முடிகிறது காஷ்மீர் ஷூட்... சென்னை திரும்பும் விஜய் அண்ட் கோ!
ஆரம்பித்ததும் தெரியாம முடிவதும் தெரியாம சென்னைக்கும் காஷ்மீருக்கும் நடிகர்கள் போயிட்டு வந்துட்டு இருக்காங்க. அட அதற்குள் லியோ படப்பிடிப்பு முடியப் போகிறதாம். படக்குழு மீண்டும் சென்னை திரும்ப போகிறதாம். அசுர வேகத்தில் படத்தை எடுத்துத் தள்ளிக் கொண்டிருக்கிறார் லோகேஷ் கனகராஜ்.
தளபதி 67 படத்துக்கு லியோ என்று பெயர் வைத்ததிலிருந்து காஷ்மீர் சென்ற படக்குழு பட்டியல், காஷ்மீரில் கேங்ஃபயர், ரத்னகுமார் குடுத்த அப்டேட் என வாரம் ஒரு அப்டேட் கொடுத்து வருகிறது லியோ படக்குழு. இதற்கிடையில் மிஷ்கினும் ஒரு அப்டேட் கொடுத்து அடுத்தடுத்து லியோ குறித்தே பல விசயங்களைப் பேச வைத்துக் கொண்டிருக்கின்றனர்.
படத்தில் இருக்கும் சுவாரஸ்யங்கள் வெளியில் சொன்னால் கூட பரவாயில்லை இல்லாததையும் வெளியிட்டு ரசிகர்களை குழப்புவதை செய்யக்கூடாது என படக்குழு மீது புகார் எழுந்தது. லோகேஷ் கனகராஜ் எளிதில் ஆடியன்ஸ் பல்ஸ் பிடித்து சிக்சர் அடிப்பதில் வல்லவர். உடனக்குடன் அனைவரது போர்சன்களையும் முடித்து ஒவ்வொருவராக வரவழைத்து படப்பிடிப்பு முடிந்தது அவர்களை அனுப்பி வைத்து விடுகிறார்.
படப்பிடிப்பே இன்னும் முடியாத நிலையில் தளபதி விஜய் நடிக்கும் லியோ படத்துக்கான பிசினஸ் ரூ500 கோடியை நெருங்கி இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. கிட்டத்தட்ட இதுதான் விஜய்யின் திரைப்பட வரலாற்றிலேயே அதிக வசூலைப் பெறும் படமாக அமையும்.
சில வாரங்களுக்கு முன், விஜய், கௌதம் மேனன், சண்டைப் பயிற்சியாளர்கள் அன்பறிவ் ஆகியோர் கேங்க்ஃபயரில் இசை நிகழ்ச்சியோட நிற்கும் புகைப்படம் ஒன்று லோகேஷ் கனகராஜால் பகிரப்பட்டது. சில நொடிகளில் சமூக வலைத்தளங்கள் முழுக்க பரவி வைரலானது. இப்போது வரை பல புகைப்படங்கள் இதுபோல வெளிவந்த வண்ணம் இருக்கின்றன.
விஜய் ஜோடியாக திரிஷா நடிக்கும் இந்த படத்தில் பாலிவுட் நடிகர் சஞ்சய் தத் வில்லனாக நடிக்கிறார். அவர்களுடன் அர்ஜூன், மன்சூர் அலிகான், பிரியா ஆனந்த், மிஷ்கின், கௌதம் மேனன் உள்ளிட்ட பலர் நடித்து வருகிறார்கள். இதில் மன்சூர் அலிகான், மிஷ்கின், கௌதம் மேனன், அர்ஜூன் உள்ளிட்டோரின் காட்சிகள் படமாக்கப்பட்டு முடிக்கப்பட்டுவிட்டதாம். படப்பிடிப்பு முடிந்ததும் அனைவரும் அவரவர் வீட்டுக்கு சென்றுவிட்டார்கள் எனவும், இப்போது சஞ்சய் தத், விஜய் நடிக்கும் காட்சிகள் படமாக்கப்பட இருப்பதாகவும் கூறப்படுகிறது. இது மிகப்பெரிய ஆக்ஷன் சீக்குவன்ஸ் என்றும் படத்தின் மெயின் பகுதி இதுதான் என்றும் கூறப்படுகிறது.
எல்லா காட்சிகளையும் முடிச்சிட்டு வரும் மார்ச் 25ம் தேதி ஊருக்கு கிளம்ப திட்டமிட்டிருந்திருக்கிறார்கள். ஆனால் லோகேஷ் கனகராஜ் போட்டிருக்குற திட்டப்படி மார்ச் 23ம் தேதி படப்பிடிப்பு முடிக்கப்பட்டுவிடுமாம். விஜய், திரிஷா, லோகேஷ் கனகராஜ் உட்பட அனைத்து கலைஞர்களும் சென்னை திரும்புகிறார்கள்.
சென்னையில் மீண்டும் 10 நாட்களுக்கு பிறகு ஒரு ஷெட்யூல் திட்டமிட்டிருக்கிறார்களாம். இதில் விஜய், அர்ஜூன், மன்சூர் அலிகான் உட்பட ஒரு சில நடிகர்களே கலந்துகொள்ளவிருக்கிறார்கள்
அநேகமாக இந்த படப்பிடிப்பு இரண்டு வாரங்களில் முடிவடையும் என்று தெரிகிறது. ஏப்ரல் 25ம் தேதிக்குள் மொத்த படப்பிடிப்பும் நிறைவடைந்துவிடும் என்று கூறப்படுகிறது. அடுத்து போஸ்ட் புரொடக்ஷன் பணிகளைத் துவங்குவார்களாம்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu