மதுரையில் லியோ திரைப்படத்தின் பெயரில் போலி டிக்கெட் விற்பனை!
விஜய் நடித்துள்ள லியோ திரைப்படம் 19ஆம் தேதி வெளியாகவுள்ள நிலையில், மதுரையில் 18ஆம் தேதி மாலை சிறப்பு காட்சி என்று கூறி சமூக வலைதளங்களில் போலி டிக்கெட் விற்பனை செய்யப்பட்டுள்ளது. இந்த டிக்கெட்டை யாரும் வாங்கி ஏமாற வேண்டாம் எனவும் அதற்கு திரையரங்க நிர்வாகம் பொறுப்பல்ல என அறிவிக்கப்பட்டுள்ளது.
லியோ திரைப்படம்- காத்திருக்கும் ரசிகர்கள்
விஜய் நடித்துள்ள லியோ திரைப்படம் அக்டோபர் 19ம் தேதி வெளியாகிறது. மாஸ்டர் படத்தைத் தொடர்ந்து விஜய் – லோகேஷ் கனகராஜ் கூட்டணி இரண்டாவது முறையாக இணைந்துள்ளது. சஞ்சய் தத், அர்ஜுன், த்ரிஷா உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். அனிருத் இசையமைத்துள்ளார். இந்த திரைப்படம் வருகிற 19ஆம் தேதி திரையரங்குகளில் வெளியிட உள்ளதாக பட குழு தெரிவித்துள்ளது. இதற்கான முன்பதிவு வெளி நாடுகளில் முன்பதிவில் சாதனையையும் படைத்துள்ளது.
சிறப்பு காட்சிக்கான போலி டிக்கெட்
இந்நிலையில் 18ஆம் தேதி மாலை 6:30 மணிக்கு லியோ திரைப்படத்தின் சிறப்பு காட்சிகள் வெளியிடுவதாக கூறி மதுரை அண்ணாநகர் பகுதியில் உள்ள (பிரியா காம்ப்ளக்ஸ்) சினிப்பிரியா திரையரங்கம் பெயரில் போலியான டிக்கெட்டுகள் சமூக வலைதளங்கள் மூலமாக விற்பனை செய்யப்படுவதாக தகவல் பரவியது.
அதிர்ச்சியில் திரையரங்கம்
இந்நிலையில் இது தொடர்பாக சினிப்பிரியா திரையரங்க நிர்வாகம் தனது முகநூல் பக்கத்தில் லியோ திரைப்படம் தொடர்பாக 18ஆம் தேதி மாலை சிறப்பு காட்சி என்று வெளியாகி உள்ள டிக்கெட் போலியானவை என கூறியுள்ளது. இதனை யாரும் வாங்க வேண்டாம் எனவும் அப்படி வாங்கினால் இதற்கு திரையரங்க நிர்வாகம் பொறுப்பல்ல எனவும் சினிப்பிரியா திரையரங்கம் தெரிவித்துள்ளது.
மேலும் லியோ திரைப்படம் வெளியீடுவது தொடர்பாகவும் டிக்கெட்டுக்கான முன்பதிவு தொடர்பாக விரைவில் அறிவிப்பு வெளியாகும் எனவும் அதுவரை ரசிகர்கள் காத்திருக்க வேண்டும் எனவும் கூறப்பட்டுள்ளது.
போலி டிக்கெட் விற்றது யார்?
மதுரையில் லியோ திரைப்பட சிறப்புக் காட்சி என்ற பெயரில் போலியான டிக்கெட் விற்பனை செய்யப்படுவது தொடர்பான புகாரில் சமூக வலைதளங்கள் மூலமாக விற்பனை செய்யப்படக்கூடிய நபர்கள் யார் என்பது குறித்தாக காவல்துறையினர் தேடி வருகின்றனர்.
போலி டிக்கெட் விற்பனை தொடர்ச்சி
இதுபோன்ற போலி டிக்கெட் விற்பனை சம்பவங்கள் அடிக்கடி நடந்து வருகின்றன. சமீபத்தில் ஏ ஆர் ரகுமார் இசை நிகழ்ச்சியில் அதிகளவு போலி டிக்கெட்கள் விற்பனை செய்யப்பட்ட சம்பவத்தால் இசை நிகழ்வில் பிரச்சனை ஏற்பட்டது. மேலும் லியோ திரைப்பட பாடல் வெளியீட்டு விழாவிலும் போலி டிக்கெட் தொடர்பாக சர்ச்சை எழுந்தது குறிப்பிடத்தக்கது.
ரசிகர்களுக்கு எச்சரிக்கை
திரையரங்கில் டிக்கெட் வாங்கும்போது அவற்றின் உண்மைத்தன்மையை சரிபார்த்து வாங்க வேண்டும். சமூக வலைதளங்களில் விற்பனை செய்யப்படும் டிக்கெட்டுகளை கண்டிப்பாக வாங்கக்கூடாது
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu