Leo shooting expense ஒரு நாளுக்கு இத்தனை லட்சங்களா?

Leo shooting expense ஒரு நாளுக்கு இத்தனை லட்சங்களா?
X
லியோ படத்தின் படப்பிடிப்பு தளத்தில் ஒரு நாளுக்கு செலவு செய்யப்படும் லட்சக்கணக்கான ரூபாய் குறித்த தகவல் வெளியாகியுள்ளது.

லியோ படப்பிடிப்பில் ஒருநாள் செலவே 75 லட்சம் ரூபாயாம். அடேங்கப்பா அவ்வளவு செலவு செய்து படமெடுத்துக் கொண்டிருக்கிறார்களா என வாயைப் பிளக்கின்றனர் ரசிகர்கள்.

வாரிசு படத்தைத் தொடர்ந்து லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் தளபதி 67 (Vijay Next Movie after Varisu) படம் உருவாகிவருகிறது. இதில் விஜய்யுடன், திரிஷா (Vijay and Trisha) உள்ளிட்ட பல நட்சத்திர பட்டாளமே நடித்து வருகிறது. தற்போது காஷ்மீரில் (Leo movie Shooting spot) ஷூட்டிங்கில் இருக்கும் இந்த படக்குழு சம்பந்தப்பட்ட புகைப்படங்கள் அவ்வப்போது வெளியாகி வைரலாகி வருகின்றன.


தமிழ் சினிமாவின் மிக முக்கிய இயக்குநர்களில் ஒருவராக மாறியிருக்கிறார் இயக்குநர் லோகேஷ் கனகராஜ். இவர் தற்போது தளபதி விஜய்யை இயக்கி வருகிறார். லியோ என பெயர் வைக்கப்பட்டிருக்கும் தளபதியின் 67வது படத்தின் படப்பிடிப்பு தற்போது காஷ்மீரில் நடந்து வருகிறது. முன்னதாக சென்னை மற்றும் கொடைக்கானலில் (Leo movie shooting locations) இரண்டு கட்ட குறுகிய படப்பிடிப்பு நடைபெற்றது. சென்னையில் விஜய் நடிக்கும் காட்சிகளும் கொடைக்கானலில் மன்சூர் அலிகான் காட்சிகளும் படம் பிடிக்கப் பட்டதாக கூறுகிறார்கள்.

சில வாரங்களுக்கு முன், விஜய், கௌதம் மேனன், சண்டைப் பயிற்சியாளர்கள் அன்பறிவ் ஆகியோர் கேங்க்ஃபயரில் இசை நிகழ்ச்சியோட நிற்கும் புகைப்படம் ஒன்று லோகேஷ் கனகராஜால் பகிரப்பட்டது. சில நொடிகளில் சமூக வலைத்தளங்கள் முழுக்க பரவி வைரலானது. இப்போது வரை பல புகைப்படங்கள் இதுபோல வெளிவந்த வண்ணம் இருக்கின்றன.


விஜய் ஜோடியாக திரிஷா நடிக்கும் இந்த படத்தில் பாலிவுட் நடிகர் சஞ்சய் தத் வில்லனாக நடிக்கிறார். அவர்களுடன் அர்ஜூன், மன்சூர் அலிகான், பிரியா ஆனந்த், மிஷ்கின், கௌதம் மேனன் உள்ளிட்ட பலர் நடித்து வருகிறார்கள். இவர்களுடன் மொத்தம் 500 பேர் படப்பிடிப்பில் பணி செய்து வருகின்றனராம்.

நேரடியாக படத்தில் சம்பந்தப்பட்ட நடிகர், நடிகைகள், துணை நடிகர், நடிகைகள், நடன அமைப்பு, சண்டைப் பயிற்சி என இவர்கள் மட்டுமே 100 பேருக்கும் அதிகமாக இருக்கிறார்களாம். மேலும் சில சண்டைக் காட்சிகளுக்கு கூட்டமாக வரும் துணை நடிகர்களும் வருகிறார்களாம். மேலும் லைட் மேன்களிலிருந்து, அனைவரது அஸிஸ்டன்ட், படக்குழுவில் இருப்பவர்கள் 500 பேர் வரை ஒரே நேரத்தில் சாப்பிடுகிறார்களாம்.


காலை 10.30 மணிக்கு அனைவரையும் ஷூட்டிங் ஸ்பாட்டுக்கு வரச் சொல்லியிருக்கிறார்கள். அரைமணி நேரத்தில் முன்னணி நடிகர், நடிகையர்கள் வந்துவிட ஷூட்டிங் துவங்குமாம். பின் 3.30, 4 மணிக்கெல்லாம் பேக் அப் சொல்லி விடுகிறார்கள். நடிகர், நடிகைகள் கிளம்பியவுடன் மற்ற பணியாளர்கள் அடுத்த 1 மணி நேரத்தில் கிளம்புகிறார்கள். இப்படி ஒட்டுமொத்தமாக தயாரிப்பாளருக்கு ஒரு நாளைக்கு 75 லட்சம் ரூபாய் செலவு ஆகிறதாம்.

Tags

Next Story
Sudden Halt in Pongal Package Distribution at Erode East Ration Shops..!