தீயாய் சென்று கொண்டிருக்கும் லியோ படம்! லோகேஷ் செஞ்ச காரியம்!

தீயாய் சென்று கொண்டிருக்கும் லியோ படம்! லோகேஷ் செஞ்ச காரியம்!
X
எல்லா காட்சிகளையும் முடிச்சிட்டு வரும் மார்ச் 25ம் தேதி ஊருக்கு கிளம்ப திட்டமிட்டிருந்திருக்கிறார்கள். ஆனால் லோகேஷ் கனகராஜ் போட்டிருக்குற திட்டப்படி அதைவிட சீக்கிரமே முடிகிறதாம் ஷூட்டிங்.

ஆரம்பித்ததும் தெரியாம முடிவதும் தெரியாம சென்னைக்கும் காஷ்மீருக்கும் நடிகர்கள் போயிட்டு வந்துட்டு இருக்காங்க. ஆமா லோகேஷ் கனகராஜ்னா சும்மாவா என்று ரசிகர்களே கொண்டாடும் அளவுக்கு அவர் ஏன் இருக்கிறார் என்பதுதான் ஹைலைட். அவர் நடிகர்களுக்கும் சரி, தயாரிப்பாளர்களுக்கும் சரி எப்போதும் நேரத்தையும் பணத்தையும் வீணாக்குவதில்லை. இந்த ஒரு குவாலிட்டி போதுமே கொண்டாட என்று ரசிகர்கள் அவரைப் பற்றிய செய்திகளை நொடிக்கு நொடி வைரலாக்கிக் கொண்டிருக்கிறார்கள்.


தளபதி 67 படத்துக்கு லியோ என்று பெயர் வைத்ததிலிருந்து காஷ்மீர் சென்ற படக்குழு பட்டியல், காஷ்மீரில் கேங்ஃபயர், ரத்னகுமார் குடுத்த அப்டேட் என வாரம் ஒரு அப்டேட் கொடுத்து வருகிறது லியோ படக்குழு. இதற்கிடையில் மிஷ்கினும் ஒரு அப்டேட் கொடுத்து அடுத்தடுத்து லியோ குறித்தே பல விசயங்களைப் பேச வைத்துக் கொண்டிருக்கின்றனர்.

படத்தில் இருக்கும் சுவாரஸ்யங்கள் வெளியில் சொன்னால் கூட பரவாயில்லை இல்லாததையும் வெளியிட்டு ரசிகர்களை குழப்புவதை செய்யக்கூடாது என படக்குழு மீது புகார் எழுந்தது. லோகேஷ் கனகராஜ் எளிதில் ஆடியன்ஸ் பல்ஸ் பிடித்து சிக்சர் அடிப்பதில் வல்லவர். உடனக்குடன் அனைவரது போர்சன்களையும் முடித்து ஒவ்வொருவராக வரவழைத்து படப்பிடிப்பு முடிந்தது அவர்களை அனுப்பி வைத்து விடுகிறார்.


படப்பிடிப்பே இன்னும் முடியாத நிலையில் தளபதி விஜய் நடிக்கும் லியோ படத்துக்கான பிசினஸ் ரூ500 கோடியை நெருங்கி இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

வாரிசு படத்தைத் தொடர்ந்து லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் தளபதி 67 (Vijay Next Movie after Varisu) படம் உருவாகி வருகிறது. இதில் விஜய்யுடன், திரிஷா (Vijay and Trisha) உள்ளிட்ட பல நட்சத்திர பட்டாளமே நடித்து வருகிறது. தற்போது காஷ்மீரில் (Leo movie Shooting spot) ஷூட்டிங்கில் இருக்கும் இந்த படக்குழு சம்பந்தப்பட்ட புகைப்படங்கள் அவ்வப்போது வெளியாகி வைரலாகி வருகின்றன.

லியோ என பெயர் வைக்கப்பட்டிருக்கும் தளபதியின் 67வது படத்தின் படப்பிடிப்பு தற்போது காஷ்மீரில் நடந்து வருகிறது. முன்னதாக சென்னை மற்றும் கொடைக்கானலில் (Leo movie shooting locations) இரண்டு கட்ட குறுகிய படப்பிடிப்பு நடைபெற்றது. சென்னையில் விஜய் நடிக்கும் காட்சிகளும் கொடைக்கானலில் மன்சூர் அலிகான் காட்சிகளும் படம் பிடிக்கப் பட்டதாக கூறுகிறார்கள்.


சில வாரங்களுக்கு முன், விஜய், கௌதம் மேனன், சண்டைப் பயிற்சியாளர்கள் அன்பறிவ் ஆகியோர் கேங்க்ஃபயரில் இசை நிகழ்ச்சியோட நிற்கும் புகைப்படம் ஒன்று லோகேஷ் கனகராஜால் பகிரப்பட்டது. சில நொடிகளில் சமூக வலைத்தளங்கள் முழுக்க பரவி வைரலானது. இப்போது வரை பல புகைப்படங்கள் இதுபோல வெளிவந்த வண்ணம் இருக்கின்றன.

விஜய் ஜோடியாக திரிஷா நடிக்கும் இந்த படத்தில் பாலிவுட் நடிகர் சஞ்சய் தத் வில்லனாக நடிக்கிறார். அவர்களுடன் அர்ஜூன், மன்சூர் அலிகான், பிரியா ஆனந்த், மிஷ்கின், கௌதம் மேனன் உள்ளிட்ட பலர் நடித்து வருகிறார்கள். இதில் மன்சூர் அலிகான், மிஷ்கின், கௌதம் மேனன், அர்ஜூன் உள்ளிட்டோரின் காட்சிகள் படமாக்கப்பட்டு முடிக்கப்பட்டுவிட்டதாம். படப்பிடிப்பு முடிந்ததும் அனைவரும் அவரவர் வீட்டுக்கு சென்றுவிட்டார்கள் எனவும், இப்போது சஞ்சய் தத், விஜய் நடிக்கும் காட்சிகள் படமாக்கப்பட இருப்பதாகவும் கூறப்படுகிறது. இது மிகப்பெரிய ஆக்ஷன் சீக்குவன்ஸ் என்றும் படத்தின் மெயின் பகுதி இதுதான் என்றும் கூறப்படுகிறது.

எல்லா காட்சிகளையும் முடிச்சிட்டு வரும் மார்ச் 25ம் தேதி ஊருக்கு கிளம்ப திட்டமிட்டிருந்திருக்கிறார்கள். ஆனால் லோகேஷ் கனகராஜ் போட்டிருக்குற திட்டப்படி மார்ச் 23ம் தேதி படப்பிடிப்பு முடிக்கப்பட்டுவிடுமாம். தேவைப்பட்டால் பேட்ச் ஒர்க் சென்னையில்கூட ஸ்டூடியோவில் வைத்து எடுத்துக் கொள்ள முடியும் என்பதால் மார்ச் 24ம் தேதியே சென்னை திரும்புகிறது படக்குழு.

Tags

Next Story