லோகேஷை விட்டுட்டு எடிட்டரை பாராட்டிய லியோ தயாரிப்பாளர்! என்னங்க நடக்குது?

லோகேஷை விட்டுட்டு எடிட்டரை பாராட்டிய லியோ தயாரிப்பாளர்! என்னங்க நடக்குது?
X
லோகேஷ் கனகராஜைப் பாராட்டாமல் எடிட்டரை தயாரிப்பாளர் பாராட்டியுள்ளார் என பேச பற்றிக் கொண்டு எரிகிறது ஒரு புரளி.

லியோ படத்தைப் பாராட்டிய தயாரிப்பாளர் அதோடு சேர்த்து எடிட்டர் பிலோமின்ராஜையும் பாராட்டித் தள்ளினார். ஆனால் அதே மேடையில் லோகேஷ் கனகராஜ் இருப்பதை அவர் பெரிதாக எடுத்துக் கொள்ளவில்லை என பலரும் கொளுத்தி போட, லோகேஷ் கனகராஜ் இந்த படத்தை இயக்கவில்லை 80 சதவிகித படத்தை குளுகுளு இயக்குநர் ரத்னகுமார்தான் இயக்கினார் என புரளியை கிளப்பி விட்டிருக்கின்றனர்.

விஜய் சேதுபதியின் மகாராஜா படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியீட்டு விழாவில் கலந்து கொண்ட லியோ படத்தின் தயாரிப்பாளர் லலித் குமார், லியோ படத்தின் எடிட்டர் பிலோமின் ராஜை பாராட்டி பேசியது ரசிகர்கள் மத்தியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

படத்தின் ரிலீஸுக்கு முன்பே இயக்குனர் மற்றும் ஹீரோவை பாராட்டுவது வழக்கம். ஆனால் லலித் குமார், லியோ படத்தின் ரிலீஸுக்கு முன்பே எடிட்டரை பாராட்டியது சர்ச்சையை ஏற்படுத்தியது. அதுவும் மேடையில் இந்தியாவின் அதிகம் விரும்பப்படும் இயக்குநராக இருக்கும் லோகேஷ் கனகராஜை வரவழைத்து அவரை அவமானப்படுத்தியது போல செய்துவிட்டார்கள் என்று பலரும் பேசி வருகின்றனர்.

"லியோ படத்தின் முதல் பாதி பார்த்தேன். பிலோ, வேறலெவலில் மிரட்டிட்டிருக்கீங்க என்று தயாரிப்பாளர் கூறியதாகவும், உடனே லோகேஷ் வந்து, இந்த படத்தை இயக்கியதே நான் தான் சார்ன்னு லோகேஷ் சொன்னார்" என்று லலித் குமார் கூறியது, லோகேஷ் கனகராஜுக்கு சங்கடமாக ஆகிவிட்டதாக கூறப்படுகிறது. காரணம் லோகேஷ் இயக்கத்தில் உருவாகும் படத்தைப் பாராட்டி பேசிவிட்டு அவரையும் பேசியிருக்கலாம் ஆனால் நேரடியாக எடிட்டரை மட்டும் பாராட்டியிருக்கிறாரே என்று பலரும் சந்தேக தீயை கொளுத்தி போட்டு வருகின்றனர்.

சிலர், ஜெயிலர் படத்தில் இடம்பெற்றுள்ள காட்சிகளை போலவே லியோ படத்திலும் லோகேஷ் கனகராஜ் சீன் வைத்திருப்பாரோ என்றும், அந்த வருத்தத்தில் தான் லலித் குமார், லோகேஷை விட்டு விட்டு எடிட்டரை பாராட்டினாரா என்றும் ட்ரோல் செய்தனர்.

இருப்பினும், மாஸ்டர் மற்றும் விக்ரம் படத்தின் இடைவேளை காட்சிகளில் இரண்டு இடங்களில் நடக்கும் சம்பவங்கள் பக்காவாக எடிட் செய்து காட்டப்பட்டு இருப்பதை போல லியோ படத்தின் இடைவேளை காட்சியிலும் வேறலெவல் வெறித்தனமான சீன் இருக்கும் நிலையில், எடிட்டர் தனது மொத்த வித்தையையும் அதில் இறக்கி உள்ளார் என்பதை பாராட்டவே லலித் அப்படி பேசினார் என்று விஜய் ரசிகர்கள் கூறுகின்றனர்.

இந்த சர்ச்சை குறித்து லலித் குமார் அல்லது லோகேஷ் கனகராஜ் எந்த பதிலும் இதுவரை வெளியிடவில்லை.

Tags

Next Story