/* */

Leo ரெடியா? அப்டேட் கொடுக்க தயாரான லோகேஷ் கனகராஜ்!

லியோ அப்டேட் கொடுக்கப்போகும் லோகேஷ் கனகராஜ்! அடி தூள் என கொண்டாடும் ரசிகர்கள்

HIGHLIGHTS

Leo ரெடியா? அப்டேட் கொடுக்க தயாரான லோகேஷ் கனகராஜ்!
X

தளபதி விஜய்யின் பிறந்த நாள் ஜூன் 22ம் தேதி வரவுள்ளதைத் தொடர்ந்து லியோ படத்திலிருந்து சூப்பர் அப்டேட் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்பட்டு வரும் நிலையில், லோகேஷ் கனகராஜ் தனது சமூக வலைத்தள கணக்குகளில் பதிவிட்டுள்ளதை ரசிகர்கள் உற்சாகமாக பகிர்ந்து வருகின்றனர்.

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கமல்ஹாசன் தயாரித்து நடித்த படம் விக்ரம். விஜய் சேதுபதி, பஹத் பாசில் உள்ளிட்டோர் இணைந்து நடித்த இந்த படம் தமிழ், தெலுங்கு, ஹிந்தி என மூன்று மொழிகளிலும் பட்டையைக் கிளப்பியது. கேரளா, ஆந்திரா, கர்நாடகா, வட இந்தியா என அனைத்து இடங்களிலும் சக்கை போடு போட்டது. உலக அளவிலும் படம் திரையிடப்பட்டு நல்ல வசூலைப் பெற்றது.

இந்த படத்தையடுத்து விஜய்யுடன் இணைந்துள்ளார் லோகேஷ் கனகராஜ். இந்த படத்துக்கு லியோ என்று பெயரிட்டுள்ளனர். விஜய், திரிஷா, பிரியா ஆனந்த், சஞ்சய் தத், கௌதம், மிஷ்கின், அர்ஜூன், மன்சூர் அலிகான் என படத்தில் ஏகப்பட்ட நட்சத்திர பட்டாளம் இருக்கிறது. முதலில் சென்னையில் படப்பிடிப்பு ஓரிரு நாட்கள் நடைபெற்ற நிலையில், அடுத்து 60 நாள் ஷெட்யூலுக்காக காஷ்மீர் புறப்பட்டு சென்றது படக்குழு.

காஷ்மீரில் தொடர் படப்பிடிப்பு முடிந்த நிலையில், சென்னையில் இரண்டு பாகங்களாக இரண்டு கட்ட படப்பிடிப்புகள் நடைபெறும் என அறிவிக்கப்பட்டது. முதல் கட்ட படப்பிடிப்பில் விஜய், திரிஷா, சஞ்சய் தத் உள்ளிட்டோர் கலந்து கொண்ட நிலையில், அடுத்த கட்ட படப்பிடிப்பு நேற்று துவங்கியிருக்கிறது. கிட்டத்தட்ட 85 சதவிகித படப்பிடிப்பு முடிந்துவிட்டதாக கூறப்படுகிறது.

இதனிடையே, இந்த படத்தில் விக்ரம் படத்தின் கதாபாத்திரங்கள் பல வந்து செல்லும் வகையில் படமாக்கப்பட்டு வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. விக்ரம் படத்தில் நடித்த மாயா லியோ படத்திலும் நடிக்க ஒப்பந்தமாகியிருக்கிறார். நரேன், ஏஜன்ட் டினா கதாபாத்திரத்தில் நடித்த வசந்தி, கைதி படத்தில் நடித்த ஜார்ஜ் மரியான் உள்ளிட்ட பலரும் இந்த படத்தில் நடிக்கின்றனர் என தகவல் வெளியாகியுள்ளது.

தளபதி விஜய்யின் பிறந்த மாதம் என்பதால் இந்த மாதத்தில் நிச்சயம் லியோ அப்டேட் கிடைக்கும் என்று ரசிகர்கள் காத்திருந்தார்கள். அவர்கள் எதிர்பார்த்த வகையில் வரும் ஜூன் 22ம் தேதி லியோ படத்தின் முதல் பாடல் வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. நா ரெடி என தொடங்கும் பாடல் வெளியாகும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.




Updated On: 16 Jun 2023 12:17 PM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    பிறந்தநாளை கொண்டாடுவோம் வாங்க..!
  2. நாமக்கல்
    வெளிநாடுகளில் நர்சிங் வேலைக்கு செல்பவர்கள், அந்நிய மொழி பயிற்சி பெற...
  3. நாமக்கல்
    போதமலைக்கு ரூ. 19.57 கோடி மதிப்பில் புதிய சாலை அமைக்கும் பணி :...
  4. லைஃப்ஸ்டைல்
    அற்புதமான உடல் திடத்தைப் பெற இத ஃபாலோ பண்ணுங்க..!
  5. ஆன்மீகம்
    பரசுராம் ஜெயந்தி 2024 - நாள், நேரம், சிறப்புகள் என்னென்ன தெரியுமா?
  6. ஈரோடு
    ஈரோடு நாடாளுமன்றத் தொகுதி வாக்கு எண்ணும் மையத்தில் ஆட்சியர் ஆய்வு
  7. சோழவந்தான்
    சோழவந்தான் அருகே ,தென்கரை உச்சி மாகாளியம்மன் ஆலய விழா..!
  8. வீடியோ
    Vijay-யுடன் ரகசிய சந்திப்பு | வெளிப்படையாக பதில் சொன்ன Seeman |...
  9. லைஃப்ஸ்டைல்
    குழந்தையின் முதல் பிறந்தநாளா.. பெற்றோருக்கு கூறும் வாழ்த்துகள்
  10. காஞ்சிபுரம்
    சிலாம்பாக்கம் தடுப்பணை பணிகள் 50சதவீதம் நிறைவு..!.