நடிகர் அஜித்குமார் கேரளாவில் சுற்றுப்பயணம் செய்து வருகிறார்

அஜித் நடிக்க இருக்கும் 'அஜித் 61' படத்தின் படப்பிடிப்பு இன்னும் ஒரு சில நாட்களில் நடைபெற உள்ளது என்பதும் இந்தப் படத்தின் படப்பிடிப்புக்காக சென்னை அண்ணாசாலை செட், ஐதராபாத்தில் உள்ள ராமோஜிராவ் பிலிம் சிட்டியில் தயாராக இருப்பதாகவும் தகவல் வெளியாகி உள்ளது.
இந்நிலையில் கடந்த சில நாட்களாக அஜித் கேரளாவில் சுற்றுப்பயணம் செய்து வருகிறார் அங்கு உள்ள கோவில் ஒன்றில் அதிகாலையில் அஜித் சுவாமி தரிசனம் செய்தார்
இந்நிலையில் அஜீத் தற்போது கேரளாவில் ஆயுர்வேத சிகிச்சை எடுத்துக் கொண்டிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. கேரளாவில் இருக்கும் பாரம்பரிய ஆயுர்வேத சிகிச்சை மையத்தில் அஜித் சிகிச்சை பெற்றதாகவும் அவருடைய அடுத்த படத்திற்காக உடல் எடையை குறைப்பதற்காக இந்த சிகிச்சை செய்யப்பட்டதாகவும் கூறப்படுகிறது .
கேரளாவில் தனக்கு ஆயுர்வேத சிகிச்சை அளித்த மருத்துவர்கள் மற்றும் பணியாளர்களுக்கு நன்றி தெரிவித்து அஜித் எழுதிய கடிதம் இணையதளங்களில் வைரலாகி வருகிறது.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
-
Menu