசியாக வந்த அப்டேட்டின் படி இது எல்சியூ படம்தான் எனவும் அதில் சந்தனம் கதாபாத்திரத்தில் வரும் விஜய்சேதுபதியும் இருப்பார் என சந்தேகிக்கப்படுகிறது.
அடுத்த முக்கியமான செய்திகளை தெரிந்துகொள்ள: Click Here-1, Click Here-2
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
-
Menu