Leo Review மாஸ் எண்டர்டெய்ன்மெண்ட் இருக்கு..!

Leo Review மாஸ் எண்டர்டெய்ன்மெண்ட் இருக்கு..!
X
லியோ படத்தைப் பார்த்த வெளிநாட்டு விமர்சகர் ஒருவர் படத்தின் ரிவியூ ஒன்றை வெளியிட்டுள்ளார்.

நடிகர் விஜய் நடிப்பில் உருவாகியுள்ள லியோ திரைப்படம் வருகிற 19ஆம் தேதி வெளியாகவுள்ளது. இப்படத்தின் மீது ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய எதிர்பார்ப்பு நிலவி வருகிறது. படம் எப்படி இருக்கப் போகிறது என அனைவரும் மிகுந்த எதிர்பார்ப்புடன் காத்திருக்கிறார்கள். இன்னும் இரண்டு நாட்களே இருப்பதால் படத்தை முதல் நாள் முதல் காட்சியிலேயே பார்த்து ரசிக்க ரசிகர்கள் ஆர்வமாக இருக்கிறார்கள்.

இந்நிலையில், லியோ படம் குறித்து முதல் விமர்சனம் வெளியாகியுள்ளது. பிரபல திரைப்பட விமர்சகரும், வெளிநாட்டு சென்சர் போர்டு உறுப்பினர் என்று தன்னைத் தானே கூறிக் கொள்பவருமான உமைர் சந்து லியோ படத்தை பார்த்துவிட்டு தனது விமர்சனத்தை தெரிவித்துள்ளார். அவர் கூறியுள்ளதன் அடிப்படையில் பார்த்தார் படம் ஆவரேஜாக இருக்கிறது என்று சொல்லலாம்.

அதில், "இது ஒரு அவுட் அண்ட் அவுட் விஜய் படம். ஆரம்பம் முதல் இறுதி வரை விஜய் பட்டையை கிளப்பி இருக்கிறார். கதைக்களம் மிகவும் எளிமையானதாக இருந்தாலும், படத்திலிருந்த ஆக்ஷன் காட்சிகள் மிரட்டுகிறது. டென்ஷன், ஆக்ஷன், எமோஷன் சரியாக ஒர்கவுட் ஆகியுள்ளது" என்று தெரிவித்துள்ளார். இது பொத்தம்பொதுவாக அனைத்து படங்களுக்கும் அடித்து விடும் மாயாஜால டிவிட்தான். இவர் மீது எங்களுக்கு நம்பிக்கை இல்லை என்று பல விஜய் ரசிகர்கள் கூறி வருகிறார்கள்.

மேலும், இவர் "லியோ படத்திற்கு 5 மதிப்பெண்ணுக்கு 3.75 மதிப்பெண் கொடுக்கிறேன்" என்று கூறியுள்ளார். அது பாசிடிவானதாக இருந்தாலும் அவர் சொல்லியுள்ள படி இந்த படம் விஜய் நடித்த மற்ற எந்த படங்களிலும் இருந்து மிகவும் வித்தியாசமானதாகும். படத்துக்கு நேர்மறை விமர்சனம் கொடுத்தால்தான் ரசிகர்கள் அதிக அளவில் ரிடிவீட் செய்வார்கள் என்ற நோக்கத்துடன் அவர் பதிவிட்டுள்ளதாக ரசிகர்களே உஷாராகி விட்டனர்.

லியோ படம் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவாகியுள்ளது. மாஸ்டர் படத்துக்கு பிறகு இந்த படத்தில் இரண்டாவது முறையாக விஜய்யை இயக்குகிறார் லோகேஷ் கனகராஜ். மேலும் இந்த படத்தில் விஜய்யுடன் திரிஷா, கௌதம் மேனன், ப்ரியா ஆனந்த், மிஸ்கின், அர்ஜூன், மன்சூர் அலிகான், சஞ்சய் தத் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். அனிருத் இந்த படத்துக்கு இசையமைத்துள்ளார். இதுவரை 3 பாடல்கள் படத்திலிருந்து வெளியாகியுள்ளன.

லியோ படத்தின் ப்ரீ புக்கிங் வசூல் ரூ. 100 கோடிக்கும் மேல் வசூல் செய்து புதிய சாதனையை படைத்துள்ளது. வரும் 19ஆம் தேதி படம் வெளியாகும் போது எப்படிப்பட்ட விமர்சனம் கிடைக்கும் என்று பொறுத்திருந்து பார்க்கலாம்.

Tags

Next Story
ஈரோடு வீட்டுவசதி வாரிய அலுவலகம் இடமாற்றம் - பொதுமக்கள் வசதிக்காக புதிய இடத்தில் செயல்பாடு