Leo FDFS 4 மணி கிடையவே கிடையாது! தமிழக அரசு இறுதி...!

Leo FDFS 4 மணி கிடையவே கிடையாது! தமிழக அரசு இறுதி...!
X
லியோ படத்துக்கு அதிகாலை காட்சி நிச்சயமாக கிடையாது என அரசு தரப்பில் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

லியோ படம் வரும் அக்டோபர் 19ம் தேதி அதிகாலை 4 மணிக்கு திரையிடப்படாது என்பது தற்போது அதிகாரப்பூர்வமாக தெரியவந்துள்ளது. அரசு அறிவிப்பின்படி அதிகாலை காட்சிக்கு அனுமதி எதுவும் அளிக்கப்படவில்லை. முதல் காட்சி 9 மணிக்கு தான் துவங்க வேண்டும் என அரசு தரப்பில் உத்தரவிடப்பட்டுள்ளது.

தளபதி விஜய்யும் இயக்குநர் லோகேஷ் கனகராஜும் இணையும் லியோ திரைப்படம் வரும் அக்டோபர் 19ம் தேதி உலகம் முழுக்க வெளியாக இருக்கிறது. இந்த படத்தில் விஜய்க்கு ஜோடியாக திரிஷா நடித்துள்ளார். அவர்களுடன் கௌதம் மேனன், ப்ரியா ஆனந்த் , மன்சூர் அலிகான், மிஷ்கின், அர்ஜூன், சஞ்சய் தத் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில்

எப்படி துவங்கியது?

படம் சென்னை, காஷ்மீர், கொடைக்கானல் என 3 இடங்களில் கிட்டத்தட்ட 90 நாட்கள் முழுமையாக ஷூட்டிங் நிறைவு பெற்று, டப்பிங் பணிகளையும் முடித்துக் கொண்டு தற்போது கடைசி கட்ட வேலைகளில் மும்முரமாக இருக்கிறது படக்குழு.

படத்திலிருந்து நா ரெடிதான் வரவா, பேட் ஆஸ், அன்பெனும் ஆயுதம் என்று 3 பாடல்கள் இதுவரை வெளியாகியுள்ளன. இன்னும் 2 பாடல்கள் படத்திலேயே வெளியாகும் என்று கூறப்படுகிறது. அனிருத் தனது குரலில் பாடல்களைப் பாடி பலரது எதிர்ப்பையும் சந்தித்து வருகிறார்.

ஓவர்சீஸ் வெளியீடு

லியோ திரைப்படத்தின் ஓவர்சீஸ் காப்பிகள் 14ம் தேதியே சென்றடையும் வகையில் முன்கூட்டியே திட்டமிட்டிருக்கிறார்களாம். வழக்கமாக 19ம் தேதி படம் வெளியாகிறது என்றால் 18ம் தேதி நள்ளிரவில்தான் சென்றடையும். அதுவரை படம் ரிலீஸ் ஆகுமா ஆகாதா என உயிரைக் கையில் பிடித்துக்கொண்டு விநியோகஸ்தர்கள் இருப்பார்களாம். அதுபோன்ற சிரமங்களை ஓவர்சீஸ் விநியோகஸ்தர்களுக்கு கொடுக்கவேண்டாம் என லியோ படக்குழு இப்படி திட்டமிட்டிருக்கிறதாம்.

இதுமட்டுமின்றி ஆஸ்திரேலியா, சிங்கப்பூர், மலேசியா, இங்கிலாந்து, அமெரிக்கா என உலகில் தமிழர்கள் அதிகம் வாழும் பகுதிகளில் வெளியாகும் லியோ படத்துக்கான தணிக்கையையும் இப்போதே பெற்று தயாராக வைத்திருக்கிறார்களாம்.

புகை நமக்கு பகை!

ஆரம்பத்தில் விஜய் புகைப்பிடிக்கும் காட்சிகளுக்காக பல எதிர்ப்புகளைச் சந்தித்தார். இந்நிலையில் டிரைலரில் விஜய்யை கெட்ட வார்த்தைபேச வைத்துவிட்டார் லோகி என அவரையும் எதிர்க்க ஒரு கட்டத்தில் அதை மியூட் செய்து வெளியிட்டுள்ளனர். இத்தனை எதிர்ப்புகளையும் தாண்டி படம் வெளியாக சரியாக 1 வாரம் இருக்கிறது என்று நினைக்கும்போது, 4 மணி காட்சிகள் மட்டுமின்றி, 7 மணி, 9 மணி காட்சிகளும் இல்லாமல் 11 மணிக்குதான் முதல் காட்சி திரையிட வேண்டும் என தமிழக அரசு உத்தரவு இருப்பதாக தகவல் கிளம்ப, விஜய் ரசிகர்கள் சோகத்தில் மூழ்கினர்.

இந்நிலையில் அரசு தரப்பிலிருந்து வந்த அறிவிப்பில் படக்குழுவிடமிருந்து கேட்கப்பட்ட அனுமதி கடிதத்துக்கு பதிலளிக்கும் வகையில், படத்தை 4, 7 மணிக்கு திரையிட அனுமதி அளிப்பதாக அந்த உத்தரவு கூற, விஜய் ரசிகர்கள் கொண்டாடத் தொடங்கிவிட்டனர்.

4 மணி ஷோ... லலித் உறுதி.!

இதனையடுத்து ஒரு குண்டைத் தூக்கி போட்டனர். அதாவது முதல் காட்சி என்பது 4 மணிக்குதான் அல்லது 7 மணிக்கு தான் என்பதை குறிப்பிடாமல் அந்த உத்தரவு வந்திருப்பதை எடுத்துக் காட்டி, அதிகாலை காட்சிக்கு அனுமதி இல்லை, ஒரு நாளைக்கு 5 காட்சிகள் என்பதற்கே அனுமதி என்று பேச ஆரம்பித்துவிட்டனர்.

இந்நிலையில் லலித் தனது நெருங்கிய வட்டாரத்திலும், விநியோகஸ்தர்களிடமும் பேசிய தகவலின் அடிப்படையில் அதிகாலை 4 மணி காட்சி நிச்சயம் திரையிடப்படும் என இரண்டு நாட்களாக பேசப்பட்டு வந்தது. ஆனால் இன்று அரசு ஒரு அதிரடி அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

அரசு இறுதி முடிவு!

அதிகாலை 4 மணி காட்சிக்கு அனுமதி இல்லை என அரசு திட்டவட்டமாக தெரிவித்துள்ளது. காலை 9 மணி தொடங்கி நள்ளிரவு 1.30 மணி வரை மொத்தம் 5 காட்சிகள் திரையிடலாம் எனவும், அதற்கு முன்னோ, பின்னோ திரையரங்குகள் திறந்திருக்கக் கூடாது எனவும் கூறியுள்ளது.

பொதுவாக திரையரங்குகளில் 9 மணி, 12 மணி, 4 மணி, 7 மணி, 10.30 மணி என 5 காட்சிகள் திரையிடப்பட வாய்ப்பு இருப்பதாக ரசிகர்களிடையே பேச்சு எழுந்துள்ளது. வழக்கமாக 11.30 மணிக்கு முதல் காட்சியும் 2.30 மணிக்கு இரண்டாவது காட்சியும், 6 அல்லது 6.30 மணிக்கு 3வது காட்சியும், 10 அல்லது 10.30 மணிக்கு இரவுக் காட்சியும் திரையிடப்படும்.

Tags

Next Story
ரயில் முன்பதிவில் மோசடி: பாதுகாப்பு படையினர் தீவிர விசாரணை!