வில்லன்னு பாத்தா ரெண்டு பேரும் அப்பாக்களாம்! லியோ அப்டேட் இதோ!

வில்லன்னு பாத்தா ரெண்டு பேரும் அப்பாக்களாம்! லியோ அப்டேட் இதோ!
X
லியோ படத்தில் கௌதம் மேனன் மற்றும் சஞ்சய் தத் ஆகியோரின் கதாபாத்திரங்கள் குறித்து தெரியவந்துள்ளது. இதில் டிவிஸ்ட்டாக இருவரும் வில்லன்கள் இல்லை என்பதாக தகவல் வெளிவந்துள்ளது. இதனால் ரசிகர்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர்.

லியோ படத்தில் கௌதம் மேனன் மற்றும் சஞ்சய் தத் ஆகியோரின் கதாபாத்திரங்கள் குறித்து தெரியவந்துள்ளது. இதில் டிவிஸ்ட்டாக இருவரும் வில்லன்கள் இல்லை என்பதாக தகவல் வெளிவந்துள்ளது. இதனால் ரசிகர்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர்.

லோகேஷ் கனகராஜ், விஜய் இருவரும் கடந்த படத்தில் மிகப் பெரிய வெற்றியைப் பதிவு செய்துள்ளனர். இவர்கள் இருவரும் இணைந்து முன்னதாக வெளியான மாஸ்டர் திரைப்படமும் மிகப் பெரிய வரவேற்பை பெற்றிருந்ததால் இந்த படத்தின் மீது இயல்பாகவே எதிர்பார்ப்பு எகிறியுள்ளது.

சென்னையில் முதல் ஷெட்யூல் நடந்தாலும் 60 நாட்கள் ஷெட்யூலுக்காக காஷ்மீருக்கு படக்குழு சென்ற போதுதான் உண்மையான ஷூட்டிங் நடந்தது. தளபதி விஜய், திரிஷா, பிரியா ஆனந்த் உள்ளிட்டோர் காஷ்மீரில் முக்கிய காட்சிகளில் நடித்துள்ளனர். விஜய், மிஷ்கின், கௌதம் மேனன், சஞ்சய் தத் உள்ளிட்டோர்கள் நடித்த காட்சிகள், மேலும் சில சண்டைக் காட்சிகளும் படமாக்கப்பட்டுள்ளன. இதனைத் தொடர்ந்து ஹைதராபாத் மற்றும் சென்னையில் இரண்டு ஷெட்யூல்களாக மொத்தம் 60 நாட்கள் நடப்பதாக கூறப்பட்டது. இந்நிலையில் இரண்டையும் ஒரே இடத்தில் எடுத்து முடிக்க திட்டமிட்டுள்ளதாம்.

இந்நிலையில், சஞ்சய் தத் இந்த படத்தில் விஜய்க்கு அப்பாவாகவும், கௌதம் மேனன் திரிஷாவுக்கு அப்பாவாகவும் நடிக்கிறார் என்று கூறுகிறார்கள். இதனால் ரசிகர்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர்.

அடுத்த 60 நாட்களாக விஜய், அர்ஜூன், சஞ்சய் தத், திரிஷா உள்ளிட்டோருடன் நடைபெற்று வரும் இந்த படப்பிடிப்பு வரும் மே மாத இறுதியில் அல்லது ஜூன் மாத துவக்கத்தில் முடிவடையும் என கூறப்படுகிறது. படப்பிடிப்பு முடிந்ததும், அடுத்து டப்பிங் உள்ளிட்ட போஸ்ட் புரொடக்ஷன் பணிகளைத் துவங்குவார்கள். அதற்கு ஒரு 30 நாட்கள் என திட்டமிட்டுள்ளனர். அனிருத் இசையில் முதல் பாடல் உருவாக்கப் பணிகள் நடைபெற்று வருகின்றதாம். தளபதி விஜய் பிறந்தநாளில் முதல் சிங்கிளை வெளியிட திட்டமிட்டு வருகிறார்களாம். இம்முறை படத்தின் இசை வெளியீட்டு விழாவை கோயம்புத்தூர் அல்லது மதுரையில் நடத்த திட்டமிடுங்கள் என்று கூறியிருக்கிறாராம்.

Tags

Next Story
கணித மேதை ராமானுஜன் பெயரில் பல்கலைக்கழகம் அமைக்க வேண்டும் - வரி செலுத்துவோர் மக்கள் நல்வாழ்வு சங்கம்  வலியுறுத்தல்!