தெலுங்கு முன்னணி நடிகர் ராம் சரணுக்கு சென்னையில் டாக்டர் பட்டம்
நடிர் ராம் சரண்.
தெலுங்கு முன்னணி நடிகர் ராம் சரணுக்கு சென்னையில் டாக்டர் பட்டம் வழங்கப்படுகிறது.
தெலுங்கு திரை உலகின் முன்னணி நடிகர் ராம்சரண். இவர் தெலுங்கு சூப்பர் ஸ்டார் என வர்ணிக்கப்படும் சிரஞ்சீவியின் மகன் ஆவார். இவர் ராஜமௌலி இயக்கத்தில் ஆர் ஆர் ஆர் என்ற படத்தில் நடித்து பிரபலம் ஆனார் அந்த படத்தில் இவர் ஆடிய நடனம் உலக அளவில் பிரபலம் அடைந்தது. நாட்டு நாட்டு என்ற பாடலுக்கு இவரும் பாலகிருஷ்ணாவும் சேர்ந்து பாடிய நடனம் சர்வதேச விருது பெற்றதால் மிகவும் பிரபலம் அடைந்தார்.
இந்நிலையில் சென்னை பல்லாவரத்தில் உள்ள வேல்ஸ் நிகர்நிலைப் பல்கலைக்கழகத்தின் பட்டமளிப்பு வருகிற 13-ம் தேதி நடைபெற உள்ளது பல்கலைக்கழக வேந்தரும் சினிமா தயாரிப்பாளருமான ஐசரி கணேஷ் தலைமையில் நடைபெறும் இந்த பட்டமளிப்பு விழாவில் சிறப்பு விருந்தினராக தெலுங்கு சினிமாவின் முன்னணி நடிகர் ராம்சரண் பங்கு பெறுகிறார்.
இந்த விழாவில் நடிகர் ராம்சரண் கலைசேவையை பாராட்டும் விதமாக அவருக்கு கௌரவ டாக்டர் பட்டம் வழங்கப்படுகிறது. இந்த பட்டத்தை அகில இந்திய தொழில் நுட்ப கல்வி கவுன்சில் (ஏ ஐ சி டி இ )தலைவர் டிஜி சீதாராம் வழங்குகிறார். பட்டமளிப்பு விழாவில் முக்கிய பிரமுகர்கள் பலரும் கலந்து கொள்கிறார்கள். கவுரவ டாக்டர் பட்டம் வழங்கப்படுவது ராம்சரண் ரசிகர்களுக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது. ராம்சரண் தற்போது சங்கர் இயக்கத்தில் மிக பிரம்மாண்டமாக உருவாகும் கேம் சேஞ்சர் என்ற படத்தில் நடித்து வருகிறார் ராம்சரண் ரங்கஸ்தலம், தூபான், துருவா ஆச்சாரியா போன்ற பல வெற்றி படங்களிலும் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu