No 4 AM Show நீதிமன்றம் திட்டவட்ட அறிவிப்பு..!
தளபதி விஜய் நடிப்பில் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் இந்த வாரம் வெளியாக இருக்கும் லியோ படத்துக்கு பிரச்னை மேல் பிரச்னை வந்துகொண்டிருக்கிறது. இந்நிலையில் அதிகாலை காட்சிகள் ரத்து என்பது ரசிகர்களுக்கு பேரிடியாக வந்து விழுந்துள்ளது. இதற்காக தயாரிப்பு தரப்பு நீதிமன்றத்தை நாடியது. ஆனால் நீதிமன்றமும் 4 மணி காட்சிக்கு உத்தரவிடமுடியாது என கையை விரித்துவிட்டது.
தமிழ்நாட்டில் அதிகாலை காட்சிகள் ரத்து செய்யப்பட்ட நிலையில், முதல் காட்சியே 9 மணிக்குதான் என்கிற நிலை இருக்கிறது. அதேநேரம் தமிழக அரசு மனது வைத்தால், 7 மணி காட்சிகள் நடத்த வாய்ப்பு ஏற்படும். முன்னதாகவே விஜய் ரசிகர்கள் பலர் பக்கத்து மாநிலங்களுக்கு சென்று படத்தைக் காண முடிவு செய்துவிட்டனர்.
முக்கியமாக திருநெல்வேலி, தென்காசி, கன்னியாகுமரி, பொள்ளாச்சி, கோயம்புத்தூர் உள்ளிட்ட நகரங்களைச் சுற்றியுள்ள ரசிகர்கள் கேரளாவுக்கு படையெடுக்கிறார்கள். இன்னொரு முக்கியமான விசயம் கேரளாவில் திரையரங்கு கட்டணம் தமிழகத்தை விட குறைவு என்பதுதான்.
ஓசூர், கிருஷ்ணகிரி, தர்மபுரி பகுதியிலுள்ள ரசிகர்கள் பெங்களூருவுக்கு படையெடுக்கிறார்கள். அங்கு கொஞ்சம் கட்டணம் அதிகம் என்றாலும் நல்ல திரையில் படத்தைக் கண்டு களிக்க முடியும் என்பதால் அங்கு செல்கிறார்கள்.
மற்ற மாநிலங்களில் FDFS
தமிழகம் - காலை 9 மணி முதல் காட்சி
கேரளம் - அதிகாலை 4 மணி முதல் காட்சி
கர்நாடகம் - அதிகாலை 4 மணி முதல் காட்சி
வெளிநாடு - ஏறக்குறைய இந்திய நேரப்படி 4 மணி அதிகாலையில் காட்சி தொடங்குகிறது
ஆந்திர பிரதேசம் - அதிகாலை 6 மணிக்கு காட்சி தொடக்கம்
தெலங்கானா - காலை 7 மணிக்கு முதல் காட்சி தொடங்கிகிறது
நீதிமன்றம் சொன்னதென்ன?
வழக்கை விசாரித்த நீதிபதி, அரசின் முடிவில் தலையிட முடியாது என்றும், விதிவிலக்கு அளிப்பது குறித்து அரசிடம் முறையிடுங்கள் அரசு பரீசிலிக்கட்டும் என்று தெரிவித்தார்.
நேரத்தை கூட்டவோ குறைக்கவோ உத்தரவிட முடியாது ஆனால் பரீசிலிக்க உத்தரவிடுகிறேன் என குறிப்பிட்டார்.
ரசிகர்கள் காட்சிக்கு அனுமதிக்க முடியாது, 4 மணி காட்சிகளுக்கு அனுமதி அளிக்குமாறு நீதிமன்றம் உத்தரவிட முடியாது , 9 மணிக்கு காட்சிக்கு பதிலாக 7 மணிக்கு தொடங்க அனுமதி கோரி மனு அளிக்க பட தயாரிப்பு நிறுவனம் அரசிடம் மனு அளிக்க வேண்டும், அதனை அரசு பரிசீலிக்க வேண்டும்.
அனுமதி அளித்திருக்க கூடிய நேரத்தில் எப்படி 5 காட்சிகள் திரையிட முடியும் என அரசுடன் ஆலோசனை நடத்துங்கள் என்றும் தனது உத்தரவில் குறிப்பிட்டுள்ளார் .இதையடுத்து இன்று மாலை 4 மணிக்கு அரசுடன் லியோ பட தயாரிப்பு நிறுவனம் பேச்சுவார்த்தை நடத்த உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
5 பாடல்களும் அட்டகாசமான சண்டைகளும்
கோயம்புத்தூரில் ஒரு கல்லூரி விழாவில் பேசிய லோகேஷ் கனகராஜ் படத்தில் 2 பாடல்கள் மட்டுமே இருப்பது போல பேசியிருந்தார். அதனால் இந்த படம் வழக்கமான விஜய் படங்கள் போல் இல்லாமல் ராவாக இருக்கும் என்று பேசப்பட்டது. ஆனால் இப்போது படத்தில் முக்கியமான இடங்களில் 3 மாண்டேஜ் பாடல்களைச் சேர்த்திருக்கிறார்கள். இதனுடன் சேர்த்து மொத்தம் 5 பாடல்கள் படத்தில் இருக்கின்றன.
அதில் நா ரெடிதான் வரவா, பேட் ஆஸ், அன்பெனும் ஆயுதம் என்று 3 பாடல்கள் இதுவரை வெளியாகியுள்ளன. இன்னும் 2 பாடல்கள் படத்திலேயே வெளியாகும் என்று கூறப்படுகிறது. அனிருத் தனது குரலில் பாடல்களைப் பாடி பலரது எதிர்ப்பையும் சந்தித்து வருகிறார். எல்லா பாடல்களையும் அவர் குரலிலேயே கேட்பது போரிங்காக இருக்கிறது என்கிறார்கள் ரசிகர்கள்.
இதை மிஸ் பண்ணிடாதீங்க!
லியோ திரைப்படத்தின் முதல் பத்து நிமிடங்களை யாரும் மிஸ் செய்துவிடக் கூடாது என ரசிகர்களுக்கு லோகேஷ் கனகராஜ் தெரிவித்துள்ளார். அதற்கு காரணம் இல்லாமல் இல்லை. என்ன என்று விசாரித்தபோது காஷ்மீரில் கடும்பனியிலும் இரவு நேரங்களில் உறங்காமல் 1000 கணக்கானோர் உழைத்த அந்த காட்சிகள்தான் ஆரம்பத்தில் வர இருக்கிறதாம்.
வழக்கமான படங்கள் போலில்லாமல் விஜய் பெரிய பில்டப் எதுவும் இன்றி கமல்ஹாசனைப் போல சாதாரணமான இண்ட்ரோவுடன் அறிமுகமாகிறாராம். அவரும் கடுமையான குளிரைப் பொருட்படுத்தாது இரவு நேரத்தில் நடித்துள்ள காட்சிகள்தான் படத்தின் ஆரம்ப காட்சி என்று கூறப்படுகிறது.
சிங்கப்பூர், மலேசியா, இங்கிலாந்து சாதனை
லியோ திரைப்படத்தின் ஓவர்சீஸ் காப்பிகள் 14ம் தேதியே சென்றடையும் வகையில் முன்கூட்டியே திட்டமிட்டிருக்கிறார்களாம். வழக்கமாக 19ம் தேதி படம் வெளியாகிறது என்றால் 18ம் தேதி நள்ளிரவில்தான் சென்றடையும். அதுவரை படம் ரிலீஸ் ஆகுமா ஆகாதா என உயிரைக் கையில் பிடித்துக்கொண்டு விநியோகஸ்தர்கள் இருப்பார்களாம். அதுபோன்ற சிரமங்களை ஓவர்சீஸ் விநியோகஸ்தர்களுக்கு கொடுக்கவேண்டாம் என லியோ படக்குழு இப்படி திட்டமிட்டிருக்கிறதாம்.
இதுமட்டுமின்றி ஆஸ்திரேலியா, சிங்கப்பூர், மலேசியா, இங்கிலாந்து, அமெரிக்கா என உலகில் தமிழர்கள் அதிகம் வாழும் பகுதிகளில் வெளியாகும் லியோ படத்துக்கான தணிக்கையையும் இப்போதே பெற்று தயாராக வைத்திருக்கிறார்களாம்.
லியோ திரைப்படம் சிங்கப்பூர், மலேசியா மற்றும் இங்கிலாந்து நாடுகளில் பிரீமியர் ஷோக்களை நடத்த திட்டமிட்டுள்ளனர். அங்கு ரசிகர்கள் அதிக அளவில் ஆர்வத்துடன் ஆன்லைன் புக்கிங் செய்து சாதனை படைத்துள்ளது.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu