LEO பற்றி அப்டேட் கொடுத்த லோகேஷ்... அப்ப இதுவும் படத்துல வருமா?

LEO பற்றி அப்டேட் கொடுத்த லோகேஷ்... அப்ப இதுவும் படத்துல வருமா?
X
சினிமா நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொண்ட லோகேஷ் கனகராஜ் விஜய் ரசிகர்கள் மகிழும் வகையில் அப்டேட் ஒன்றைத் தந்திருக்கிறார்.

சினிமா நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொண்ட லோகேஷ் கனகராஜ் விஜய் ரசிகர்கள் மகிழும் வகையில் அப்டேட் ஒன்றைத் தந்திருக்கிறார்.

மாஸ்டர் படத்தைத் தொடர்ந்து விஜய் வாரிசு படத்தில் நடித்தார். தில் ராஜூ தயாரிப்பில் வம்சி இயக்கிய வாரிசு படம் விமர்சன ரீதியில் சுமார் என்றாலும் இதுவரை உள்ள வசூல் சாதனைகளை முறியடித்து விஜய்யின் அதிகபட்ச வசூல் திரைப்படமாக அமைந்தது. இதனையடுத்து மீண்டும் லோகேஷ் கனகராஜுடன் சேர்ந்து படம் பண்ணிக்கொண்டிருக்கிறார் தளபதி விஜய்.


முதல்கட்டமாக சென்னையிலும், சில காட்சிகள் கொடைக்கானலிலும் படம்பிடிக்கப்பட்ட நிலையில், நீண்ட ஷெட்யூலுக்காக காஷ்மீர் சென்றது படக்குழு. லோகேஷ், விஜய், திரிஷா, கௌதம் மேனன், மிஷ்கின் உள்ளிட்ட படக்குழுவினர் ஜனவரி மாதம் காஷ்மீர் சென்றனர்.

விஜய், திரிஷா நடிக்கும் காட்சிகள், விஜய்க்கான சண்டைக்காட்சிகள் என கிட்டத்தட்ட 60 நாட்கள் படப்பிடிப்பு காஷ்மீரில் நடைபெற்றது. முதலில் மிஷ்கின் போர்சன்களை கம்ப்ளீட் செய்துவிட்டு அவரை சென்னைக்கு வழியனுப்பி வைத்தனர். அடுத்து கௌதம் மேனன் போர்சன்களையும் முடித்து அவரும் கிளம்பி சென்னைக்கு வந்தார். இப்படி ஒவ்வொருத்தராக வேலை முடிய முடிய பேக்அப் செய்துகொண்டிருந்த நிலையில், மார்ச் 23ம் தேதி மொத்த படக்குழுவும் சென்னை திரும்பியது.


அடுத்தக்கட்ட படப்பிடிப்பு சென்னையில் நடப்பதாக கூறப்படுகிறது. ஹைதராபாத்திலும் ஒரு ஷெட்யூல் திட்டமிடப்பட்டிருந்ததாகவும் அதுவும் சென்னைக்கு மாற்றப்பட்டிருப்பதாகவும் கூறப்படுகிறது.

லியோ படம் குறித்த அறிவிப்பானது டைட்டில் லுக்குடன் வெளியான நிலையில், அதில் விஜய் ஒரே ஒரு வசனம் பேசியிருப்பார். பிளடி ஸ்வீட் என்பதே அந்த வசனம். விக்ரம் படத்திலும் இதுபோல ஒரு டைட்டில் இண்ட்ரோ காட்சி இருக்கும். அதில் வரும் டயலாக் தான் ஆரம்பிக்கலாங்களா. இது ரசிகர்களை மிகவும் ஈர்த்தது.


-இந்நிலையில் விக்ரம் படம் வெளியானபோது ரசிகர்களுக்கு சர்ப்ரைஸ் எலிமன்ட்களில் ஒன்றாக இந்த டயலாக்கும் இருந்தது. இன்டர்வெல்லில் கமல்ஹாசன் முகமுடியைத் திறந்து ஆரம்பிக்கலாங்களா என்று கூறுவது படத்தின் பீக்காக பார்க்கப்பட்டது.

இதனையடுத்து லோகேஷ் கனகராஜ் இயக்கும் புதிய படமான லியோவிலும் இந்த பிளடி ஸ்வீட் டயலாக் இடம்பெறும் என்று கூறப்பட்டு வந்தது. இதனை லோகேஷிடமே கேட்டார்கள். லோகேஷ் இந்த கேள்விக்கு பதிலளிக்கையில், அது உண்மைதான் எனும்படியாக கூறிவிட்டார். இதனால் ரசிகர்கள் குதூகலமடைந்துள்ளனர்.

Tags

Next Story
கொடுமுடியில் விவசாயிகள் போராட்டம் - அதிகாரிகள் செயலாற்றாமல் இருந்ததா