வாழ்' திரைப்படத்தின் ஸ்கிரிப்ட் என்ன தெரியுமா? கள்ளக்காதலி கருக்கதை ..!

Life Movie
X

வாழ் திரைப்படம்

ஆதி காலத்தில் இருந்தே இந்த மனித வாழ்க்கைக்கு அர்த்தம் ஏதுமுண்டா, வாழ்வு என்பதுதான் என்ன? என்பன போன்ற கேள்விகளை மனிதன் கேட்டு பதில் தேடிக் கொண்டேதான் வருகிறான்.

ஆதி காலத்தில் இருந்தே இந்த மனித வாழ்க்கைக்கு அர்த்தம் ஏதுமுண்டா, வாழ்வு என்பதுதான் என்ன? என்பன போன்ற கேள்விகளை மனிதன் கேட்டு பதில் தேடிக் கொண்டேதான் வருகிறான்.

எல்லோருடைய வாழ்க்கையிலும் பெரும் குழப்பம், வன்முறைகள், எதிர்ப்புகள், சண்டைகள், உள்ளங்கைக்குள் அடங்கி விட்ட செல்போன் மூலம் வந்தடையும் சர்ச்சைகள், கருத்துகள், தேசிய உணர்வுகள் முதலியவைக் குறித்து அன்றாடம் உலக அளவில் ஆயிரக்கணக்கான ஆய்வுக்கட்டுரைகள் வெளியாகும் சூழலில் ஒரு மிஷின் வாழ்க்கை வாழும் நாயகன் வெறுத்து போய் புதுசாகக் கிடைத்த கள்ளக்காதலியுட்ன் ஒரு பயணத்தில் அவனுக்கு ஏற்பட்ட அனுபவங்களே இந்த வாழ்மேற்கொள்கிறான். அந்த பயணத்தில் அவனுக்கு ஏற்பட்ட அனுபவங்களே இந்த வாழ். தொப்புளுக்கு மேல் பசி உள்ளவர்களுக்கு கொஞ்சூண்டு பிடிக்கலாம்.

கொஞ்சம் விரிவாகக் கதையை தினத்தந்தி பாணியில் சொல்வதானால் பிரதீப் (ஹீரோ) ஒரு ஐடி கம்பெனியில் வேலை பார்த்து வரும். இவரை ஒரு பெண் துரத்தி துரத்தி காதலிக்கிறார். ஆனால் இவரோ அவர் மீது அதிக ஈடுபாடு இல்லாமல் இருக்கிறார். இந்நிலையில் எதிர்பாராதவிதமாக மிசஸ் பானு (ஆம்.. மேரேஜ் ஆன நாயகி) சந்திக்கிறார். பிறகென்ன..? பிரதீப்பும், பானுவும் பழக ஆரம்பிக்கிறார்கள். இந்த பழக்கம் ஒரு நீண்ட தூர பயணத்தை ஏற்படுத்துகிறது. இறுதியில் இந்த பயணம் ஏன்? எங்கு? எப்படி முடிந்தது? என்பதே படத்தின் கதை. அதாவது 'நாம் சந்திக்கும் ஒவ்வொரு மனிதரும் நாம் வாழ்க்கையை புரட்டிப் போட்டு விட்டு போகிறார்' என்பதை சொல்கிறார்களாம்.

வழக்கமான வேலை, வயக்கமான வீடியோ கேம்ஸ், ஒரே டைப்பிலான உணவு என்று அரையடி ஸ்கேலில் வாழும் ஐ டி எப்ளாயீ பிரதீப் நாயகனாக பாஸ் மார்க் வாங்குகிறார்..பானு &, திவா என்ற இரு லேடீஸ் கிடைத்த வாய்ப்பில் கவனம் பெற முயன்று இருக்கிறார்கள். இதெல்லாம் தாண்டி என்னதான் இப்படத்தின் ஆப்பரேட்டராக இருந்தாலும் ஷெல்லி கலிஸ்டின் கேமராவும், பிரதீப் குமாரின், பின்னணி இசையும் பாடல்களும்தான் இந்த வாழ் படத்தை முழுமையாக பார்க்க வைத்தது என்று சொன்னால் மிகையல்ல

ஆனால் நார்மலாக போய் கொண்டிருந்த வாழ்க்கையில் கள்ளக்காதலி அதுவும் ஹஸ்பெண்டை காலி செய்த கொலையாளியுடன் பயணம் செய்யும் போது விபத்து, என்று அது இது எதை எல்லாமோ எதிர் கொள்வதில் முழுமையான திரைக்கதையை உருவாக்குவதில் கோட்டை விட்ட அருவி படைப்பாளிக்கு இந்த வாழ் பெரும் சறுக்கல் என்பதை சொல்லியே ஆக வேண்டும். கொஞ்சம் உரத்தக் குரலில் சொல்வதானால் கட்டிய புருசனை கொலை செய்து அந்த பாடி(!)யை ஃபிரிட்ஜில் வைத்துவிட்டு, கேஷூவலாக புத்தம் புது பாய் பிரண்டோடு டூர் போகும் ஹீரோயின் கதை எல்லாம் அம்புலி மாமாவில் வந்தால் கூட கோலிவுட் ரசிகன் எவனும் ரசிக்க மாட்டான். இது போன்ற சினிமாவுக்கென உங்கள் நேரத்தை செலவிட வேண்டாம்.

மொத்தத்தில் பாவம் புரொடியூசர் சிவகார்த்திகேயன்

Tags

Next Story
கருணை இல்ல மேம்பாட்டுப் பணி..! பண்ணாரி அம்மன் கோயிலில் முதல்வா் காணொலியில் தொடக்க விழா..!