ரஜினி வீட்டில் முதல்வர் மனைவி, சகோதரி, விஜய் அம்மா, ஓபிஎஸ், தமிழிசை! என்னங்க நடக்குது?

நடிகர் ரஜினிகாந்த் வீட்டில் தமிழக முதல்வர் மு க ஸ்டாலின் மனைவி துர்கா ஸ்டாலின், சகோதரி செல்வி, நடிகர் விஜய்யின் தாய் ஷோபா சந்திரசேகர், தமிழக முன்னாள் முதல்வர் ஓ பன்னீர் செல்வம், தமிழக பாஜக முன்னாள் தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் என அனைவரும் கூடியிருக்கிறார்கள். இதனை அறிந்த தமிழக மக்கள் வியந்து நிற்கிறார்கள். என்ன நடந்தது? எதற்காக கூடினார்கள் என்பதைத் தெரிந்து கொள்ள அனைவரும் ஆர்வமாக இருக்கிறார்கள்.
நவராத்திரியை முன்னிட்டு ஆண்டு தோறும் நடிகர் ரஜினிகாந்தின் மனைவி கொண்டாட்டங்களுக்கு ஏற்பாடு செய்வது வழக்கம் என்பது பலரும் அறிந்த செய்திதான். இந்த கொண்டாட்டங்களில் விவிஐபிகளையும் கலந்துகொள்ள ரஜினிகாந்த் தரப்பில் அழைப்பு விடுப்பார்கள். இந்த ஆண்டு மிகவும் சிறப்பாக திமுக, அதிமுக, பாஜக, விஜய் தரப்பு பிரபலங்களை அழைத்து அனைவரது பார்வையையும் தங்கள் பக்கம் திரும்பியிருக்கிறார் லதா ரஜினிகாந்த்.
இவர்களுடன் ஐஏஎஸ் அதிகாரி ராதாகிருஷ்ணன் உள்ளிட்ட சில பெரிய அதிகாரிகள், சினிமா பிரபலங்கள் குடும்பத்துடன் இந்த நிகழ்ச்சியில் பங்கேற்றனர்.
அம்பானிக்கே சவாலா என சிலர் கிண்டல் செய்து பதிவிட்டு வருகின்றனர். கடந்த மாதம் விநாயகர் சதுர்த்தியின்போது அம்பானி வீட்டில் மிகப்பெரி ய பூஜைக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. அதில் இந்தியா முழுக்க இருந்த செலிபிரிட்டிகள் கலந்துகொண்டார்கள். அந்த பூஜையில் தமிழ்நாட்டின் நயன்தாரா, அட்லீ குடும்பத்துடன் கலந்துகொண்டு சிறப்பித்தனர்.
இந்நிலையில் தமிழகமே இன்று ரஜினி வீட்டை நோக்கி தங்களது பார்வையைத் திருப்பும் வகையில், முதல்வரின் மனைவி, சகோதரி, விஜய்யின் அம்மா, பாஜகவின் தமிழிசை, அதிமுகவின் ஓபிஎஸ் என வித்தியாசமான எண்ணங்கள் கொண்ட அனைவரையும் ஒரே வீட்டில் கொண்டு வந்து சிறப்பாக நவராத்ரி விழாவை கொண்டாடியிருக்கிறார்கள்.
ஏற்கனவே ஓபிஎஸ், ரஜினிகாந்தின் ஆதரவு பெற்று அரசியலில் புதிய சக்தியாக வருவார் என அவரது ரசிகர்கள் தரப்பிலிருந்து சில யூகங்களை வெளியிட்டு பரபரப்பாக பேச வைத்தார்கள். மேலும் முதல்வர் மு க ஸ்டாலின், முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமியை எதிர்க்கும் நோக்கில் ஓ பன்னீர்செல்வத்துடன் நெருங்கி வருவதாக பேசப்பட்டது. இது எல்லாமே யூகங்கள் அடிப்படையிலானது என்றாலும், ரஜினிகாந்த் - விஜய் ரசிகர்கள் மோதல் தமிழகம் தாண்டி இந்திய அளவில் மிகப் பெரிய விசயமாக பேசப்பட்டு வருகிறது.
விஜய் தற்போது நடித்து வெளியாகியுள்ள லியோ திரைப்படம் மிகப் பெரிய வெற்றியைப் பெற்றுள்ளது. இந்த வெற்றி ரஜினிகாந்தின் ஜெயிலர் படத்தைவிட பெரிய வசூலைக் கொண்டு வந்துவிடும் என அச்சத்தில் ரஜினிகாந்த் ரசிகர்கள் இருப்பது சமூக வலைத்தள மோதல்கள் மூலம் தெரியவருகிறது. இதனால் விஜய்க்கு தெரிந்துதான் அவரது அம்மா ரஜினி வீட்டுக்கு சென்றாரா அல்லது ரஜினிக்கு தெரிந்துதான் விஜய் அம்மா ஷோபாவை லதா அழைத்தாரா என்பது போன்ற பல விசயங்களை சமூக வலைத்தளங்களில் பேசுபொருளாகியுள்ளது.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
-
Menu