Leo BO வசூலில் கொடிகட்டி பறக்கும் லியோ! 400 கோடியைத் தாண்டிய வசூல்..!

Leo BO வசூலில் கொடிகட்டி பறக்கும் லியோ! 400 கோடியைத் தாண்டிய வசூல்..!
நான்கு நாட்களில் 400 கோடியை நெருங்கிய லியோ படத்தின் வசூல் நிலவரம்

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் வெளியாகி பெரும் வரவேற்பை பெற்று வரும் லியோ படத்தின் முதல் 4 நாட்களிலேயே 400 கோடி வசூலைத் தாண்டி சென்று கொண்டிருக்கிறது. அதாவது உலகம் முழுவதும் நான்கு நாட்களிலேயே 400.5 கோடி ரூபாய் வசூலைப் பெற்றிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. இது வேறெந்த தமிழ்ப் படமும் செய்யாத சாதனையாக கொண்டாடப்படுகிறது.

தமிழ்நாட்டில் மட்டும் 100 கோடி, இந்தியாவில் 200 கோடி, உலகம் முழுக்க 400 கோடி என வசூல் சாதனை படைத்திருக்கிறது லியோ திரைப்படம்.

தளபதி விஜய் நடிப்பில் லோகேஷ் கனகராஜ் இயக்கியுள்ள லியோ திரைப்படம் முதல் நாளே நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. ஒவ்வொரு காட்சிக்கு ரசிகர்கள் மிகுந்த மகிழ்ச்சியுடன் படத்தைப் பார்த்துவிட்டு திரும்பி வருகிறார்கள். ஒரு சிலர் சில குறைகளைச் சொன்னாலும், படத்துக்கு, பலத்த எதிர்பார்ப்புகளுடன் ரசிகர்கள் திரையரங்குகளுக்கு படையெடுத்து வந்த வண்ணம் இருக்கின்றனர்

முதல் 3 நாட்களில் 305 கோடி ரூபாய் வசூலை உலகம் முழுக்க செய்திருந்தது. அடுத்த நாளான ஞாயிற்றுக்கிழமை இந்த வசூல் 400 கோடியை நெருங்கியுள்ளது. இன்று முதல் காட்சியுடன் இந்த வசூல் நிச்சயம் 400 கோடியைத் தாண்டிவிடும்.

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் தளபதி விஜய், திரிஷா, கௌதம் மேனன், ப்ரியா ஆனந்த், மிஷ்கின், மன்சூர் அலிகான், அர்ஜூன், சஞ்சய் தத் உள்ளிட்டோர் நடித்துள்ள திரைப்படம் லியோ. இந்த படத்துக்கு இசை அனிருத், ஒளிப்பதிவு மனோஜ் பரமஹம்சா, படத்தொகுப்பு ஃபிலோமின் ராஜ்.

மாஸ்டர் திரைப்படத்துக்கு பிறகு இரண்டாவது முறையாக விஜய்யுடன் இணைந்துள்ளார் லோகேஷ் கனகராஜ். இந்த படமும் கைதி - விக்ரம் யூனிவர்ஸில் இருக்குமா இல்லையா என்கிற எதிர்பார்ப்பு ரசிகர்களிடையே மிகப் பெரிய அளவில் எழுந்துள்ளது. இதனால் இந்த படத்துக்கு விஜய் ரசிகர்கள் மட்டுமின்றி மற்ற ரசிகர்களும் ஆர்வமாக காத்திருந்தார்கள்.

முதல் நாள் முதல் காட்சி தொடங்கி, இரவு வரை பலர், திரும்ப இரண்டாவது முறை பார்த்து ரசிக்கும் வகையில் இந்த படம் இருந்தது. தியேட்டர் எக்ஸ்பீரியன்ஸுக்காக இந்த படத்தை கொண்டாடி வருகின்றனர். இதுமட்டுமின்றி பெங்களூரு, கொச்சி, ஹைதராபாத் உள்ளிட்ட நகரங்களிலும் இந்த படத்துக்கு ஏகப்பட்ட வரவேற்பு கிடைத்து வருகின்றது.

படம் நல்ல எதிர்பார்ப்புகளை ஏற்படுத்தி அதோடு விட்டுவிடாமல் நல்ல வரவேற்பையும் பெற்றிருக்கிறது. படத்தில் விஜய்யின் நடிப்பு, திரிஷாவின் அழகு, அர்ஜூன், சஞ்சய் தத், மிஷ்கின், சாண்டி ஆகியோரின் நடிப்பு வெகுவாக பாராட்டுகளைப் பெற்று வருகின்றன.

படத்தில் ஏகப்பட்ட சர்ப்ரைஸ் தருணங்கள் இருப்பதாக படம் பார்த்தவர்கள் கூறி வருகின்றனர். படம் எல்சியூவில் இருக்கிறதா இல்லையா என்பதை ரசிகர்கள் பார்த்து தெரிந்துகொள்ளட்டும் என விட்டுவிட்டார்கள். படத்தில் கௌதம் மேனன், அர்ஜூன், சஞ்சய் தத் ஆகியோருக்கு மிகவும் வலிமையான கதாபாத்திரத்தை கொடுத்திருக்கிறார் லோகேஷ் கனகராஜ்.

Tags

Next Story