லியோ 4 மணி காட்சி! யார் சொல்லி நடக்குது தெரியுமா?

லியோ 4 மணி காட்சி! யார் சொல்லி நடக்குது தெரியுமா?
X
லியோ படத்தை அதிகாலை 4 மணிக்கு திரையிடுவது குறித்த தகவலில் அரசியல் தலையீடு இருப்பதாக கூறப்படுகிறது.

விஜய் நடிப்பில் உருவாகியுள்ள லியோ திரைப்படம் வரும் அக்டோபர் 19ம் தேதி அதிகாலை 4 மணிக்கு திரையிடப்படும் என்று கூறப்பட்டுவரும் நிலையில், 30 நாட்களாக அரசு கிடப்பில் போட்டிருந்த கடிதத்துக்கு பதில் கொடுத்துள்ளதாக கூறப்படுகிறது. இதற்கு பின்னணியில் பெரும்புள்ளி ஒருவர் இருப்பதாக தகவல் கசிந்து வருகிறது.

மாஸ்டர் படத்துக்கு பிறகு தளபதி விஜய்யும் இயக்குநர் லோகேஷ் கனகராஜும் இணையும் படம் லியோ. இந்த படத்தில் விஜய்க்கு ஜோடியாக திரிஷா, நண்பராக கௌதம் மேனன், அவருக்கு ஜோடியாக ப்ரியா ஆனந்த் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்க, வில்லன்களாக மன்சூர் அலிகான், மிஷ்கின், அர்ஜூன், சஞ்சய் தத் உள்ளிட்டோர் நடித்துள்ளனர்.

அதிரடி காட்டிய லியோ படக்குழு

படம் சென்னை, காஷ்மீர், கொடைக்கானல் என 3 இடங்களில் கிட்டத்தட்ட 90 நாட்கள் முழுமையாக ஷூட்டிங் நிறைவு பெற்று, டப்பிங் பணிகளையும் முடித்துக் கொண்டு தற்போது கடைசி கட்ட வேலைகளில் மும்முரமாக இருக்கிறது படக்குழு.

படத்திலிருந்து நா ரெடிதான் வரவா, பேட் ஆஸ், அன்பெனும் ஆயுதம் என்று 3 பாடல்கள் இதுவரை வெளியாகியுள்ளன. இன்னும் 2 பாடல்கள் படத்திலேயே வெளியாகும் என்று கூறப்படுகிறது. அனிருத் தனது குரலில் பாடல்களைப் பாடி பலரது எதிர்ப்பையும் சந்தித்து வருகிறார்.

விஜய் பேசிய கெட்டவார்த்தை

ஆரம்பத்தில் விஜய் புகைப்பிடிக்கும் காட்சிகளுக்காக பல எதிர்ப்புகளைச் சந்தித்தார். இந்நிலையில் டிரைலரில் விஜய்யை கெட்ட வார்த்தைபேச வைத்துவிட்டார் லோகி என அவரையும் எதிர்க்க ஒரு கட்டத்தில் அதை மியூட் செய்து வெளியிட்டுள்ளனர். இத்தனை எதிர்ப்புகளையும் தாண்டி படம் வெளியாக சரியாக 1 வாரம் இருக்கிறது என்று நினைக்கும்போது, 4 மணி காட்சிகள் மட்டுமின்றி, 7 மணி, 9 மணி காட்சிகளும் இல்லாமல் 11 மணிக்குதான் முதல் காட்சி திரையிட வேண்டும் என தமிழக அரசு உத்தரவு இருப்பதாக தகவல் கிளம்ப, விஜய் ரசிகர்கள் சோகத்தில் மூழ்கினர்.

இந்நிலையில் அரசு தரப்பிலிருந்து வந்த அறிவிப்பில் படக்குழுவிடமிருந்து கேட்கப்பட்ட அனுமதி கடிதத்துக்கு பதிலளிக்கும் வகையில், படத்தை 4, 7 மணிக்கு திரையிட அனுமதி அளிப்பதாக அந்த உத்தரவு கூற, விஜய் ரசிகர்கள் கொண்டாடத் தொடங்கிவிட்டனர்.

4 மணி, 7 மணி காட்சிகள் ரத்து?

இதனையடுத்து ஒரு குண்டைத் தூக்கி போட்டனர். அதாவது முதல் காட்சி என்பது 4 மணிக்குதான் அல்லது 7 மணிக்கு தான் என்பதை குறிப்பிடாமல் அந்த உத்தரவு வந்திருப்பதை எடுத்துக் காட்டி, அதிகாலை காட்சிக்கு அனுமதி இல்லை, ஒரு நாளைக்கு 5 காட்சிகள் என்பதற்கே அனுமதி என்று பேச ஆரம்பித்துவிட்டனர்.

இந்நிலையில், படத்தின் தயாரிப்பாளர் லலித், என்ன ஆனாலும் சரி படத்தை 4 மணிக்கு திரையிடுவோம் என விநியோகஸ்தர்களுக்கு ஊக்கமளிக்கும் வகையில் பேசி வருகிறார் என்று சினிமா பத்திரிகையாளர் பிஸ்மி தெரிவித்துள்ளார்.

அரசியல் தலையீடு

சினிமாவைப் பற்றியும் சினிமா செய்திகள், கிசுகிசுக்களைப் பற்றியும் தங்களது சேனலில் பதிவிட்டு வரும் வலைப்பேச்சு, இந்த விவகாரத்தின் பின்னணியில் அரசியல் தலையீடு இருக்கிறது என்று கூறியுள்ளனர். இதனால் மீண்டும் லியோ குறித்த அரசியல் பேச்சு சூடுபிடித்துள்ளது. ஏற்கனவே மதுரையில் விஜய் முதல்வராக பதவி ஏற்கும் வகையிலான போஸ்டர்களை அடித்து பரபரப்பை கிளப்பியிருந்தனர் விஜய் ரசிகர்கள். இதனிடையே விஜய் திரைப்படங்கள், அரசியல் பற்றிய பேச்சுக்கள் பிரிக்கமுடியாதவையாக இருக்கின்றன.

Tags

Next Story
Weight Loss Tips In Tamil