இயக்குநர் மணிரத்னத்துக்கு வக்கீல் நோட்டீஸ்… 'பொன்னியின் செல்வன்' சர்ச்சை..!

இயக்குநர் மணிரத்னத்துக்கு வக்கீல் நோட்டீஸ்… பொன்னியின் செல்வன் சர்ச்சை..!
X

பொன்னியின் செல்வன் படத்தில் நடித்த நடிகர்கள்.

இயக்குநர் மணிரத்னத்தின் 'பொன்னியின் செல்வன்' படத்துக்கு வக்கீல் நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது.

அமரர் கல்கியின் வரலாற்றுப் புதினமான 'பொன்னியின் செல்வன்', இயக்குநர் மணிரத்னத்தின் கனவுப் படமாக உருவாகியிருக்கிறது. படத்தில் நடிகர் விக்ரம், கார்த்தி, ஜெயம் ரவி, ஐஸ்வர்யா ராய், த்ரிஷா உள்ளிட்ட திரையுலகின் முன்னணி நட்சத்திரங்கள் வரலாற்றுக் கதாபாத்திரங்களாக நடித்துள்ளனர். படத்தின் டீசர் வெளியீட்டு விழா அண்மையில் பிரமாண்டமாக நடைபெற்றது.

வருகின்ற செப்டம்பர் 30-ம் தேதி உலகமெங்கும் பன்மொழிகளில் திரையரங்கங்களில் வெளியாக உள்ளது. ஒட்டுமொத்த உலகத் தமிழர்களும் புதினமாகப் படித்து அனுபவித்த தங்கள் பெருவிருப்பமான 'பொன்னியின் செல்வன்' படமாக வரப்போவதை ஆவலுடன் எதிர்பார்த்துக் காத்திருக்கின்றனர்.

இந்தநிலையில், 'பொன்னியின் செல்வன்' திரைப்படத்தில் வரலாற்று உண்மைகள் மறைக்கப்பட்டிருப்பதாகக் இயக்குநர் மணிரத்னம் உள்ளிட்டோருக்கு வக்கீல் நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தங்களுக்கு திரையிட்டுக் காட்டாமல் படத்தை வெளியிட்டால் சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் எனவும், 'பொன்னியின் செல்வன்' படத்தில் வரலாறு மறைக்கப்பட்டுள்ளதா என்பது தங்களுக்குத் தெரிய வேண்டுமென வக்கீல் நோட்டீஸில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags

Next Story
ரயில் முன்பதிவில் மோசடி: பாதுகாப்பு படையினர் தீவிர விசாரணை!