கொரோனா பாதிப்பு : ஐசியு-வில் பின்னணி பாடகி லதா மங்கேஷ்கர் அனுமதி
X
லதா மங்கேஷ்கர்
By - B.Gowri, Sub-Editor |11 Jan 2022 12:30 PM IST
பிரபல பின்னணிப்பாடகி லதா மங்கேஷ்கர், கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு, மும்பை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
பழம்பெரும் பின்னணி பாடகர் லதா மங்கேஷ்கருக்கு, கொரோனா தொற்றின் லேசான அறிகுறிகள் தென்பட்டன. இதையடுத்து, அவர் மும்பையில் உள்ள ப்ரேச் கேண்டி மருத்துவமனையில் ஐசியூ பிரிவில் அனுமதிக்கப்பட்டுளார். அவரது உடல் நிலை கவலைகொள்ளும்படி இல்லையென்றாலும் வயது முதிர்வின் காரணமாகவே, ஐசியு-வில் அனுமதித்துள்ளதாக குடும்பத்தினர் தெரிவித்தனர்.
தற்போது 92 வயதாகும் லதா மங்கேஷ்கர், 1929-ம் ஆண்டு, செப்டம்பர் 28-ம் தேதி, மத்திய பிரதேசத்தின் இந்தூரில் பிறந்தார். தந்தை பண்டிட் தீனாந்த் மங்கேஷ்கர் மராத்தி இசைக்கலைஞர், அம்மா குஜராத்தி. இந்தியாவின் மற்றொரு இனிய பாடகி ஆஹா போஸ்லே, லதாவின் சகோதரி தான்.
ஹிந்தி மொழியில் ஆயிரக்கணக்கான பாடல்களை பாடியுள்ள லதா மங்கேஷர், தமிழ் உள்பட பிற மொழிகளிலும் எண்ணற்ற இனிய பாடல்களை பாடி இருக்கிறார். 1988-ல், இளையராஜா இசையில் கமல் ஹாசன் நடிப்பில் வெளியான, 'சத்யா' படத்தில் இடம்பெற்றிருக்கும் 'வளையோசை' பாடலை, பின்னணி பாடகர் எஸ்.பி.பாலசுப்பிரமணியத்துடன் இணைந்து பாடினார்.
மூன்று முறை தேசிய விருது, தாதா சாகேப் பால்கே விருது, பாரத் ரத்னா விருது உள்ளிட்ட பல விருதுகளை வென்று லதா மங்கேஷ்கர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளது, இசை ரசிகர்களுக்கு கவலையை ஏற்படுத்தி இருக்கிறது.
Next Story
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu