LCU தான்... கன்ஃபார்ம் செய்த விஜய் மகன்..!

LCU தான்... கன்ஃபார்ம் செய்த விஜய் மகன்..!
X
லியோ படத்தில் பஹத் பாசிலும் நடித்திருப்பதாக அந்த படத்தில் விஜய்யின் மகனாக நடித்துள்ள மலையாள நடிகர் மேத்யூ தாமஸ் பேட்டி ஒன்றில் தெரிவித்துள்ளார்.

லியோ படத்தில் பஹத் பாசிலும் நடித்திருப்பதாக அந்த படத்தில் விஜய்யின் மகனாக நடித்துள்ள மலையாள நடிகர் மேத்யூ தாமஸ் பேட்டி ஒன்றில் தெரிவித்துள்ளார். இதனால் படம் நிச்சயமாக எல்சியூ தான் என ரசிகர்கள் சமூக வலைத்தளங்களில் எழுதி வருகின்றனர்.

தளபதி விஜய்யும் இயக்குநர் லோகேஷ் கனகராஜும் இணையும் லியோ திரைப்படம் வரும் அக்டோபர் 19ம் தேதி உலகம் முழுக்க வெளியாக இருக்கிறது. இந்த படத்தில் விஜய்க்கு ஜோடியாக திரிஷா நடித்துள்ளார். அவர்களுடன் கௌதம் மேனன், ப்ரியா ஆனந்த் , மன்சூர் அலிகான், மிஷ்கின், அர்ஜூன், சஞ்சய் தத் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில்

படம் சென்னை, காஷ்மீர், கொடைக்கானல் என 3 இடங்களில் கிட்டத்தட்ட 90 நாட்கள் முழுமையாக ஷூட்டிங் நிறைவு பெற்று, டப்பிங் பணிகளையும் முடித்துக் கொண்டு தற்போது கடைசி கட்ட வேலைகளில் மும்முரமாக இருக்கிறது படக்குழு. நாளையுடன் முழு வேலைகளையும் முடித்துவிட்டு ரிலாக்ஸ் ஆக இருக்கிறார் லோகேஷ் கனகராஜ்.

லியோவில் பஹத் பாசில்

லியோ படத்தின் வெளியீட்டுக்கு இன்னும் 4 நாட்களே உள்ள நிலையில், அந்த படத்தில் நடித்த நடிகர்கள், வேலை செய்த டெக்னீசியன்களிடம் யூடியூப் சேனல்கள் மாறி மாறி பேட்டி எடுத்து வருகின்றனர். அந்த வகையில் மலையாள நடிகர் மேத்யூ தாமஸிடம் எடுத்த பேட்டி ஒன்றில், அவரிடம் கேட்கப்பட்ட கேள்வியின்போது அவர் படத்தில் பஹத் பாசில் நடித்திருப்பதாக கூறியுள்ளார். இதனால் விக்ரம் அமர் இந்த படத்தில் இருக்கிறார் என்று ரசிகர்கள் குதூகலமடைந்துள்ளனர்.

5 பாடல்களும் அட்டகாசமான சண்டைகளும்

கோயம்புத்தூரில் ஒரு கல்லூரி விழாவில் பேசிய லோகேஷ் கனகராஜ் படத்தில் 2 பாடல்கள் மட்டுமே இருப்பது போல பேசியிருந்தார். அதனால் இந்த படம் வழக்கமான விஜய் படங்கள் போல் இல்லாமல் ராவாக இருக்கும் என்று பேசப்பட்டது. ஆனால் இப்போது படத்தில் முக்கியமான இடங்களில் 3 மாண்டேஜ் பாடல்களைச் சேர்த்திருக்கிறார்கள். இதனுடன் சேர்த்து மொத்தம் 5 பாடல்கள் படத்தில் இருக்கின்றன.

அதில் நா ரெடிதான் வரவா, பேட் ஆஸ், அன்பெனும் ஆயுதம் என்று 3 பாடல்கள் இதுவரை வெளியாகியுள்ளன. இன்னும் 2 பாடல்கள் படத்திலேயே வெளியாகும் என்று கூறப்படுகிறது. அனிருத் தனது குரலில் பாடல்களைப் பாடி பலரது எதிர்ப்பையும் சந்தித்து வருகிறார். எல்லா பாடல்களையும் அவர் குரலிலேயே கேட்பது போரிங்காக இருக்கிறது என்கிறார்கள் ரசிகர்கள்.

