/* */

Leo படத்தின் சூப்பர் அப்டேட்! 1 மாசம் முழுக்க இதுதானாம்! என்னனு தெரிஞ்சிக்கணுமா?

லியோ படத்தின் இசை வெளியீட்டு விழா மிகப் பெரிய நிகழ்வாக நடத்த திட்டமிட்டிருக்கிறார்கள். இதுவரை தளபதி விஜய் படங்களுக்கு நடைபெற்ற விழாக்கள் எல்லாமே சென்னையிலேயே நடைபெற்றிருக்கிறது. இதனால் தென் தமிழக ரசிகர்கள் இதில் கலந்து கொள்வது கொஞ்சம் சிரமமான விசயமாக பார்க்கப்பட்டு வருகிறது.

HIGHLIGHTS

Leo படத்தின் சூப்பர் அப்டேட்! 1 மாசம் முழுக்க இதுதானாம்! என்னனு தெரிஞ்சிக்கணுமா?
X

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் தளபதி விஜய் நடித்து வரும் திரைப்படம் லியோ. இந்த படத்தின் காஷ்மீர் ஷெட்யூலை முடித்துக் கொண்டு சென்னை திரும்பிய லோகேஷ் அன் கோ இப்போது அடுத்த கட்ட ஷெட்யூலை நோக்கி நகர்ந்துகொண்டிருக்கிறது.

லோகேஷ் கனகராஜ், விஜய் இருவரும் கடந்த படத்தில் மிகப் பெரிய வெற்றியைப் பதிவு செய்துள்ளனர். இவர்கள் இருவரும் இணைந்து முன்னதாக வெளியான மாஸ்டர் திரைப்படமும் மிகப் பெரிய வரவேற்பை பெற்றிருந்ததால் இந்த படத்தின் மீது இயல்பாகவே எதிர்பார்ப்பு எகிறியுள்ளது.

சென்னையில் முதல் ஷெட்யூல் நடந்தாலும் அது சில நாட்கள் மட்டும்தான். 60 நாட்கள் ஷெட்யூலுக்காக காஷ்மீருக்கு லியோ படக்குழு சென்று திரும்பியது. தளபதி விஜய், திரிஷா, பிரியா ஆனந்த் உள்ளிட்டோர் காஷ்மீரில் முக்கிய காட்சிகளில் நடித்துள்ளனர். விஜய், மிஷ்கின், கௌதம் மேனன், சஞ்சய் தத் உள்ளிட்டோர்கள் நடித்த காட்சிகள், சண்டைக் காட்சிகளும் படமாக்கப்பட்டுள்ளன. இதனைத் தொடர்ந்து ஹைதராபாத் மற்றும் சென்னையில் இரண்டு ஷெட்யூல்களாக மொத்தம் 60 நாட்கள் நடப்பதாக கூறப்பட்டது. இந்நிலையில் இரண்டையும் ஒரே இடத்தில் எடுத்து முடிக்க திட்டமிட்டுள்ளதாம்.

மே 2ம் தேதி துவங்கும் அடுத்த கட்ட படப்பிடிப்பு மொத்தம் 60 நாட்கள் நடக்கவிருக்கிறதாம். விஜய், அர்ஜூன், சஞ்சய் தத், திரிஷா உள்ளிட்டோருடன் நடைபெறவுள்ள இந்த படப்பிடிப்பு வரும் மே மாத இறுதியில் அல்லது ஜூன் மாதம் முதல் வாரத்தில் முடிவடையும் எனத் திட்டமிடப்பட்டிருந்தது. ஆனால் காஷ்மீர் ஷெட்யூலில் கொஞ்சம் அதிகமாக களைப்படைந்த குழு, இரண்டாவது ஷெட்யூலை லேட்டாக துவங்க முடிவு செய்துள்ளதாம்.

படப்பிடிப்பு முடிந்ததும், அடுத்து டப்பிங் உள்ளிட்ட போஸ்ட் புரொடக்ஷன் பணிகளைத் துவங்குவார்கள். அதற்கு ஒரு 30 நாட்கள் என திட்டமிட்டுள்ளனர். அனிருத் இசையில் முதல் பாடல் உருவாக்கப் பணிகள் நடைபெற்று வருகின்றதாம். தளபதி விஜய் பிறந்தநாளில் முதல் சிங்கிளை வெளியிட திட்டமிட்டு வருகிறார்களாம்.

லியோ படத்தின் இசை வெளியீட்டு விழா மிகப் பெரிய நிகழ்வாக நடத்த திட்டமிட்டிருக்கிறார்கள். இதுவரை தளபதி விஜய் படங்களுக்கு நடைபெற்ற விழாக்கள் எல்லாமே சென்னையிலேயே நடைபெற்றிருக்கிறது. இதனால் தென் தமிழக ரசிகர்கள் இதில் கலந்து கொள்வது கொஞ்சம் சிரமமான விசயமாக பார்க்கப்பட்டு வருகிறது.

இந்நிலையில், இம்முறை தளபதி விஜய் அரசியல் கட்சி துவங்குவதை மனதில் கொண்டு படத்தின் இசை வெளியீட்டு விழாவை கோயம்புத்தூர் அல்லது மதுரையில் நடத்த திட்டமிடுங்கள் என்று கூறியிருக்கிறாராம். இந்த படத்தில் 1 அல்லது 2 பாடல்களை மீண்டும் விக்னேஷ் சிவன் எழுத இருக்கிறார் என்று கூறப்படுகிறது. விரைவில் இதுகுறித்த தகவல்கள் வெளியாகும் என்கிறார்கள்.

Updated On: 26 April 2023 2:18 PM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    அடிப்படை தேவைகளுக்கு அப்பால்: நடுத்தர வர்க்கத்தின் கனவுகளும்...
  2. லைஃப்ஸ்டைல்
    அமைதி உங்களுக்குள்தான் இருக்கிறது..? வெளியில் ஏன் தேடுகிறீர்கள்..?
  3. லைஃப்ஸ்டைல்
    நம்பிக்கை ஊட்டும் மேற்கோள்கள்: வாழ்க்கையை வெற்றிபெறும் திறவுகோல்!
  4. கவுண்டம்பாளையம்
    கோவை விமான நிலையத்தில் 1.220 கிலோ தங்ககட்டிகள் பறிமுதல்
  5. மேட்டுப்பாளையம்
    கோவையில் சட்டவிரோதமாக தங்கி பணிபுரிந்து வந்த இரு வங்கதேச இளைஞர்கள்...
  6. லைஃப்ஸ்டைல்
    மன ஆரோக்கியத்திற்கு வழி செய்யும் தந்திரங்கள்
  7. வீடியோ
    🔴LIVE : தெலுங்கானாவில் அண்ணாமலையின் அனல் பறக்கும் உரை || #annamalai...
  8. தமிழ்நாடு
    சவுக்கு சங்கர் மீது சென்னையில் வழக்கு..!
  9. உலகம்
    பற்களை திருடி விற்று கோடீஸ்வரரான பலே மருத்துவர்
  10. நாமக்கல்
    50 சட்ட தன்னார்வ தொண்டர்கள் தேர்வுக்கு விண்ணப்பிக்க அழைப்பு