லியோ படத்தில் இவரும் இருக்காரா? அப்ப விக்ரம் மட்டும்தான் பாக்கி?

லியோ படத்தில் இவரும் இருக்காரா? அப்ப விக்ரம் மட்டும்தான் பாக்கி?
X
லியோ படத்தில் நாளுக்கு நாள் இணைந்து வரும் பிரபலங்களின் பட்டியலைப் பார்த்துவிட்டு விக்ரம் படத்திலுள்ள எல்லாரும் இருக்காங்க அப்ப விக்ரம்?

லியோ படத்தில் நாளுக்கு நாள் இணைந்து வரும் பிரபலங்களின் பட்டியலைப் பார்த்துவிட்டு விக்ரம் படத்திலுள்ள எல்லாரும் இருக்காங்க அப்ப விக்ரம்? என எழுதி வருகின்றனர். கமல்ஹாசனும் இந்த படத்தில் வந்துவிட்டார் என்றால் நன்றாக இருக்குமே என்று பலரும் கருதுகின்றனர்.

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கமல்ஹாசன் தயாரித்து நடித்த படம் விக்ரம். விஜய் சேதுபதி, பஹத் பாசில் உள்ளிட்டோர் இணைந்து நடித்த இந்த படம் தமிழ், தெலுங்கு, ஹிந்தி என மூன்று மொழிகளிலும் பட்டையைக் கிளப்பியது. கேரளா, ஆந்திரா, கர்நாடகா, வட இந்தியா என அனைத்து இடங்களிலும் சக்கை போடு போட்டது. உலக அளவிலும் படம் திரையிடப்பட்டு நல்ல வசூலைப் பெற்றது.

இந்த படத்தையடுத்து விஜய்யுடன் இணைந்துள்ளார் லோகேஷ் கனகராஜ். இந்த படத்துக்கு லியோ என்று பெயரிட்டுள்ளனர். விஜய், திரிஷா, பிரியா ஆனந்த், சஞ்சய் தத், கௌதம், மிஷ்கின், அர்ஜூன், மன்சூர் அலிகான் என படத்தில் ஏகப்பட்ட நட்சத்திர பட்டாளம் இருக்கிறது. இந்நிலையில் இந்த படத்தில் விக்ரம் படத்தின் கதாபாத்திரங்கள் பல வந்து செல்லும் வகையில் படமாக்கப்பட்டு வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.

இப்போது விக்ரம் படத்தில் நடித்த மாயா லியோ படத்திலும் நடிக்க ஒப்பந்தமாகியிருக்கிறார். நரேன், ஏஜன்ட் டினா கதாபாத்திரத்தில் நடித்த வசந்தி, கைதி படத்தில் நடித்த ஜார்ஜ் மரியான் உள்ளிட்ட பலரும் இந்த படத்தில் நடிக்கின்றனர் என தகவல் வெளியாகியுள்ளது.

Tags

Next Story
கணித மேதை ராமானுஜன் பெயரில் பல்கலைக்கழகம் அமைக்க வேண்டும் - வரி செலுத்துவோர் மக்கள் நல்வாழ்வு சங்கம்  வலியுறுத்தல்!