காட்சிகள் ரத்து... குறைந்தது லியோ வசூல்!
லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடித்துள்ள 'லியோ' படம் அக்டோபர் 19ம் தேதி உலகம் முழுவதும் வெளியாக உள்ளது. அமெரிக்காவில் அக்டோபர் 18ம் தேதியே இதன் பிரிமியர் காட்சிக்கான முன்பதிவுகள் ஆரம்பமாகி நடந்து வந்தது. சுமார் 9 லட்சம் யுஎஸ் டாலர் அளவில் முன்பதிவு நடந்தது.
இதனிடையே, ஐமேக்ஸ் பிரிமியர் காட்சிகளுக்கான முன்பதிவை திடீரென ரத்து செய்துவிட்டார்கள். குறித்த நேரத்தில் 'கன்டென்ட்' டெலிவரி நடக்காததே அதற்குக் காரணம். தயாரிப்பு நிறுவனத்தின் தவறு இது. ஐமேக்ஸ் காட்சிகளுக்கு அதிகமான முன்பதிவு நடந்திருந்தது. தற்போது அந்தக் கட்டணங்களை திருப்பி அளித்து வருகிறார்கள். இதனால், 9 லட்சம் யுஎஸ் டாலர் வசூல் என்பது 7 லட்சம் யுஎஸ் டாலராக குறைந்துவிட்டது.
முன்பதிவில் 1 மில்லியன் யுஎஸ் டாலர் வசூலிக்கும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் தற்போது அந்த சாதனைக்கு வாய்ப்பில்லை என்று சொல்கிறார்கள்.
இதுகுறித்து தயாரிப்பு நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையில், "ஐமேக்ஸ் காட்சிகளுக்கான 'கன்டென்ட்' டெலிவரி தாமதமாகியதால், அவற்றை ரத்து செய்ய வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது. இதனால், முன்பதிவு செய்த ரசிகர்களுக்கு வருத்தம் தெரிவிக்கிறோம். அவர்களின் பணம் முழுவதும் திருப்பி அளிக்கப்படும்" என்று கூறப்பட்டுள்ளது.
இந்தச் சம்பவம் 'லியோ' படத்தின் அமெரிக்க வெளியீட்டிற்கு சற்று பின்னடைவை ஏற்படுத்தியுள்ளது. படம் திரைக்கு வரும்போது எவ்வளவு வசூல் குவிக்கும் என்பது பொறுத்திருந்து பார்க்க வேண்டும்.
லியோ திரைப்படத்தின் ஓவர்சீஸ் காப்பிகள் 14ம் தேதியே சென்றடையும் வகையில் முன்கூட்டியே திட்டமிட்டிருக்கிறார்களாம். வழக்கமாக 19ம் தேதி படம் வெளியாகிறது என்றால் 18ம் தேதி நள்ளிரவில்தான் சென்றடையும். அதுவரை படம் ரிலீஸ் ஆகுமா ஆகாதா என உயிரைக் கையில் பிடித்துக்கொண்டு விநியோகஸ்தர்கள் இருப்பார்களாம். அதுபோன்ற சிரமங்களை ஓவர்சீஸ் விநியோகஸ்தர்களுக்கு கொடுக்கவேண்டாம் என லியோ படக்குழு இப்படி திட்டமிட்டிருக்கிறதாம்.
இதுமட்டுமின்றி ஆஸ்திரேலியா, சிங்கப்பூர், மலேசியா, இங்கிலாந்து, அமெரிக்கா என உலகில் தமிழர்கள் அதிகம் வாழும் பகுதிகளில் வெளியாகும் லியோ படத்துக்கான தணிக்கையையும் இப்போதே பெற்று தயாராக வைத்திருக்கிறார்களாம்.
லியோ திரைப்படம் சிங்கப்பூர், மலேசியா மற்றும் இங்கிலாந்து நாடுகளில் பிரீமியர் ஷோக்களை நடத்த திட்டமிட்டுள்ளனர். அங்கு ரசிகர்கள் அதிக அளவில் ஆர்வத்துடன் ஆன்லைன் புக்கிங் செய்து சாதனை படைத்துள்ளது.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu