/* */

இந்திக்குப் போகும் லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா

ஜவான் படத்தின் மூலம் நடிகை நயன்தாரா இந்திப் படத்திலும் தடம் பதிக்கும் அறிவிப்பு, அவரது திருமண திளைப்பை அதிகமாக்கியுள்ளது

HIGHLIGHTS

இந்திக்குப் போகும் லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா
X

வித்தியாசமான போஸ்களில் லேடி சூப்பர் ஸ்டார் நடிகை நயன்தாரா

இளம் இயக்குநர் அட்லிக்கு, 'ஜவான்' படத்தின் மூலம் பாலிவுட் பாதை வகுத்து பளிச்சென்ற வரவேற்பை தந்திருக்கிறது. ஆம். ஏற்கெனவே, பாலிவுட்டில் ஷாருக்கானை நாயகனாகக் கொண்டு அட்லி இயக்கும் படத்திற்கான பேச்சு தொடங்கிய வேகத்திலேயே நின்று போனது.

ஆனால், அண்மையில் அப்படத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது. 'ஜவான்' என்று படத்தின் தலைப்பையும் அறிவித்துள்ளனர், படத்தயாரிப்பு தரப்பினர்.

இதுகுறித்து அட்லி தனது ட்வீட் பக்கத்தில், 'எமோஷனலாகவும் மகிழ்ச்சியாகவும் இருக்கிறது. உங்களைப் பார்த்து வளர்ந்த நான் இப்போது உங்களையே இயக்குகிறேன். இதை நான் கற்பனை செய்துகூட பார்க்கவில்லை.

ஷாருக்கான் சாரும் நானும் 'ஜவான்' படம் பற்றி அறிவிப்பதில் மகிழ்ச்சியாக உள்ளது. அடுத்த வருடம் 2023ல் ஜூன் 2ல் இந்தி, தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம் என ஐந்து மொழிகளில் பான் இந்தியா படமாக வெளியாக இருக்கிறது' என அறிவித்துள்ளார்.

இந்தப் படத்தின் மூலம் நடிகை நயன்தாரா இந்திப் படத்திலும் தடம் பதிக்கத் தொடங்குகிறார். மணக்கோலம் காணவிருக்கும் மகிழ்ச்சித் திளைப்பை மேலும், பலமடங்கு அதிகமாக்கியுள்ளது,நடிகை நயன்தாராவுக்கு இந்திப் படமான 'ஜவான்' பற்றிய அசத்தல்ம் அறிவிப்பு.

Updated On: 5 Jun 2022 2:53 PM GMT

Related News