விக்னேஷ் சிவன் சீக்ரெட்.. கையும் களவுமாக பிடித்த தயாரிப்பாளர்.. விலகிய நயன்தாரா.. இதுதான் காரணமா?

விக்னேஷ் சிவன் சீக்ரெட்.. கையும் களவுமாக பிடித்த தயாரிப்பாளர்.. விலகிய நயன்தாரா.. இதுதான் காரணமா?
X
விக்னேஷ் சிவன் இயக்கத்தில் பிரதீப் ரங்கநாதன், க்ரித்தி ஷெட்டி நடிக்கும் புதிய படம் நயன்தாராவால் கைவிடப்படும் நிலையில் இருக்கிறதாம்.

கணவர் விக்னேஷ் சிவன் அடுத்ததாக இயக்கும் படத்திலிருந்து நயன்தாரா விலகி விட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. இதற்கான காரணமும் அந்த படத்தின் தலைப்பு மீது எழுந்த சர்ச்சைதான் என்றும் கூறப்படுகிறது.

விக்னேஷ் சிவன் இயக்கத்தில், பிரதீப் ரங்கநாதன் கதாநாயகனாக நடிக்கவுள்ள திரைப்படம் 'எல்.ஐ.சி'. இந்தப் படத்தில், பிரதீப்பின் காதலியாக க்ரித்தி ஷெட்டி நடிக்கவுள்ளதாக அறிவிக்கப்பட்டிருந்தது. மேலும், பிரதீப்பின் அக்காவாக நயன்தாரா நடிக்கவுள்ளதாக தகவல் வெளியாகியிருந்தது. இதனால் இந்த படத்தின் மீது மிகப் பெரிய எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

க்ரித்தி ஷெட்டி தமிழில் அறிமுகமாகும் படம் இதுதான் என்று கூறப்படுகிறது. மேலும் இந்த படம் லவ் டுடே படத்திற்கு பிறகு பிரதீப் ரங்கநாதன் நடிக்கும் படம் என்பதால் ஒருவித எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. அஜித் பட வாய்ப்பு வந்தும் கை நழுவி போன நிலையில், தனது இயக்குநர் அவதாரத்தை புதுப்பிக்க விக்னேஷ் சிவன் நல்ல கதையை டிரெண்ட் செட்டராக உருவாக்கியிருப்பார் என்றும் கருத்து நிலவுகிறது. இந்த படத்தில் நயன்தாராவும் இருப்பதால் கூடுதல் வரவேற்பு இருக்கும் என்றும் எதிர்பார்க்கப்பட்டது.

ஆனால், சமீபத்தில் வெளியான தகவல்களின்படி, நயன்தாரா இந்தப் படத்தில் இருந்து விலகியுள்ளார். அவருக்கு பதில் வேறு ஒரு நடிகை ஒப்பந்தம் செய்யப்படவுள்ளதாக கூறப்படுகிறது. இதனால் ரசிகர்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர். விக்னேஷ் சிவன் தவிர மற்ற அனைவரும் புதுமுகங்கள் என்பதால், இந்த படத்தில் நயன்தாரா இருந்தால் கூடுதல் கவனம் கிடைக்கும் என விக்னேஷ் சிவன் எதிர்பார்த்திருந்த நிலையில், நயன்தாரா இந்த படத்திலிருந்து விலகியுள்ளார்.

இந்தப் படத்தின் டைட்டிலால் எழுந்துள்ள சர்ச்சை காரணமாக நயன்தாரா இந்தப் படத்தில் இருந்து விலகியிருக்கலாம் என்று கூறப்படுகிறது. 'எல்.ஐ.சி' என்ற பெயர், இந்திய லைஃப் இன்சூரன்ஸ் கார்ப்பரேஷனின் பெயருடன் ஒத்துப்போவதால், அந்த நிறுவனம் இந்தப் படத்தின் தயாரிப்பாளர்களுக்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளது. டைட்டிலை மாற்றாவிட்டால் சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என்று அந்த நோட்டீஸில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த சர்ச்சை காரணமாக, படத்தின் தயாரிப்பாளர்கள் டைட்டிலை மாற்ற முடிவு செய்துள்ளதாகவும், புதிய டைட்டிலை விரைவில் அறிவிக்கப்படும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. இந்த டைட்டிலை மாற்றாவிட்டால் மிகப் பெரிய வழக்கை எதிர்கொள்ள நேரிடும் என தயாரிப்பு தரப்பு, இயக்குநருக்கு அழுத்தம் கொடுத்து வருகிறது.

அதே நயன்தாரா இப்படத்தில் இருந்து விலகியதற்கான காரணம் இதுதான் என்று உறுதியாகக் கூற முடியாது. இருப்பினும், டைட்டில் சர்ச்சை ஒரு முக்கிய காரணமாக இருக்கலாம் என்று கருதப்படுகிறது. இப்படி ஒரு சர்ச்சைக்குரிய டைட்டில் கொண்ட படத்தில் நாம் பணி புரிய வேண்டாம் என நயன்தாரா கூறியதாக சமூக வலைத்தளங்களில் பேசப்பட்டு வருகிறது. ஆனால் இதில் நயன்தாராவின் சம்பளம்தான் முக்கிய காரணமாக இருந்திருக்கும்.

12 கோடி ரூபாய் சம்பளம் வாங்கிக் கொண்டு நடித்து வரும் நயன்தாராவின் கடைசி 12 படங்கள் மண்ணைக் கவ்வின. பெரிய அளவில் எந்த வெற்றியையும் பெறாததால், அவரை ஒப்பந்தம் செய்த அனைத்து படங்களும் கைவிட்டன. இந்நிலையில், விக்னேஷ் சிவன் திட்டமிட்டே இந்த கதையில் நயன்தாராவை பொருத்தி அவர் கணக்கில் 12 கோடியை எழுதிவிட்டதாகவும், அதை தயாரிப்பாளர் கண்டுபிடித்து விக்னேஷ் சிவனை வாங்கு வாங்கென்று வாங்கிவிட்டதாகவும் கூறப்படுகிறது.

நயன்தாராவுக்கு எந்த படமும் ஓடவில்லை. அப்றம் எதுக்கு 12 கோடி சம்பளம் என கேள்வி எழுப்ப, விக்னேஷ் சிவன் எதுவும் பேச முடியாமல் நின்றிருக்கிறார். அவரின் சம்பளம் இந்தப் படத்தின் தயாரிப்பாளர்களுக்கு அதிகமாக இருப்பதால், அவரை மாற்றிவிட்டு, வேறு நடிகையை அந்த கதாபாத்திரத்தில் போட ஏற்பாடுகள் நடக்கின்றன. இதில் தன்னுடைய பெயர் சேதமடையாமல் இருக்க தானே விலகிவிட்டதாக தனது நண்பர்கள் வட்டாரத்தில் பேசி நயன்தாரா இப்படி ஒரு பெயரை உருவாக்கி வருவதாக கூறப்படுகிறது.

ஏற்கனவே அஜித் படத்தில் ஜோடியாக நயன்தாராதான் வேண்டும் என விடாப்பிடியாக நிற்க லைகா விக்னேஷ் சிவனைத் தூக்கி எறிந்தபிறகு, இப்போது விடாமுயற்சி திரைப்படத்தில் திரிஷா, அஜித் ஜோடியாக நடித்து வருவது குறிப்பிடத்தக்கது.

Tags

Next Story
பவானிசாகர் தொகுதியில் புதிய குடிநீர் திட்டங்கள்: 1 கோடி வளர்ச்சி பணிகள் ஆரம்பம்