முதல் பத்து நிமிடங்கள்

லியோ திரைப்படத்தின் முதல் பத்து நிமிடங்களை யாரும் மிஸ் செய்துவிடக் கூடாது என ரசிகர்களுக்கு லோகேஷ் கனகராஜ் தெரிவித்துள்ளார். அதற்கு காரணம் இல்லாமல் இல்லை. என்ன என்று விசாரித்தபோது காஷ்மீரில் கடும்பனியிலும் இரவு நேரங்களில் உறங்காமல் 1000 கணக்கானோர் உழைத்த அந்த காட்சிகள்தான் ஆரம்பத்தில் வர இருக்கிறதாம்.

வழக்கமான படங்கள் போலில்லாமல் விஜய் பெரிய பில்டப் எதுவும் இன்றி கமல்ஹாசனைப் போல சாதாரணமான இண்ட்ரோவுடன் அறிமுகமாகிறாராம். அவரும் கடுமையான குளிரைப் பொருட்படுத்தாது இரவு நேரத்தில் நடித்துள்ள காட்சிகள்தான் படத்தின் ஆரம்ப காட்சி என்று கூறப்படுகிறது.

சிங்கப்பூர், மலேசியா, இங்கிலாந்து சாதனை

லியோ திரைப்படத்தின் ஓவர்சீஸ் காப்பிகள் 14ம் தேதியே சென்றடையும் வகையில் முன்கூட்டியே திட்டமிட்டிருக்கிறார்களாம். வழக்கமாக 19ம் தேதி படம் வெளியாகிறது என்றால் 18ம் தேதி நள்ளிரவில்தான் சென்றடையும். அதுவரை படம் ரிலீஸ் ஆகுமா ஆகாதா என உயிரைக் கையில் பிடித்துக்கொண்டு விநியோகஸ்தர்கள் இருப்பார்களாம். அதுபோன்ற சிரமங்களை ஓவர்சீஸ் விநியோகஸ்தர்களுக்கு கொடுக்கவேண்டாம் என லியோ படக்குழு இப்படி திட்டமிட்டிருக்கிறதாம்.

இதுமட்டுமின்றி ஆஸ்திரேலியா, சிங்கப்பூர், மலேசியா, இங்கிலாந்து, அமெரிக்கா என உலகில் தமிழர்கள் அதிகம் வாழும் பகுதிகளில் வெளியாகும் லியோ படத்துக்கான தணிக்கையையும் இப்போதே பெற்று தயாராக வைத்திருக்கிறார்களாம்.

லியோ திரைப்படம் சிங்கப்பூர், மலேசியா மற்றும் இங்கிலாந்து நாடுகளில் பிரீமியர் ஷோக்களை நடத்த திட்டமிட்டுள்ளனர். அங்கு ரசிகர்கள் அதிக அளவில் ஆர்வத்துடன் ஆன்லைன் புக்கிங் செய்து சாதனை படைத்துள்ளது.

அரசு இறுதி முடிவு!

அதிகாலை 4 மணி காட்சிக்கு அனுமதி இல்லை என அரசு திட்டவட்டமாக தெரிவித்துள்ளது. காலை 9 மணி தொடங்கி நள்ளிரவு 1.30 மணி வரை மொத்தம் 5 காட்சிகள் திரையிடலாம் எனவும், அதற்கு முன்னோ, பின்னோ திரையரங்குகள் திறந்திருக்கக் கூடாது எனவும் கூறியுள்ளது.

பொதுவாக திரையரங்குகளில் 9 மணி, 12 மணி, 4 மணி, 7 மணி, 10.30 மணி என 5 காட்சிகள் திரையிடப்பட வாய்ப்பு இருப்பதாக ரசிகர்களிடையே பேச்சு எழுந்துள்ளது. வழக்கமாக 11.30 மணிக்கு முதல் காட்சியும் 2.30 மணிக்கு இரண்டாவது காட்சியும், 6 அல்லது 6.30 மணிக்கு 3வது காட்சியும், 10 அல்லது 10.30 மணிக்கு இரவுக் காட்சியும் திரையிடப்படும்.

Tags

Next Story
Weight Loss Tips In Tamil