தெலுங்குக்குப் போகவிருக்கிறார் லோகேஷ் கனகராஜ்… 'விக்ரம்' காட்டிய வழி..!

தெலுங்குக்குப் போகவிருக்கிறார் லோகேஷ் கனகராஜ்… விக்ரம் காட்டிய வழி..!
X
'விக்ரம்' படத்தின் இமாலய வெற்றிக்குப் பிறகு, தெலுங்கில் ராம்சரண், அல்லு அர்ஜுன் ஆகியோரை, லோகேஷ் கனகராஜ் இயக்கபோகிறாராம்.

இயக்குநர் லோகேஷ் கனகராஜின் இயக்கத்தில் அண்மையில் வெளியான 'விக்ரம்' படம், உலகளவில் மூன்றாவது வாரமாக நிறைந்த திரையரங்கக் காட்சிகளாக இமாலய வெற்றியுடன் 300 கோடிக்கும் மேலாக வசூலில் சாதனை படைத்து ஓடிக் கொண்டிருக்கிறது.

படத்தின் நாயகனும் தயாரிப்பாளருமான நடிகர் கமல்ஹானுக்கும் படத்தில் நடித்த ஃபஹத் ஃபாசில், விஜய் சேதுபதி, சூர்யா மற்றும் படக்குழுவினர் அனைவருக்கும் வரவேற்பும் வாழ்த்துகளும் வந்து குவிந்தபடியே உள்ளன.

மேலும், கமல்ஹாசனை இந்தியத் திரையுலகத்தின் முன்னணிக் கலைஞர்கள் அனைவரும் வாழ்த்திப் புகழ்கின்றனர். இந்தநிலையில், தெலுங்கு சூப்பர் ஸ்டார் சிரஞ்சீவி, நடிகர் கமல்ஹாசனையும் இயக்குநர் லோகேஷ் கனகராஜையும் தனது வீட்டுக்கு நேரில் அழைத்து விருந்து உபசரித்து, வாழ்த்துகள் கூறிப் பாராட்டி மகிழ்ந்தார்.

அதோடு, இயக்குநர் லோகேஷ் கனகராஜை மிகவும் வியந்து பாராட்டிய நடிகர் சிரஞ்சீவி, தனது மகனும் நடிகருமான ராம் சரணை வைத்து, தெலுங்குப் படம் ஒன்றை இயக்கித்தரும்படி வேண்டுகோள் விடுத்திருக்கிறார்.

அதேநேரம் ஏற்கெனவே லோகேஷ் கனகராஜ், ஸ்டைலிஷ் ஸ்டாரான அல்லு அர்ஜுனுக்கு ஒரு கதையின் ஒண் லைன் ஸ்டோரி சொல்லியிருக்கிறார். எனவே, விரைவில் லோகேஷ் டீம் தெலுங்கு பேசப்போவதாக தகவல் றெக்கை கட்டிப் பறக்குது.

இந்தநிலையில், லோகேஷ் கனகராஜ் 'விக்ரம்' படத்தை அடுத்து நடிகர் விஜய்யின் 67வது திரைப்படம் 'விக்ரம்3', 'கைதி2' என அடுத்தடுத்து ரசிகர்களின் எதிர்பார்ப்புக்கு உள்ளாகியிருக்கும் படங்களை கைவசம் வைத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Tags

Next Story
கணித மேதை ராமானுஜன் பெயரில் பல்கலைக்கழகம் அமைக்க வேண்டும் - வரி செலுத்துவோர் மக்கள் நல்வாழ்வு சங்கம்  வலியுறுத்தல்!