Thalaivar 171 லோகேஷ் கனகராஜின் சம்பளம் எவ்வளவு தெரியுமா?

ஜெயிலர் படத்தின் வெற்றியைத் தொடர்ந்து, சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகும் 171வது படத்தின் அறிவிப்பு வெளியாகியுள்ளது. இந்த படத்துக்காக லோகேஷ் எத்தனை கோடி சம்பளம் பெறுவார் என்பது குறித்தும் தகவல்கள் பரவி வருகின்றனர்.
மாநகரம் படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமான லோகேஷ் கனகராஜ், கார்த்தியை வைத்து கைதி திரைப்படத்தை இயக்கினார். அடுத்து விஜய்யுடன் இணைந்து மாஸ்டர் , கமல்ஹாசன் தயாரித்து நடித்த விக்ரம் ஆகிய படங்களின் மூலம் தமிழ் சினிமாவில் முன்னணி இயக்குநராக உருவெடுத்துள்ளார். குறிப்பாக, விக்ரம் படம் உலகம் முழுவதும் மாபெரும் வெற்றி பெற்றது. இதனால், லோகேஷின் மார்க்கெட் வேல்யூ அதிகரித்துள்ளது.
உலக அளவில் விக்ரம் படத்தின் மூலம் பிரபலமான லோகேஷ் கனகராஜுக்கு தமிழ் சினிமா மட்டுமின்றி தெலுங்கு, ஹிந்தி பட வாய்ப்புகளும் வந்து கொண்டிருக்கின்றன. ஆனால் அவரை வெளியே விடாமல் தலைவர் 171, கைதி ஆகிய படங்களின் ஒப்பந்தங்கள் கட்டிப் போட்டிருக்கின்றன. இதனால் எப்படியாவது இதனை விரைவில் முடித்துக் கொண்டு கைதி படத்துக்கு போக திட்டமிட்டிருக்கிறார் லோகேஷ் கனகராஜ்.
லியோ படத்தைத் தொடர்ந்து, லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவாகும் தலைவர் 171 படம் ரசிகர்களிடையே பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்தப் படத்தின் ஷூட்டிங் அடுத்தாண்டு பிப்ரவரியில் தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த ஆண்டு நவம்பரில் எழுத்துப் பணிகள் தொடங்கி, பிப்ரவரியில் ஷூட்டிங் செல்கிறார்களாம். தீபாவளி விருந்தாக படம் திரைக்கு வரும் என்று கூறப்படுகிறது.
லோகேஷின் சம்பளம்
லோகேஷ் கனகராஜ் இயக்கிய முதல் மூன்று படங்களான மாநகரம், கைதி, மாஸ்டர் படங்களுக்கு லட்சங்களில் சம்பளம் வாங்கிய லோகேஷ், விக்ரம் படத்திற்காக ரூ.20 கோடி வரை சம்பளம் வாங்கியதாக கூறப்படுகிறது. தற்போது இயக்கியுள்ள லியோ படத்திற்காக ரூ.30 முதல் ரூ.35 கோடி வரை சம்பளம் எனவும் கோலிவுட் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
லியோ திரைப்படம் கோலிவுட்டின் முதல் ஆயிரம் கோடி பாக்ஸ் ஆபிஸ் கிளப்பில் இணையும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனால், தலைவர் 171 படத்திற்காக லோகேஷுக்கு ரூ.60 முதல் ரூ.70 கோடி வரை சம்பளம் பேசப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இதனடிப்படையில், கோலிவுட்டில் அதிக சம்பளம் வங்கும் இயக்குநர்களில் லோகேஷ் தான் தற்போது முதலிடம் பிடித்துள்ளார்.
லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவாகும் தலைவர் 171 படம் 2024ம் ஆண்டு தீபாவளி ஸ்பெஷலாக வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
லோகேஷ் கனகராஜ் அடுத்து கைதி படத்தின் இரண்டாம் பாகத்தை இயக்குவார் என்று கூறப்பட்ட நிலையில் இடையில் இந்த படத்தை இயக்கிவிட்டு திரும்ப இருப்பதால் ஏற்கனவே பேசப்பட்ட பழைய சம்பளமே அவருக்கு கொடுக்கப்படும் என்று கூறப்படுகிறது. இதனை அடுத்து அவர் ராஜ் கமல் பிலிம்ஸ் இண்டர் நேஷனல் நிறுவனத்தில் பணிபுரியும்போது அவருக்கு உச்சபட்ச சம்பளமாக இருக்கும் என்று தெரிகிறது.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
-
Menu